நான் வேண்டாம், வேண்டாம் என்று சொன்னதையும் கேட்காமல், அடங்கியிராமல் ஒருத்தன் நேற்றும், அதற்கு முன் தினமும் குளித்ததை பற்றி மொக்கை போடலாம். ஆனால், அவன் பெயரைப் போட முடியாது. ‘இதை அவனையே அழைத்துச் சொல்லியிருக்கலாமே?’ என்று கும்மத் தயாராய் இருப்பார்கள். ஆகவே, இதை அப்புறம் பார்த்துக் கொள்லலாம்.
‘குளித்தால் எனக்கு விரைவில் மரணம் நேரலாம்’ என்று ‘தண்ணி’லை விளக்கம் அளித்த ஒரு இனிய நண்பர் ‘டேய்.. நான் குளிச்சு ஜன்னி வந்து செத்தா எல்லார்க்கும் மைசூர்பா குடுடா’ என்றதை ஒரு மொக்கைப்பதிவாக எழுதலாம். பணம் வாங்கவில்லை அவரிடம். அதற்குப் பதிலாக ‘மைசூர்பா எப்படி செய்வது?’ என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்புதல் உசிதம். அதுவும் முடியவில்லை. காரணம், புரியாமல் செய்பவர்களுக்கு புத்தி சொல்லலாம். எல்லாம் செய்யத் தெரிந்தவர்கள் தவறு செய்கையில் வாயில் போட்ட மைசூர்பா கடிக்க முடியாமலும், முழுங்க முடியாமலும், இருப்பதை வேடிக்கைப் பார்த்து அழும் குணம் மட்டுமே நமக்கு வாய்த்திருக்கிறது.
பேன் தொல்லை காரணமாக சரிவரத் தூங்க முடிவதில்லை. படிக்க முடிவதில்லை. எழுத முடிவதில்லை. இப்படியே இருந்தால் என்ன செய்வது என்று சிந்தித்து சிந்தித்து முடி உதிரத் தொடங்கியாயிற்று. ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒன்றுக்கு காதலர்களாகத்தான் எல்லாருமே இருக்கிறோம். அட.. இதைப் பற்றி ஒரு மொக்கை போடலாம். ஆனால் அதற்கு கொஞ்சம் மஞ்சப்பையிலிருந்து விவரங்கள் சேகரிக்க வேண்டும், மஞ்சள் பை பரண் மேல் உள்ளது. அரை மணிநேரத்தில் ஆகக்கூடிய காரியமில்லை அது. ஆகவே அதையும் தள்ளி வைக்கலாம்.
பெங்களூர் பாவாவுக்கு வியாழக்கிழமை திருமணம். அவரை கன்னாபின்னாவென்று திட்டி ஒரு உருப்படியான ‘பதிவு’ (இப்படி நானே சொன்னாத்தான் உண்டு) போடலாம். ஆனால், அதிலும் மொக்கை கொஞ்சம் இருக்கவேண்டியது அவசியம். இப்போதுள்ள வீட்டில் அது சாத்தியமில்லை. ஆகவே, அதையும் தள்ளி வைக்கலாம்.
யோவ்! க்ருஷ்ணா! இப்படி எல்லாத்தையும் தள்ளி, தள்ளி வைச்சு என் வீட்டுக்கு வந்திருச்சுய்யா எல்லாம்.
ஆளாளுக்கு எதிர்மொக்கை போட ஆரம்பித்துவிட்டார்கள். நான் இந்த மொக்கை போடறதுக்கு முன்னாடியே பரிசல்காரன் ஒரு மொக்கை போட்டிருக்கிறார். நாமும் ஒரு நல்ல மொக்கைப்பதிவை எடுத்து எடிட் பண்ணி கடகடவென்று எதிர்மொக்கைப்பதிவு போடலாம். ஆனால் குமிழ்மணத்தைத் திறந்து பார்த்தால் உடனே எதிர்மொக்கை போடற மாதிரி ஒன்றிரண்டுதான் தேறியது. அதில் ஒன்று என் பதிவுக்கு நக்கல் நாயகன் ரித்தீஷ் எழுதிய எதிர் மொக்கைப்பதிவு. உடனே அதற்கு நானும் போட வேண்டாம்? இன்னும் ஒரு நாள் போகட்டும் என்று விட்டு விட்டேன்! (அப்ப தான் எல்லாரும் மறந்திருவாங்க. ஆனால் சொல்ல முடியாது, இன்றைக்கே நேரம் கிடைத்தால் சோப்பு போட்டு அழுக்கு துணியெல்லாம் கும்முவேன்!).
