river_tamirabarani.jpg

திருநெல்வேலி வட்டார மக்கள், அவர்களுக்கு மட்டும் புரியக்கூடிய நிறைய சொற்களை பேச்சு வழக்கில் உபயோகப்படுத்துவார்கள்.

நிறைய சொற்களை அந்த வட்டார எழுத்தாளர்கள் (வண்ணநிலவன், வண்ணதாசன் மற்றும் கி.ரா கூட) தங்களின் கதைகளில் கூட இயல்பாக பயன்படுத்தியிருப்பார்கள்.

என் தாயார், திருநெல்வேலி மாவட்டம் என்பதால் என் வீட்டிலும் நிறைய புழக்கத்தில் இருக்கும்.

சில சொற்கள் மறந்தும், மறைந்தும் போய்விட்டன.

என் நினைவில் இருக்கும் சில மட்டும் இங்கே.

மச்சு வீடுஇருட்டடைந்த சிறு அறை, பணம், நகை, போன்ற விலை உயர்ந்த பொருள்கள் இருக்கும்.

தார்சாவீட்டின் முன் அறை.

அங்கனக்குழிகுளிக்க பயன்படுத்தும் அல்லது தண்ணீர் புழங்கும் இடம்.

சொதிதேங்காய் பாலில் செய்யப்படும் ஒரு வகை குழம்பு. (திரு.சயந்தனும், சோமியும் இதைப்பற்றி தனி ஒலிப்பதிவே பதித்திருக்கிறார்கள்). ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் பெருவாரியான சொற்கள் திலி வட்டார வழக்காகவே இருக்கும்.

திலி திருமணங்களின் ரெண்டாவது மூன்றாவது நாள் உணவில்சொதிகண்டிப்பாக உண்டு.

மீந்து விட்ட கல்யாண தேங்காய்களை காலி செய்ய வேண்டும் என்பதால் கூட இருக்குமோ!

சின்னம்மைதாயாரின் இளைய சகோதரி, சின்னம்மா.

வரிசையார்பெண்கள் தங்கள் அண்ணனின் மனைவியை இப்படி அழைப்பார்கள்.

அத்தபிள்ளதம்பிகள் தங்கள் அக்கா மாப்பிள்ளையை விளிக்கும் சொல்.

ஆங்ஞான்தங்கள் செல்லப்பையன்களையும், வயதான ஆண்களையும் கூட இப்படித்தான் கூப்பிடுவார்கள் (இந்த சொல்லுக்கு எழுத்து வடிவம் கொண்டுவருவதற்குள் திணறிவிட்டேன்).

திருநெல்வேலி மக்கா யாரும் எதுனா தப்பு இருந்தா சொல்லுங்க! திருத்திக்கிடுதேன்!

அப்புறம் வேற ஏதாவது விட்டுப் போனது இருந்தாலும் சொல்லுங்க!

தாமிரபரணி ஆறு படத்துக்காகதிரு.சத்யன் சுகுமாரனுக்கு நன்றி.

குறிப்பு : இந்தப்பதிவு தமிழ் வலைப்பதிவு இணைய இதழ்பூங்கா04 சூன் 2007 பதிப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது..

Advertisements

Comments on: "வாங்க ஆங்ஞான்!" (9)

 1. பிரபு ராஜதுரை said:

  மாடக்குழி : ஷெல்ப் இல்லாத வீட்டுச் சுவற்றில் உள்ள சிறு குழி. விளக்கு வைப்பார்கள். ஹேர்பின்கள், சில்லரைகள் கூட இருக்கும்.
  வே! இதனை உச்சரிக்கும் விதத்தில் அர்த்தம் உண்டு
  மக்கா! – நாகர்கோவில் வழக்கா?

 2. வணக்கம்.

  ஆங்ஞான், என்பதை தனது தந்தையை,பெரியவர்களை விளிக்கும் சொல்லாக கோவில்பட்டி பக்கத்து உறவினர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். இதுவரை ஆயான் என நினைத்திருந்தேன் !

  வரிசையாள் – இந்த சொல் கீழத்தஞ்சையிலும் உண்டு. வரிசை கொண்டு வருவதால் வந்த சொல்லாயிருக்கும்.?. இதற்கு இணையான மற்றொரு சொல் – அருமையாள். கொச்சையாக
  அருமையா என வழங்கி வருகிறது. இச்சொல் நெல்லையில் உண்டா..?

 3. திரு.பிரபு ராஜதுரை

  // மக்கா! – நாகர்கோவில் வழக்கா? // மக்கா என்ற சொல் நெல்லை தான், நண்பர்களிடையே பேசும் போது உபயோகிப்பார்கள். நாகர்கோவிலிலும் கூட.
  மாடக்குழியும் திலி சொல் தான். வருகைக்கு நன்றி!

 4. வாசன்,

  ஆங்ஞான் தான் ஆயான் என மருவியிருக்கலாம்.
  அருமையாள் என்ற சொல் நெல்லையில் இல்லை.
  வருகைக்கு நன்றி!

 5. ஆசிப் மீரான் said:

  மக்கா, நாகர்கோவில் வழக்கிலயும் இருக்குன்னாலும் நம்மூருலயும் இருக்கு மக்கா
  சாத்தான்குளத்தான்

 6. ஆங்ஞான் என்று எங்கள் பள்ளிக்கூடத்துக்கு அருகில் மிட்டாய் வைக்கும் தாத்தாவை அழைப்போம்..ஆனால் எங்க பள்ளிக்கூடம் இருப்பது திருச்சியில் !!

  புதுகையில் மச்சு என்பது நெல், தானியங்கள் போன்றவற்றை பாதுகாத்து / கொட்டி வைக்கப் பயன்படும் மாடி-பலகை வீடு.

  மாடக்குழி – புதுகையிலும் இதே பொருளில் புழங்கப்படுகிறது

 7. ரவி,
  ஆயானாக இருக்கும் என நினைக்கிறேன். வயதானவர்களை எல்லா இடங்களிலும் அழைப்பார்கள். ஆங்ஞான் என்றால் மிட்டாய் தாத்தாவும் நெல்லைக்காரரோ என்னவோ!
  மச்சு வீடு – மாடி வீட்டையும் குறிக்கும். மச்சு வீட்டுக்காரர் போறார் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள்.
  /// மாடக்குழி – புதுகையிலும் இதே பொருளில் புழங்கப்படுகிறது ///
  புதுக்கோட்டையிலும், திலிக்காரர்கள் புகுந்திருப்பார்களோ?
  புதுகை வட்டார வழக்குச் சொற்களைப் பற்றி பதியலாமே?

 8. அன்பின் வெயிலான்

  வட்டார வழக்கு அருமை – திலி எனக் குறிப்பிடுவது நன்று
  சொதி எனக்கு ரொம்பப் பிடிக்கும் – திலி வண்ணாரப்பேட்டை நண்பர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்

  நல்வாழ்த்துகள் வெயிலான்
  நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: