மரணக்குறிப்புகள் - மனப் பேழையிலிருந்து..
ஜனவரி 12, 2008 ஆல் வெயிலான்
ஏதோ நினைவில் மூழ்கி விட்டு திரும்பி பார்த்த போது, கண்ணா ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். ச்சே! என்ன இதே நினைப்பாகவே இருக்கிறது.
மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? என்ற எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தது எப்போது என சரியாகத் தெரியவில்லை. தெருச்சிறுவன் தேர்வுத் தோல்வியினால் நீரில் தற்கொலை செய்த போதா? ஆச்சி எங்கள் வீட்டில் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிர் விட்டபோதா? என தெரியவில்லை.
ஒவ்வொரு மரணங்களும் ஏதோவொரு மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது. மாற்றத்திற்கு பின் மரணமா? மரணத்திற்குப் பின் மாற்றமா?
ஓரிரு மாதங்களுக்கு முன் என் நண்பனின் மரணத்திற்கு சென்றிருந்த போது தான், என் மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என எண்ணலானேன். அந்த மரணத்திற்கு வந்த மற்ற நண்பர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு என் மரணத்திற்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை இவ்வளவு தான் என மதிப்பிட முடிந்தது.
மரணத்தின் பின் எத்தனை பேர் என்னை வசைபாடக்கூடும், வருத்தப்படக்கூடும் என்ற எணணமும் கூடவே வந்து போனது. போனால் போகட்டும் என்பவர்கள் யார்? அடப்பாவமே என்பவர்கள் யார்? முகம் பார்க்க நினைப்பவர்கள் யார்? தெரியவில்லை.
உறவும், நட்பும் என் மரணத்தைக் கொண்டாடுமா? கூத்தாடுமா? தினசரிகளில் என் படம் வெளியிட்டு தம்பட்டம் அடிக்குமா?
என் மரணம் எங்கு நடக்கும்? இல்லை பணியின் போதா? பயணத்தின் போதா? மனையிலா? மருத்துவமனையிலா? விபத்திலா? வீதியிலா? என்பது தெரியவில்லை.
எப்போது? இளமையிலா? முதுமையிலா? அல்லது வறுமையிலா? எனவும் தெரியவில்லை.
இந்த நினைப்புகளெல்லாம் ஒரு வகையில் சிறுபிள்ளைத்தனமாகத் தான் தெரிகிறது.
மரணம் எப்போது நிகழுமென்று தெரிந்தவர்கள் உண்டா என்ன?






வெயிலான் ஐயா, என்னாச்சு?
எதுக்கு இந்த தேவையில்லாத வேலை.
மரணம் பற்றி நினைத்தால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. நதியில் விழுந்த இலை போலதான்.
‘எதுவரை போகுமோ அதுவரை போகலாம்’
ஆடுமாடு
நெனப்பு தான அண்ணாச்சி! அத தடுக்க முடியுமா என்ன?
நம்ம கடனாநதி மாதிரி ஓடீட்டே தான இருக்கு ஆடுமாடு அண்ணாச்சி!!!
வணக்கம் வெயிலான்
என்னைப் பொருத்தவரையில் இந்த நெனப்பு வேண்டும் சும்மா கடனேனு ஓடுனா மட்டும் போதுமா மரணத்த பத்தியும், நம்மை பத்தியும், நாம் செய்த, செய்துகொண்டு இருக்கிற விஷயங்களை பிரித்துப்போட்டு அலசி ஆராயும் நினைப்பு வேண்டும்
நீங்க எழுதிய பதிவு நல்லது எனக்கும் என்னை அக ஆய்வு செய்ய ஒரு பொறி கிடைக்கிறது
இராஜராஜன்
வணக்கம் இராஜராஜன்,
அலசி, ஆராய வேண்டும் என்பதும் ஒரு நல்ல ஆலோசனை தான்.
நன்றி!
எல்லோருக்கும் அந்த நெனப்பு இருந்துட்டா தப்புசெய்வானா?? எப்பயுமே சாவ எதிர்பாத்துகிட்டு இருக்ககூடாது.. வந்துருச்சுன்னா நீங்களோ, நானும் என்ன செய்ய முடியும்.. ஆடும்வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே தான் நம்ம கதையெல்லாம்..
நல்லா தானே இருந்திங்க…எதும் ‘கெட்ட’ கனவா ?

/// எதும் ‘கெட்ட’ கனவா ? ///
ஆமா. மலேசியா மாரியாத்தா கோவில் பிரசாதம் அனுப்புங்க.