Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஏப்ரல், 2009 க்கான தொகுப்பு

விமானத்திற்கும்
எனக்குமுள்ள தொடர்பு
ஒரு சிலகணங்களில்தான்
நிகழ்ந்திருக்கிறது.
 
என் ஊரிலும்
வயலுண்டு என்றாலும்
இறங்கியதில்லை இதுவரை
எந்த விமானமும்.
 
நினைவு தெரிந்தென்
சின்ன வயதுகளில்
தாழப்பறந்த
ஹெலிகாப்டர்கள் பின்னால்
ஓடியிருக்கிறேன்.
 
சென்னைக்குச் செல்கையில்
மீனம்பாக்கத்தைக் கடக்கும்
அபூர்வ விநாடிகளில்
விழிவிரிய வியந்து
ரசித்திருக்கிறேன்.
  
திருவிழாவை முன்னிட்டு
சென்ற வாரம்தான்
விமானத்தில் ஏற
வாய்ப்பு கிட்டியது.
என்றாலும்
கோயில் கோபுர விமானமெல்லாம்
விமானமா என்ன?
 நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் கவிதைத் தொகுதியிலிருந்து…..
நடுத்தர வர்க்கத்தினருக்கு ரயில் பயணமே கனவு.  குளிர் வசதி செய்யப்பட்ட பெட்டியிலோ, பேருந்திலோ பயணிப்பது பெருங்கனவு.  விமானப் பயணம் கனவின் கனவு.  
 இரண்டு மாதங்களுக்கு முன்பே, நண்பர்களுடன் ஐதராபாத் செல்வதாக பயணத்திட்டம்.  இருவர் திருப்பூரிலிருந்தும், மற்றவர்கள் சென்னையிலிருந்தும் தொடர்வண்டியில் ஐதராபாத்துக்கு வந்து விடுவது என திட்டமிட்டிருந்தோம்.  [...]

முழு பதிவையும் வாசிக்க »

அரைகுறை ‘அ’

 
 
 
 
 
 
 
 
வேண்டாக் கேள்வி
உள்ளிழுக்கும் பதில்
ஓடுக்குள்ளென் ஒடுங்கல்
இல்லாததின் வலி
உன்னிருத்தலில்
எதிரொலிக்கா அறை
அரைகுறை ‘அ’
ஓடா விமானம்
சப்திக்கா பொம்மை
உருளாப் பந்து
உணர்ந்தேன்
இல்லாததும்
இல்லாதிருப்பதும்
ஈர முகமூடிக்குள்ளிருந்து…..

முழு பதிவையும் வாசிக்க »

 பென்ஸ்டாக் (Penstock) என்ற இடத்துக்கு நண்பர்களுடன் சில மாதங்களுக்கு முன் சென்றிருந்தேன். 
 
அது மலை முகட்டிலமைந்துள்ள அமைதியான இடம்.  திருப்பூரிலிருந்து காலை 10 மணிக்கு கிளம்பி மேட்டுப்பாளையம் – மஞ்சூர்.  மதிய உணவின் பின், காத்திருந்த வன அலுவலருடன் பனி மூட்டத்தினிடையே பென்ஸ்டாக் சென்றடைந்தோம்.
 
 
பயணக்களைப்பில் நண்பர்கள் படுக்கைக்கு சென்று விட, அவ்விடத்தின் தட்ப வெப்ப நிலை மிகவும் இதமாக இருந்தது.  கை வசம் நண்பர் கும்கி கொடுத்த ஒரு சில புத்தகங்கள் இருந்தன (அடுத்த மாதம் வர்றப்பவும் புத்தகங்களை [...]

முழு பதிவையும் வாசிக்க »