தலையணைக்கும் நமக்கும் எப்போதும் ஒரு நெருக்கமான உறவு இருந்துட்டே இருக்கும்.
எப்படின்னு கேக்கிறீங்களா?
அம்மா மடியில் படுத்திருப்பதைப் போல அமைதியை கொடுக்கும்.
மனைவியின் தலை துவட்டல் போல அன்பு காட்டும்.
நண்பனின் தோளில் சாய்ந்து அழுவது போல் ஆறுதல் அளிக்கும்.
சில சமயம் வெளியூரில் தங்கும் போது வேறு தலகாணி வைத்து படுத்தா, தூக்கம் வராது.
சின்ன வயசுல அடிக்கடி தலகாணிக்காக என் தம்பிகளோட பெரிய சண்டையே நடக்கும். புது உறைக்காக நல்ல தலாணி உறையை வேணுமின்னே கிழிச்சதும் உண்டு.
[...]
ஜனவரி, 2008 க்கான தொகுப்பு
தலையணை வாசம்
Posted in அனுபவம், குறிச்சொல் இடப்பட்டது உறை, தலகாணி, தலையணை, வாசம் on ஜனவரி 23, 2008 | 16 மறுமொழிகள் »
மரணக்குறிப்புகள் – மனப் பேழையிலிருந்து..
Posted in அனுபவம், குறிச்சொல் இடப்பட்டது குறிப்பு, மனம், மரணம் on ஜனவரி 12, 2008 | 8 மறுமொழிகள் »
ஏதோ நினைவில் மூழ்கி விட்டு திரும்பி பார்த்த போது, கண்ணா ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். ச்சே! என்ன இதே நினைப்பாகவே இருக்கிறது.
மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? என்ற எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தது எப்போது என சரியாகத் தெரியவில்லை. தெருச்சிறுவன் தேர்வுத் தோல்வியினால் நீரில் தற்கொலை செய்த போதா? ஆச்சி எங்கள் வீட்டில் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிர் விட்டபோதா? என தெரியவில்லை.
ஒவ்வொரு மரணங்களும் ஏதோவொரு மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது. மாற்றத்திற்கு பின் [...]



