பாலா,

இது கடிதமோ, கதையோ, கட்டுரையோ எதுவென எனக்கே தெரியவில்லை.

பிறப்பால் தமிழனல்ல. வீட்டிலும் யாரும் தமிழ் பேசவில்லை. பந்துக்களுக்கும் தமிழ் சுத்தமாய் தெரியாது. திருவனந்தபுரத்திலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில், தமிழ் நாட்டின் எல்லையில் ஒரு சின்ன குக்கிராமத்தில் நாயர் குடும்பத்தில் பிறப்பு. படித்தது தமிழ் தான். மேலே படிக்கவும், படிப்பு முடிந்தபின் வாழ்க்கை, கூடவே துணையைத் தேடவுமாய் அனந்தை நகரம் என்னை ஆட்கொண்டு விட்டது. பின்பு மலையாளம் என்னை முழுமையாக மாற்றியது.

இன்று என் மனைவிக்கோ, மகளுக்கோ தமிழ் பேசினால் புரிவதில்லை. பந்துக்கள், ஆபீஸ் சகவாசம், பஸ் எல்லாம் மலையாளத்தில். எங்கோ ஒரு மூலையில் விட்ட குறை தொட்ட குறையாக தமிழ் சிக்கிக் கொண்டு விட்டது. எப்போதாவது அது தோட்டை உடைத்துக் கொண்டு வெளிவருகிறது.

ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு. தமிழன் என்றால் கேரளியருக்கு ஒரு இளக்காரம் தான். நெஞ்சைத்தொட்டு சொல்கிறேன்.

சங்கத்தமிழர்தம்

சால்பெலாம் சாற்றி

பொங்கிடும்

உளமெலாம்

பூரிக்கும் தோள்கள்…..

இதெல்லாம் இங்கு எடுபடவில்லை. தமிழர் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் என்றெல்லாம் மார் தட்டிக்கொண்டாலும் ஒரு சராசரி கேரளியனுக்கு எல்லா தமிழனும் “பாண்டி” தான். செகண்ட் கிரேட் தான்.

தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்பதெல்லாம் களியக்காவிளைக்கு அப்புறம் தான். திருவனந்தபுரம் ஒரு தரம் Copalaconeyயில் மயங்கிக்கிடக்கும் நகரம். காலியான பெருங்காய டப்பா. ஒரு தரம் “தறவாடித்துவம்” (Aristocracy) தனக்குத் தானே கற்பித்துக் கொண்டு, கண் மூடி சோம்பல் முறித்துக் கொண்டு மப்பில் மயங்கிக் கிடக்கிறது. கொச்சியானாலும், கோழிக்கோடானாலும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

தமிழன் “பாண்டி”யாகக் கண்டு கேலி பெசுவதன் சூட்சுமத்தைத் தேடி அலைந்திருக்கிறேன். எனக்குத் தோன்றுவது சராசரி கேரளியனுக்கு “தமிழனாக” பரிச்சயமானவர்கள். பெரும்பாலும் மேஸ்திரி வேலைக்கும், ஹோட்டல் பணிக்கும், ரோடு வேலைக்குமாய் இங்கு வரும் கூலிப் பணியினர், பின்பு நிறையவே காசிருந்தும் கல்வியறிவு இல்லாத வணிகர் சங்கம். இந்த சாகர்யம் தான் தமிழனை இங்கு நாலாங்கிடை பெளரன் ஆக்கியிருக்க வேண்டும்.

கடிதம் எழுதியவர் – எஸ்.சுரேஷ் குமார், திருவனந்தபுரம்

நன்றி பல்சுவை நாவல்

மேலே குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் உண்மையா? தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாமே…..

Advertisements

Comments on: "மலையாளியின் பார்வையில் தமிழன்…." (23)

 1. Tamilians call mallu as KANJIYANS in around coimbatore all the tamilians shd call mallu as kanjiyans only like andhra GOLTI KANJIYAN is the word for mallus

 2. அண்மையில் தொலைக்காட்சியில் பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ என்ற படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் சில கேரளப் பெண்களைச் சித்தரித்திருந்த விதம் கடும் கண்டனதிற்குரியது.

