எழுதிட்டியா?
இல்லடா. இனிமத்தான் எழுதணும்.
எழுதீட்டு எனக்கு கொஞ்சம் காமிடா. நாம்படிச்சதுக்கப்புறம் வாத்தியார்ட்ட குடு. என்ன?
செர்ரா.
(தெப்பக்காடு, மாயாற்றைக் கடந்து செல்லும் போது எடுத்த படம் – ஒலியுடன் காணவும்
)
சுற்றுலா சென்ற மாணவர்கள், முடிந்ததும், சென்ற பள்ளிச்சுற்றுலாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். எனக்கு பள்ளி விடுமுறை நாட்களில், சுற்றுலா?!? என்பது அதிகபட்சமாக தூத்துக்குடி, குறைந்த பட்சமாக திருமங்கலம் அல்லது மதுரை.
பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலாவுக்கு, நானும் பெயர் கொடுப்பேன். அது பெயராகவே இருக்கும், கடைசிவரை பணம் கட்டாதவர்களின் அட்டவணையில். பின் அந்த சுற்றுலாவை, செவி வழிச் சொற்களிலும், கட்டுரை வழி எழுத்துக்களிலும் சுற்றி வருவேன்.
அந்த கணக்கைச் சமன் செய்யத்தான், இப்போது நண்பர்களுடன் என்னால் முடிந்த அளவு/முடியும் வர பயணப்படுகிறேன்/வேன்.
என் பயணப்பதிவுகளைப் படித்தவர்கள், தங்குமிடம், முகவரி, தொலைபேசி எண்கள் வேண்டுமென்று, நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்ந்து கேட்கவே இல்லை
ஓரிருவர் மட்டுமே கேட்டிருந்தனர்.
இருந்தும், வெவ்வேறு வலைத்தளங்களிலிருந்து நான் சேகரித்த தகவல்களை இணைத்திருக்கிறேன். தங்குமிடங்களின் வசதிகள், வாடகை, நம்பகத் தன்மை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்களே விசாரித்து கொள்வது நலம்.




\\அந்த கணக்கைச் சமன் செய்யத்தான், இப்போது நண்பர்களுடன் என்னால் முடிந்த அளவு/முடியும் வர பயணப்படுகிறேன்/வேன்.
என் பயணப்பதிவுகளைப் படித்தவர்கள், தங்குமிடம், முகவரி, தொலைபேசி எண்கள் வேண்டுமென்று, நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்ந்து கேட்கவே இல்லை
ஓரிருவர் மட்டுமே கேட்டிருந்தனர்.\\
நாங்கெல்லாம் போனா தல கூடத்தான் போறதுன்ன முடிவுல இருக்கிறோம். அதனால தான் கேட்கலை
)
பணியும், பணமும், மனமும் கூடி வரும் போது நிச்சயம் போகலாம் சிவாண்ணே!
அதெல்லாம் முடியாது. உங்ககூடதான் வருவோம்..
இப்படித் தான் மனுசன ரணகளப்படுத்துறது. அப்புறம் வர்றதில்ல.
எவ்வளவு பெரிய வேல கொடுத்திருக்கேன்
உபயோகமாத்தான இருக்குது அய்ஸ்
நன்றி !
அங்கன வந்து வாங்கிக்கலாம்னு இருந்தேன்.
அப்புறம் காம்பிங் பண்ணி இருக்கீங்களா ?
இல்லை நாதாஸ்!
தலைவரே! சூப்பரு. ஆனா போனா உங்க கூடதான். ஆவ்வ்வ்வ்வ்….
ஈரவெங்காயம் இத படிப்பாருல்ல, ஐயா ஜாலி
ஆஹா! எத்தனை பேரு இப்புடி கெளம்பியிருக்கீங்க…..
//அதெல்லாம் முடியாது. உங்ககூடதான் வருவோம்//
அதே அதே
//இப்படித் தான் மனுசன ரணகளப்படுத்துறது. அப்புறம் வர்றதில்ல/
நானும் ஆதியும் திட்டம் போட்டிருக்கிறோம். கூடிய சீக்கிரம் வறோம் சகா
வாங்க சகா!
மிக ரசித்துப் படித்தேன் தல.
நன்றி தல!
என்னால வீடியோ பார்க்க முடியல நண்பா.. தகவல்களை எழுத்து வடிவிலும் சொல்லி இருக்கலாமே.. நோட் பண்ணியிருப்போம்ல….
வீடியோ – இதைச் சுட்டிப் பாருங்கள்
).
என்னுடைய பக்கப்பட்டையிலும் வீடியோ இருக்கிறது (விட மாட்டோம்ல!
தகவல்களை ஒட்டினால், சரியாக வரவில்லை. உங்களுக்கு தனி அஞ்சலில் அனுப்புகிறேன்.
நன்றி கார்த்தி!
உங்க சேவையே சேவை. நன்றி ரமேஷ் !!
நன்றி கதிர்!
மிகவும் ரசித்துப் படித்தேன் அண்ணா…..
நன்றிங்ண்ணா!
// அந்த கணக்கைச் சமன் செய்யத்தான், இப்போது நண்பர்களுடன் என்னால் முடிந்த அளவு/முடியும் வர பயணப்படுகிறேன்/வேன்.//
தல அடுத்ததடவ போகும் போது முடிஞ்சா முன்கூட்டியே சொல்லுங்க,நானும் வரேன்
)
ஆமா! இப்படியே சொல்லுங்க. உள்ளூருக்குள்ள வந்தாலே ஆளைப் பார்க்க முடியல.
ஹெட்டர் சூப்பர்! நீங்க எடுத்த படமா?!
இல்லை. கூகிள் உபயம்