திருநெல்வேலி வட்டார மக்கள், அவர்களுக்கு மட்டும் புரியக்கூடிய நிறைய சொற்களை பேச்சு வழக்கில் உபயோகப்படுத்துவார்கள்.
நிறைய சொற்களை அந்த வட்டார எழுத்தாளர்கள் (வண்ணநிலவன், வண்ணதாசன் மற்றும் கி.ரா கூட) தங்களின் கதைகளில் கூட இயல்பாக பயன்படுத்தியிருப்பார்கள்.
என் தாயார், திருநெல்வேலி மாவட்டம் என்பதால் என் வீட்டிலும் நிறைய புழக்கத்தில் இருக்கும்.
சில சொற்கள் மறந்தும், மறைந்தும் போய்விட்டன.
என் நினைவில் இருக்கும் சில மட்டும் இங்கே.
மச்சு வீடு – இருட்டடைந்த சிறு அறை, பணம், நகை, போன்ற விலை உயர்ந்த [...]
மே, 2007 க்கான தொகுப்பு
வாங்க ஆங்ஞான்!
Posted in அனுபவம் on மே 29, 2007 | 7 மறுமொழிகள் »
சீனிக்கண்ணன்
Posted in அனுபவம் on மே 29, 2007 | 3 மறுமொழிகள் »
திருப்பூர்!
வேலை தேடி வரும் அனைவருக்கும் வேலைவாய்ப்பை அள்ளி அள்ளி வழங்கும் ஒரு அட்சயப்பாத்திரம்.
அப்படி வருபவர்களுக்கு ஒரு தலையாய பிரச்சனை என்னவென்றால் சாப்பாடு தான். சுவையான உணவுக்கு அதிக பணம் ஆகும். அதற்கு பொருளாதார வசதி இடம் கொடுக்காது.
வேறு என்ன வழி என்றால் சமைத்து சாப்பிடுவது!
என் அறை நண்பன் புதிதாக ஊரிலிருந்து வந்தவன். அவனுக்கு வேலை முடிந்து விரைவாக அறைக்கு திரும்புபவன். எனவே நண்பனிடம் “சாயங்காலம் சீக்கிரம் வந்துட்டா “சீனி” மட்டும் வாங்கி [...]
முதல் செங்கல் எடுக்கிறேன்!
Posted in எண்ணம் on மே 25, 2007 | 17 மறுமொழிகள் »
வலைப்பக்கங்களின் நெடுநாள் வாசகன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள்!
நல்ல நல்ல வலைப்பதிவுகளைப் படித்து, ஈர்க்கப்பட்டு ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கியிருக்கிறேன்.
வலைப்பதிவுகளின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறதோ என்பது என் எண்ணம்.
இவன் யார் நம்மைச் சொல்வதற்கு என நினைக்க வேண்டாம். நினைத்தாலும் மகிழ்ச்சி. நினைக்காமல் இருந்தால் சந்தோசம்.
சமீபத்திய புதிய வலைப்பதிவுகள் ஏதோ ஒரு கட்சி, மதம் சார்ந்ததாக நிறைய வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில பின்னூட்டங்கள் (வலைப்பதிவர்கள் பெயரிலோ, பெயர் மறைக்கப்பட்டோ) ஒருவரைப் பற்றி தனிப்பட்ட [...]
மலையாளியின் பார்வையில் தமிழன்….
Posted in படித்தது on மே 21, 2007 | 23 மறுமொழிகள் »
பாலா,
இது கடிதமோ, கதையோ, கட்டுரையோ எதுவென எனக்கே தெரியவில்லை.
பிறப்பால் தமிழனல்ல. வீட்டிலும் யாரும் தமிழ் பேசவில்லை. பந்துக்களுக்கும் தமிழ் சுத்தமாய் தெரியாது. திருவனந்தபுரத்திலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில், தமிழ் நாட்டின் எல்லையில் ஒரு சின்ன குக்கிராமத்தில் நாயர் குடும்பத்தில் பிறப்பு. படித்தது தமிழ் தான். மேலே படிக்கவும், படிப்பு முடிந்தபின் வாழ்க்கை, கூடவே துணையைத் தேடவுமாய் அனந்தை நகரம் என்னை ஆட்கொண்டு விட்டது. பின்பு மலையாளம் என்னை முழுமையாக மாற்றியது.
இன்று என் மனைவிக்கோ, மகளுக்கோ [...]



