பிரம்மராயர் கல்வி மற்றும் அனைத்து கலைகளும் கற்பிக்கும் ஒரு உபாத்தியாயர். குடுமியும், வேட்டியுமாக எந்நேரமும் காட்சியளிப்பார். மரத்தடியில் எப்போதும் இருக்கையில் அமர்ந்து மாணாக்கர்களுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். இல்லையேல், தூங்கிக் கொண்டிருப்பார்.
பிரம்மராயர் கனிவும், கண்டிப்புமாகவே இருப்பார், தன் கேள்விகளுக்கு பதில் கூறும் மாணாக்கனுக்கு, உடனே தேனும், தினைமாவும் கலந்த ஒரு உருண்டை கொடுப்பார். பதில் தெரியாவிட்டால் எழுத்தாணியினால் ஒரு சின்ன குத்து கிடைக்கும்.
இடுப்பில் துண்டு மாதிரியான ஒன்று மட்டும் தான் மாணாக்கர்களின் [...]



