திருப்பூரிலிருந்து எப்போது ஊருக்கு போனாலும், எதிர்படும், பார்க்கும், பேசும் அனைவரும் நலன் விசாரித்தலும், என் உடல் நீள, அகலங்கள் பற்றி கருத்து கந்தசாமியாகி கருத்து சொல்லலும், எப்போதோ, தினசரியில் படித்த ஒரு திருப்பூர் பற்றிய மிகப்பழைய செய்தி பற்றி விசாரித்தலுக்கு பிறகு, கேட்க ஆரம்பிக்கும் ஒரே விசயம் டி சர்ட், பனியன், ஜட்டி தான் (அடப்பாவிகளா! இதுக்கு தான் இவ்வளவு அக்கறையா விசாரிச்சிங்களாடா?).
ஏதோ, திருப்பூரில் சாலையில் இருபுறமும் இறைந்து கிடக்கும். இல்லையென்றால், கிலோவுக்கு பத்து டி சர்ட் [...]