 3. Kanjiyan,
  கொங்கு மண்டலத்தில் மலையாளிகளை “கஞ்சி” என்றும், சென்னையில் ஆந்திர தெலுங்கர்களை “கொல்ட்டி” என்றும் நண்பர்களுக்கிடையே பேசும் போது குறிப்பிடுவார்கள்.
  நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்!

 4. /// அண்மையில் தொலைக்காட்சியில் பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ என்ற படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் சில கேரளப் பெண்களைச் சித்தரித்திருந்த விதம் கடும் கண்டனதிற்குரியது \\\
  வாய்ஸ் ஆப் விங்ஸ்,
  கண்டனத்திற்குரியது என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் பெரும்பாலான மலையாளத் திரைப்படங்களில் தமிழர்களை வில்லனாகவும், வில்லனை இழித்துப் பேசுவது போல் தமிழர்களைப் கேவலமாகப் பேசுவதும் கண்டனத்துக்குரியது தான்.

 5. ////////////////////////////////////////////////////////////////////////
  திருவனந்தபுரம் ஒரு தரம் Copalaconeyயில் மயங்கிக்கிடக்கும் நகரம். காலியான பெருங்காய டப்பா. ஒரு தரம் “தறவாடித்துவம்” (Aristocracy) தனக்குத் தானே கற்பித்துக் கொண்டு, கண் மூடி சோம்பல் முறித்துக் கொண்டு மப்பில் மயங்கிக் கிடக்கிறது.
  /////////////////////////////////////////////////////////////////
  ரொம்பவும் உண்மை… நான் திருவனந்தபுரத்தில் இருந்த போது கண்கூடாக பார்த்தது… இன்னமும் இதே நிலை தான் என்று உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது..அங்கே இருந்த 2-3 வருஷமும்.. என்னை நானே society லிருந்து isolate செய்து கொண்டேன்.. ஒரே பித்து பிடித்த நிலை…
  தீபா
  http://thoduvanamnamullathil.blogspot.com

 6. உண்மை தான். தமிழர்கள் படிப்பறிவில்லாத முட்டாள்கள் என்னும் எண்ணம் மலையாளிகளுக்கு நிறையவே உண்டு. ஆனா ஒண்ணு. மலையாளிகள் தொடை நடுங்கிகள். தமிழனைக் கண்டு பயப்படுவார்கள். ரவுடி எனும் நினைப்பு. ம்ம்ம்… உலக மகா கஞ்சர்கள் மலையாளிகள் மட்டுமே !!!! இது சிறப்புச் செய்தி.

  என்ன படிச்சிருந்து என்ன ? படிக்காத முட்டாள்களை விட பெரிய சர்ச்சைகள் எல்லாம் கேரளாவில் தான் நடக்கிறது.

  கேரளா.. இலக்கியம் தவிர்த்துப் பார்த்தால்.. குப்பை !!!
  ( கேரளா பெண்கள் சூப்பர் ன்னு உங்களுக்குத் தோணினா அதுக்கு நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை )

 7. //கேரளா பெண்கள் சூப்பர் ன்னு உங்களுக்குத் தோணினா அதுக்கு நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை//

  என்ன நமக்கேவா??? சரி! சரி!! இருக்கட்டும்! இருக்கட்டும்!!!

 8. இது புதிது அல்ல.. “பாண்டி மார்களின் வாய் திறந்தே கிடக்கும்”ன்னு நாம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து சொல்லுவதை கேட்டிருக்கிறேன்.

  இங்கே இன்றை நினைவில் நிறுத்தியாகவேண்டியது அவசியமாகிறது.