நாலைந்து குடங்கள் இருக்கிறது. அதில் தண்ணீர் எடுத்து வலைமக்கள் பார்வைக்கு வைக்கலாம். ஆனால் நான் இதுவரை எடுத்தது இல்லை. அதனால் இப்போதைக்கு அது முடியாது.
நான்
என்ன
செய்ய
இப்ப?






ஒண்ணும் வேண்டாம்…
கார்க்கி ரிசர்வ் செஞ்சிருந்தாரு.. நீங்க முந்திகிட்டீங்க!
சபாஷ்!
இந்தவாரம் எல்லாரும்க்கும் நான்தான் சிக்கினேன்போல!!
//பேன் தொல்லை காரணமாக சரிவரத் தூங்க முடிவதில்லை. படிக்க முடிவதில்லை. எழுத முடிவதில்லை. இப்படியே இருந்தால் என்ன செய்வது என்று சிந்தித்து சிந்தித்து முடி உதிரத் தொடங்கியாயிற்று. ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒன்றுக்கு காதலர்களாகத்தான் எல்லாருமே இருக்கிறோம். அட.. இதைப் பற்றி ஒரு மொக்கை போடலாம். ஆனால் அதற்கு கொஞ்சம் மஞ்சப்பையிலிருந்து விவரங்கள் சேகரிக்க வேண்டும், மஞ்சள் பை பரண் மேல் உள்ளது. அரை மணிநேரத்தில் ஆகக்கூடிய காரியமில்லை அது. ஆகவே அதையும் தள்ளி வைக்கலாம்.//
இது சூப்பரப்பூ!
// ஒண்ணும் வேண்டாம்… //
என்ன இப்படி சொல்லிட்டீங்க அணிமா….
// கார்க்கி ரிசர்வ் செஞ்சிருந்தாரு.. நீங்க முந்திகிட்டீங்க! //
நாங்க டவுண் பஸ்ல டர்க்கி டவல் போட்டு ரிசர்வ் செஞ்சு வச்சதயே தூக்கி தூரப்போட்டுட்டு உக்கார்றவங்க.
ம்ஹீம்! கார்க்கி எம்மாத்திரம்!
டர்க்கி – கார்க்கி எப்புடி
// பரிசல்காரன்
இந்த வாரம் எல்லாருக்கும் நான்தான் சிக்கினேன் போல!! //
இப்போ நான் என்ன செய்ய? குப்புறப் படுத்துத் தூங்கலாமே? மலயாளப் பதிவெல்லாம் எழுதீட்டு BP அதிகமாயிருக்கும்..
எங்க நம்ம கடைபக்கமெல்லாம் வர டைம் இல்ல போல… ரொம்ப பதிவுக போட்டாச்சு..
இந்த வாரம் பரிசலுக்கு நேரம் சரியில்லை போல.
//அதற்குப் பதிலாக ‘மைசூர்பா எப்படி செய்வது?’ என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்புதல் உசிதம்.//
யாருக்கு? கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணனுக்கா?
வெயிலான் உங்களுக்குள்ள இப்படி ஒருத்தர் ஒளிஞ்சுட்டு இருக்காரா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சூப்பர் வெயிலான்…. கலக்குங்க.. இப்பெல்லாம் நாம பதிவு போட யோசிக்கவே வேண்டியதில்ல. எதாவது ஒரு சூடான இடுகையை காப்பி பண்ணி கண்டம் (நல்லா படிங்க காண்டம் இல்ல) பண்ணா போதும்..
)))
இப்ப இதுதா இங்க ட்ரென்டா???
)))
கலக்கல்
நன்றி கிரி, வெண்பூ, சுபாஷ்