Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூன், 2008 க்கான தொகுப்பு

வலைப்பதிவர் சந்திப்புகள் கடற்கரையில், சிறிய மற்றும் பெரிய அறைகளில் நடந்திருக்கிறது.  தமிழ் வலைப்பதிவர்  வரலாற்றில் முதல் முறையாக பொள்ளாச்சியிலிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள டாப் சிலிப் எனப்படும் ஆனைமலைக் காட்டில் நடந்தது.

Nandhu f/o Nila
சில மாதங்களாக வலையுலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் சகலகலாவல்லவர் லதானந்த் மற்றும் நான் எனது நண்பர்கள் நந்த கோபால் மற்றும் சுரேஷ் ஆகியோர் பதிவர் நந்து f/o நிலா மற்றும் அவரது சகோதரர் ரவி வருகைக்காக அடர்ந்த மூங்கில் மரங்கள் சூழ்ந்த, யானை(யோ)களோ, காட்டெருமையோ, [...]

முழு பதிவையும் வாசிக்க »

திருப்பூரிலிருந்து எப்போது ஊருக்கு போனாலும், எதிர்படும், பார்க்கும், பேசும் அனைவரும் நலன் விசாரித்தலும், என் உடல் நீள, அகலங்கள் பற்றி கருத்து கந்தசாமியாகி கருத்து சொல்லலும், எப்போதோ, தினசரியில் படித்த ஒரு திருப்பூர் பற்றிய மிகப்பழைய செய்தி பற்றி விசாரித்தலுக்கு பிறகு, கேட்க ஆரம்பிக்கும் ஒரே விசயம் டி சர்ட், பனியன், ஜட்டி தான் (அடப்பாவிகளா! இதுக்கு தான் இவ்வளவு அக்கறையா விசாரிச்சிங்களாடா?).

ஏதோ, திருப்பூரில் சாலையில் இருபுறமும் இறைந்து கிடக்கும். இல்லையென்றால், கிலோவுக்கு பத்து டி சர்ட் [...]

முழு பதிவையும் வாசிக்க »

நரசிம்மன் வாத்தியார் இருக்கார்ல,
ம்…….. சொல்லுங்கப்பா!
உனக்கு கூட தெரியும் அவர. அதான்டா அவர் பையனுக்கு பனியன்லாம் வாங்கிக் குடுத்தேல்ல…
ஆமா! சொல்லுங்க.
அவர் சொந்தக்காரங்க தான்பா, காலையில திருப்பூர் வருவாங்கபா…. பஸ் ஸ்டாண்ட்லருந்து உன்னை கூப்பிடுவாங்க. நீ போய் அவங்க கூட இருந்து என்ன உதவி வேணுமோ செஞ்சு கொடு.
ம்…….. சரிப்பா!
அப்பா இதுவரை யாருக்கும் இது போல சொன்னதில்லை.
காலை ஏழு மணி என்பது பாதி சாமம். தூக்கம் அறுத்தபடி ஒரு அலைபேசி அழைப்பு.
தம்பி…. அப்பா சொன்னாங்கள்ள….
ஆமா! சொன்னாங்க!  சொல்லுங்க!
குத்தாலத்து பக்கத்துல [...]

முழு பதிவையும் வாசிக்க »