  பொதுவாகவே மலையாளிகள் தமிழர்களை விட தங்களின் கலாச்சாரத்தின் மேல் அதிக பற்று கொண்டவர்கள் என்பதனை எவரும் மறுக்கமுடியாது. இன்றளவும் அவர்களின் வழக்கமான விழாக்களில் அதைக்காணமுடியும். அதங்கள் அடையாளத்தை இன்றளவும் கூட அம்மக்கள் கடைப்பிடித்தும், காத்தும் வருகின்றனர் என்பது கண்கூடு. ஆனால் நாம்????
  வெறும் கேள்விகள் மட்டுமே மிஞ்சும்.

  மற்ற எல்லா வடமாநிலத்தவர்களை விடவும் நம் தென்னிந்திய மாநிலத்துக்காரர்களுக்கு மட்டும் அண்டை நாட்டுக்காரன் எப்போதுமே ஆகாதவன் தான்.

  கேரளம் மட்டுமல்லாது கர்நாடகத்துடனான நம் உறவையும் நினைத்துப் பார்க்கவும். தெலுங்கு மட்டும் தமிழகத்தின் தலை நகரோடு கலந்து இருந்த காரணத்தால் அவ்வளவாக எதிரியாக பார்க்கப்படாமல் இருந்து வருகிறது.

  இப்படியான வேறு பாடுகளை காட்டுவதிலும், துவேசங்களை வெளிப்படுத்துவதிலும்.. யாருக்கும் யாரும் சலைத்தவர்கள் இல்லை. 😉

 9. சேர நாடுதானே மலையாள நாடானது. சேர பேரரசுகளின் அவை மொழி தமிழ்தானே.

  8-ம் நூற்றாண்டிலிருந்து 14-ம் நூற்றாண்டுக்களில்தான் மலையாளம் ஒரு தனி மொழியாக உருவெடுக்க ஆரம்பித்தது.

  வரலாறு தெரியாதவர்களின் எள்ளலுக்கு நாம் கவலைப் படத் தேவையில்லை.

  ஒரு நல்ல விஷயம் அவர்களிடம் இருந்து மற்ற அனைத்து மா நிலங்களும் பின்பற்ற வேண்டியது என்னவென்றால், கேரள மக்கள் அனைவருக்கும் எழுத்தறிவித்தது.

  அன்புடன்
  இராசகோபால்.

 10. i m living trivandrum, i m agreeing the views of Mr. suresh kumar.
  for the normal Malayalies they know Tamilians as contract labours, and hotel servers. where as they are also respecting professional peoples in Trivandrum, here in techno park At least 75% of Technies working are having their due respect in the company they belongs to , but one think is sure that,they do politics at all level. and their attitude is like ” kudikaradu koozzu kopulikaradu Panneer” category. There are lot to speck about this people’s negative mindset and attitude. One info for the people talking about the keralas literacy- Kerala is also # one in suicide and divorce also.

 11. தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி நண்பர்களே!

 12. //இதெல்லாம் இங்கு எடுபடவில்லை. தமிழர் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் என்றெல்லாம் மார் தட்டிக்கொண்டாலும் ஒரு சராசரி கேரளியனுக்கு எல்லா தமிழனும் “பாண்டி” தான். செகண்ட் கிரேட் தான்.//

  உங்கள் கருத்து மிகச் மிகச் சரியே…நானும் இதனை உணர்ந்திருக்கிறேன்.நானும் ஒரு மலையாளியாக இருந்தும் இதனை அறியாத சில பெண்கள் என்னை தமிழன் என்று நகையாடியதுண்டு.

  இதற்கான காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்ததில் நீங்கள் கூறிய காரணத்தைதான் நானும் உணர்ந்தேன்.

  சில சமயங்களில் என்னை யாராக அடையாளம் காண்பிக்க வேண்டும் என்று குழம்பி உள்ளேன். சென்னையில் என்னை யாரும் தமிழனாக அங்கீகரிக்க தயாரில்லை.அதேபோல் கேரளத்தில் என்னை யாரும் மலையாளியாக அங்கீகரிக்க தயாரில்லை…என்ன செய்ய…தலையெழுத்து…

 13. ஆஹா…. இவ்வளவு அழகாக தமிழில் அசத்துகிறீர்கள். புகைப்படப்போட்டி விச்யமாய் வந்தபோது பட்டது உங்கள்எழுத்து. நிறைய படைக்க வாழ்த்துக்கள் சகா!

