நண்பர் கடுகாருக்கு,
‘மலையாளத்தான்’ என நான் தலைப்பிட்டு பதிவிட்ட கருத்துக்கள் உங்களுடையது தான் என எனக்கு தெரியாது. நான் என் பதிவில் குறிப்பிட்டிருப்பது போல தென்பாண்டியன் என்ற அனானி தூயா பதிவுக்கு அனுப்பிய பின்னூட்டத்தில் இருந்தது தான். இது தான் உண்மை. உங்களுடைய பதிவு என்று தெரிந்திருந்தால் நான் பதிவிட்டிருக்க மாட்டேன்.
என்னைப் பற்றிய அறிமுகப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் நான்கைந்து வரிகளுக்கு எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி அனுமதி பெற்றிருக்கிறேன். பெரிய எழுத்தாளர் தானே? நம்முடைய பதிவை எப்படி பார்க்கப் போகிறார்? அல்லது பார்த்தால் என்னை என்ன செய்து விட முடியும் என்ற மனப்போக்கு எனக்கில்லை.
தென்பாண்டியனின் பின்னூட்டத்தின் திரை படம் (Screen Shot) என்னிடம் இல்லை. சகோதரி தூயாவும், அந்த பின்னூட்டத்தை நீக்கி விட்டார்கள். என்ன செய்வது? இது போல ஒரு பின்னூட்டம் வந்தது என்று தூயாவோ, நான் தான் தென்பாண்டியன் என்ற பெயரில் பின்னூட்டமிட்டேன் என சம்பந்தப்பட்டவரோ சொல்ல வேண்டும். இதை தவிர வேறு வழியில்லை.
நானே யார் எழுதியது என்று தெரியவில்லை என்று பதிவில் வெளிப்படையாக குறிப்பிட்டிருக்கும் போது, உங்களின் பின்னூட்டததை மட்டுறுத்தும் எண்ணம் எனக்கில்லை. நண்பர்கள் சொல்லி, உங்கள் பதிவை படித்த பின் தான் நீங்கள் பின்னூட்டம் இட்டிருப்பதே எனக்கு தெரியவந்தது. பின் என் பின்னூட்டப் பெட்டியை தலைகீழாக புரட்டி பார்த்தும் ஒன்றும் இல்லை. நீங்கள் போட்ட பின்னூட்டத்தில் வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டு, வேர்ட் பிரசின் பூச்சிப் பெட்டியில் இருந்திருக்கிறது. பின்னூட்டம் எனது மின்னஞ்சலுக்கும் வரும். அங்கும் வைரஸ் பெட்டியில் இருந்தது. முதலில் அதற்கு என்ன காரணம், என கண்டறிந்து சரி செய்யுங்கள்.
பின் இன்னொரு விசயம். என்னுடைய பதிவுகளையும் நண்பர்கள் அவர்கள் தளத்தில் என் அனுமதியில்லாமல் பதிப்பித்திருக்கிறார்கள்.
என் பதிவு - http://veyilaan.wordpress.com/2008/06/27/topslip/
http://rammalar.blogspot.com/2008/07/blog-post_05.html - மறு பதிவு
என் பதிவு - http://veyilaan.wordpress.com/2008/06/19/tirupur_expectation/
http://saravanaprakash1.blogspot.com/2008/08/blog-post_06.html - மறு பதிவு
இவ்வளவிற்கு பிறகு அந்த பதிவையே எடுத்து விடலாம் என நினைத்தேன். ஆனால் பின்னூட்டமிட்ட நண்பர்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, பதிவினுள்ளே இருப்பதை எடுத்து விட்டு, உங்கள் பதிவிற்கான சுட்டி மட்டும் கொடுத்துள்ளேன். இனி மலையாளத்தான் – மலைநாட்டு மச்சானாகவே இருக்கட்டும்.
எது எப்படியோ? இது எனக்கு நல்ல படிப்பினை. உங்களின் இனிய அறிமுகமும் கிடைத்திருக்கிறது.
என் மின்னஞ்சல் முகவரி – veyilaan.ramesh@gmail.com. உங்களுடைய முகவரியை (இந்திய முகவரி) அனுப்பினால், நான் என் பதிவில் சொன்னபடி ஒரு டி சர்ட் அனுப்பி வைக்கிறேன்.
நன்றி நண்பரே!
அன்புடன்,
வெயிலான்.





\\உங்களின் இனிய அறிமுகமும் கிடைத்திருக்கிறது.//
நன்றி. பின்னூட்ட / ஸ்பேம் குறித்து உங்கள் மறுமொழியிலேயே புரிந்து கொண்டேன். ஒரு நாளாகியும் பதில் வராததால் தவறாக எண்ணி அவ்வாறு சொல்லியிருந்தேன், அதையும் நீக்கி விட்டேன்.
பெரும்பாலானவர்கள் தம் படைப்புகளை வெளியிட தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என எண்ணுவதில்லை என்று நினைக்கிறேன். எங்கு வெளியிட்டாலும் தமது பெயர், சுட்டி போன்ற அடையாளங்கள் (அல்லது விளம்பரம்) இருக்க வேண்டும், இதுவே எண்ணம்.
பின்னூட்டத்திற்கும், புரிதலுக்கும் நன்றி நண்பரே!
அடிக்கடி மின்னஞ்சலிடுங்கள். நம் நட்பு தொடரட்டும்.
அண்ணே! என்னண்ணே ரொம்ப நாளா புது பதிவே காணோம். ஏதாவது சீக்கிரம் எழுதுங்கண்ணே
அப்துல்லா அண்ணே!
வாங்க!
உங்க டூர் முடிஞ்சுதா? நான் பதிவு எழுத தகவல் சேகரிக்கத்தான் ஊருக்கு வந்திருக்கேன்.
சீக்கிரமே எழுதுறேண்ணே!
என்ன சாமி? விடுமுறைல விருதுப்பட்டி போயாச்சா?