பிரம்மராயர் கல்வி மற்றும் அனைத்து கலைகளும் கற்பிக்கும் ஒரு உபாத்தியாயர். குடுமியும், வேட்டியுமாக எந்நேரமும் காட்சியளிப்பார். மரத்தடியில் எப்போதும் இருக்கையில் அமர்ந்து மாணாக்கர்களுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். இல்லையேல், தூங்கிக் கொண்டிருப்பார்.
பிரம்மராயர் கனிவும், கண்டிப்புமாகவே இருப்பார், தன் கேள்விகளுக்கு பதில் கூறும் மாணாக்கனுக்கு, உடனே தேனும், தினைமாவும் கலந்த ஒரு உருண்டை கொடுப்பார். பதில் தெரியாவிட்டால் எழுத்தாணியினால் ஒரு சின்ன குத்து கிடைக்கும்.
இடுப்பில் துண்டு மாதிரியான ஒன்று மட்டும் தான் மாணாக்கர்களின் [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in நட்சத்திர இடுகை, குறிச்சொல் இடப்பட்டது ஆசிரியர், குரு, ஜேப்பியார் on ஆகஸ்ட் 29, 2007 | 12 மறுமொழிகள் »
ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சமயத்தில் ஒருவர் குருவாக இருந்திருப்பார், கிடைத்திருப்பார் அல்லது நினைத்திருப்பீர்கள். நான் சொல்வது ஆசிரியர் அல்ல. உங்கள் குரு ஒரு கடவுளாகவோ, மத குருவாகவோ, தலைவராகவோ அல்லது கடவுள் மறுப்பராகவோ இருந்திருக்கக் கூடும்.
எனக்கும் ஒரு குரு கிடைத்தார். சிறு வயதில் நான் படித்த மாதா, பிதா, குரு என்ற வார்த்தையின் அர்த்தத்தை உணரலானேன்.
கடவுள் நம்பிக்கையற்றவர். என்னிடம் ஒரு நண்பனைப் போல் பழகும் தன்மையுடையவர். ஒருவரைப் பார்த்து, பேசிய சிறிது நேரத்திலேயே, அவருடைய அறிவுத் [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in நட்சத்திர இடுகை, குறிச்சொல் இடப்பட்டது ஓலைக்கூடை, கீரை, சுக்கு, பால்காரர், போலி on ஆகஸ்ட் 28, 2007 | 18 மறுமொழிகள் »
காலச்சுழலில் எத்தனை, எத்தனை கதாபாத்திரங்கள் இல்லையில்லை, நம்மோடு ஒன்றியிருந்த உறவுகள் தொலைந்து போய் விட்டார்கள்.
காலை விடிந்தும், விடியாமலும், மணியடித்து நம்மை எழுப்பும் குழாயுடன் கூடிய தகரக்கேனில் பால் கொண்டு வரும் சொசைட்டி பால்காரர்,
அழகழகான பனையோலை அருந்திகள் உடனுக்குடன் செய்து, பதினியை அளந்து ஊற்றிக்கொடுக்கும் பதநீர்க்காரர்.
எம்மா…. கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரேய்ய்ய்……… என்று ராகமிசைத்து ஈரப்பழந்துணியில் கீரை கொண்டுவரும் கீரைப்பாட்டி,
ஓலைக்கூடைக்குள் ஈயச்சட்டியில் நெய் வைத்து, நீண்ட கைப்பிடியுடனான கூடிய அளவைக்கருவிகளை கூடையில் சொருகி [...]
முழு பதிவையும் வாசிக்க »
தமிழ் மணத்துக்கு எப்பவும் என்னோட இடுகைய கொடுத்துட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு நம்ம பேர் வந்திருக்கான்னு ஆர்வக்கோளாறுல திரும்ப வந்து பார்ப்பேன். பார்த்துக்கிட்டே இருக்க, இருக்க, நம்ம இடுகை, கீழேயே போய்ட்டே இருக்கும்ங்க. நம்ம நட்சத்திரம் இருக்கார் பாருங்க, அவர மட்டும் கீழேயே எறக்க மாட்டாங்க.அப்புறம் என்ன, அய்யனாரின் இந்தப் படம் மாதிரி அண்ணாந்து நட்சத்திரத்தப் பாத்துட்டே இருப்பேன்.
இப்படிப் பாத்துட்டே இருந்த என்ன, அடுத்த ஏழு பகலைக்கும், ஏழு சாமத்துக்கும் மங்காத நட்சத்திரமா இருக்கச்சொல்லீருக்காங்க. பெரிய பெரிய [...]
முழு பதிவையும் வாசிக்க »