Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

நக்கல், கிண்டல், தெனாவட்டு, அசால்ட்டு, நையாண்டி இதெல்லாம் கலந்த ஒரு லொள்ளுக்கு ஒரு உதாரணம்

தமிழ்ப்படம்

வடிவேலு சொல்லுவது போல், இது வரை தமிழ்ப்படங்களில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களையும், இயக்குநர்களையும், பாடலாசிரியர்களையும் ஒரு முட்டுச் சந்துக்குள்ள வுட்டு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கொஞ்சங்கூட இடைவெளி இல்லாமல் அடி வெளுத்திருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார்களுக்கும், தளபதிகளுக்கும் டேமேஜ் அதிகம்.

நம்ம வலையுலகின் பிரபல பதிவர்கள் ஒரு அப்பாவி வலைப்பதிவன் எக்குத்தப்பாக மாட்டும் போது பின்னூட்டத்தில் சும்மா கும்மு கும்முனு கும்முவார்களே அது போல கும்மியெடுத்திருக்கிறார்கள்.

சமயங்களில் தணிக்கைத் துறையினரைக் கூட.  விளம்பரப் படங்களைக் கூட விட்டு வைக்கவில்லை.

உன்னைப் போல் ஒருவன் /ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி வலைப்பதிவர்கள் விமர்சித்தது போல இப்படத்தை விமர்சிக்க முடியாது.  ஏனென்றால் படமே நாலைந்து குசும்பன்கள் சேர்ந்து தமிழ்ப்படங்களை விமர்சித்தால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கிறது.

அமெச்சூர்த்தனமான விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியின் நீட்சி இப்படம்.  முதல் பாதி முழுவதும் இடைவிடாத நகைச்சுவை.  பிற்பாதியில் கொஞ்சம் குறைவு.  ஆனால், படம் நிறைவு.

நீண்ட நாட்களுக்குப் பின், பட இடைவேளையின் போதே அனைவரின் மகிழ்வான முகங்களைக் காண முடிந்தது.

திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் திரும்பிச் செல்லும் கூட்டமே அதிகமாயிருந்தது.  இரு சக்கர வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் நண்பர் செந்தில், அவர் வண்டியை Ticket Counterக்குள் நிறுத்தியிருந்தார்.

எங்கள் எல்லோருக்கும் (12 பேர்) நுழைவுச்சீட்டு எடுத்துக் கொடுத்த முரளிக்கு சீட்டு இல்லை.

நண்பர்களுடன் பார்த்ததில் நல்ல படம்.  நீங்கள் அடுத்து படம் ஏதாவது பார்க்க வேண்டுமென நினைத்தால் முதலில் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாம்.  மேலும், இது போன்ற படங்கள் அடிக்கடி வந்தாலே, மற்றவர்கள் எங்கே நம்மைக் கலாய்ப்பார்களோ என பயந்து நல்ல படங்களைக் கொடுப்பார்கள்.

நம் வலையுலகத்தைச் சேர்ந்த கே. சந்துரு என்ற மின்னல் ப்ரியன் இப்படத்தின் வசனங்களும், பாடல்களும், எழுதியிருக்கிறார்.  துணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

நல்ல நகைச்சுவைப் படத்தைக் கொடுத்ததற்கு, சந்துருவுக்கும் படக்குழுவுக்கும், ‘அ’ஞ்சா நெஞ்சத் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்!!!!!

பழைய பதிவுகள் »