 14. // ஆஹா…. இவ்வளவு அழகாக தமிழில் அசத்துகிறீர்கள். //

  ஐயோ! உங்கள விடவாண்ணா?

  வாழ்த்துக்களுக்கு நன்றி!

 15. Sorry i count chck this quite some time first of all we dont need Keralits to recaganise our (Tamil) culture , language or anything for that matter i dont think keralits praise any other race apart from themself. Just to add to this discussion karnataka ppl call us GONGATHARU and the andhara ppl call us ARAVAN

  One of my chennai frnd used the word KANJI so i think not only in kongu ppl use it.And the GOLTI is used across TN

 16. இனிய தோழன் said:

  நண்பர் எஸ்.சுரேஷ் குமார், திருவனந்தபுரம் அவர்களின் கருத்து முற்றிலும் சரியே.

  மலையாளம் நன்கு பேசத்தெரிந்த பலரும் தன்னை ஒரு தமிழன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள மிகவும் தயங்குகிறார்கள். ஏனென்றால் தமிழன் என்றால் படிப்பறிவில்லாதவன், கலாச்சாரத்தில் மலையாளிகளை விட மிகவும் கீழே உள்ளவன் என்ற எண்ணம் பிஞ்சு பருவத்திலேயே உள்ளங்களில் பதிக்கப்படுவத்தான்.

  ஆனால் கேரளம் தமிழ்நாட்டின் தயவில்தான் வாழ வேண்டியுள்ளது. இதற்கு எவ்வளவோ காரணங்கள் கூறலாம். எழுபதின் இறுதியில் ஒரு முறை வேலை நிறுத்தம் காரணமாக சரக்குப் போக்குவரத்து ஒரு வாரம் நிறுத்தப்பட்டபோது சில ஹோட்டல்களில் வாழை இலையைக் கழுவி உபயோகித்தார்கள்.

  இந்த விஷயத்தில் கன்னியாகுமரி மாவட்ட தமிழர்களின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. அவர்கள் திருவனந்தபுரம் சென்றால் “பாண்டி” என்றழைக்கிறார்கள். அதே நபர் திருநெல்வேலிக்குச் சென்றால் “மலையாளத்தான்” என்றழைக்கிறார்கள்.
  பரிதாபம்.

  -இனிய தோழன்.

 17. முற்றிலும் உண்மை இனிய தோழரே! ரொம்ப நல்லாருக்குது உங்கள் பெயர். நன்றி!

 18. ஆஹா…. இவ்வளவு அழகாக தமிழில் அசத்துகிறீர்கள். புகைப்படப்போட்டி விச்யமாய் வந்தபோது பட்டது உங்கள்எழுத்து. நிறைய படைக்க வாழ்த்துக்கள்.

 19. மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்று திட்டுகிறார்கள் அது போல அவர்களுக்கு பட்டப்பெயர் இருந்தால் தயவு செய்து எனக்கு தெரிவிக்கவும். நன்றி!

 20. call them mama, becasue for money he is ready to work as a bimp, like sending their daughters to tamil cinema.

 21. ///
  call them mama, becasue for money he is ready to work as a bimp, like sending their daughters to tamil cinema.
  ///

  நம்ம ஊரு ஸ்ரீதேவியை, த்ரிஷாவைக் கூடதான் பிறமொழிப் படங்களுக்கு நடிக்க அனுப்பி வைச்சோம். நாமளும் மாமா தானா? பிம்ப்பா? அட போப்பா?

  வெயிலண்ணே நான் சொல்றது சரியா தப்பா?

 22. // வெயிலண்ணே நான் சொல்றது சரியா தப்பா? //

  நவாப்பை தான் கேட்கணும் விஜய் அண்ணே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: