மதி கந்தசாமி அவர்களால் இந்த இடுகை ஆங்கிலத்திலும், டேனியல் டுயண்ட் அவர்களால் போர்ச்சுகீசியத்திலும், மற்றும் மில்டன் ரமிரஷ் அவர்களால் ஸ்பானிஷ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு Global Voices Onlineல் வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களது இந்த சீரிய முயற்சிக்கும், ஊக்கத்துக்கும் நன்றி!

ஆங்கிலம் The Cheroot Store

போர்ச்சுகீசியம் O armazém de Charuto

ஸ்பானிஷ் La tienda de Puro

cigarsmoke2.jpg

சுந்தரம்! ஏன்யா இன்னும் ஒக்காந்திட்டே இருக்குற?

வீட்டுக்குப் போவேண்டியது தான?

போணும் மொதலாளி! கெளம்புறேன்!

சுருட்டுக் கடை மொதலாளி மட்டுந்தான் ‘சுந்தரம்’னு பேரச் சொல்லிக் கூப்புடுவார். மத்தவங்களுக்கெல்லாம் அவர் ‘செட்டியார்’ தான்!

செட்டியார் துருத்திய தொந்தியும், புகையிலை கறை புடிச்ச கிழிஞ்ச பனியன், அழுக்கு கைலி, கைலிக்கு கீழ தெரியுற டவுசரோட சுருட்டுக்கடை வாசப்படியில எப்பயும் பார்க்கலாம். கடை மூடுற வரை ஒக்காந்திருப்பார். சில நாள் மூடுனதுக்கப்புறம் கூட.

எல்லாரும் சொல்ற மாதிரி கடையில்ல அது. கம்பெனி. சுருட்டு செய்யுற கம்பெனி.

“தனுஷ்கோடி விலாஸ் சுருட்டுக் கம்பெனி”

சுருட்டு குடிக்கிறவங்க கொஞ்ச பேர் அங்கனெயெ வந்து வெலைக்கு வாங்கீட்டுப்போவாங்க. அதனால கூட சுருட்டுக்கடைன்னு பேர் வந்திருக்கலாம்!

ஒரு சுருட்டு யாராவது பத்த வச்சாலே நாலு வீட்டுக்கு வாடையடிக்கும். சுருட்டுக்கம்பெனியே இருந்தா, யோசிச்சுப்பாருங்க, தெருவுக்குள் நுழையும் போதெ புகையிலை வாடை ஆளத்தூக்கும்.

அந்த தெருவுல இருக்குற எதாவது எடத்துக்கு அடையாளம் சொன்னாக்கூட, சுருட்டுக்கடைக்கு எந்தப்பக்கம்னு கேப்பாங்க.. அப்படி ஒரு காலத்துல ஓகோன்னு ஓடிட்டிருந்தது. முன்னாடியெல்லாம் நாப்பது, அம்பது பேர் கூட வேல செஞ்சிட்டிருந்தாங்களாம்! இப்ப பத்துபேரு கூட இல்லை.

சுந்தரம் செட்டியாரும் ஒரு காலத்துல இங்க வேல செஞ்சவரு தான்,

சுருட்டுக்கடயில வேல செஞ்சாரே தவிர, சுருட்டு பிடிக்கும் பழக்கமெல்லாம் கெடயாது செட்டியாருக்கு.

கடயில எல்லா வேலயும் செய்வாரு,, பொகையில கட்டப்பிரிச்சி, தொட்டித்தண்ணில அலசுறது, ஈரப்பொகயிலய வெயில்ல காயவக்கிறது, காஞ்ச புகயிலய சின்ன துண்டு, துண்டா அறுக்குறது, துண்டுப்பொகயிலய வச்சு சுருட்டுறது, லேபிள் ஒட்டுறது, கடசியா டசன், டசனா கட்டி, காக்கி காகிதத்துல சுத்தி ஒட்டுறதுன்னு அம்புட்டு வேலயும் பார்த்தவரு.

நெறய நேரம் ஒக்காந்தே பாக்குற வேலன்றதுன்னால, செட்டியாருக்கு நல்லாவே தொந்தி போட்டுருக்கும். வயசாக, வயசாக குனிஞ்சு நிமிர்றதுக்கே தொந்தி இடிக்க ஆரம்பிச்சிருச்சு.

மொதலாளி ஒருநா கூப்பிட்டு, முன்னாடி மாதிரி வேலைல சுறுசுறுப்பில்ல சுந்தரம் உங்கிட்ட, அதனால வீட்லயே இருந்துக்கோ, வேலைக்கு வரவேண்டாம்ன்னுட்டார்.

இருந்தும், செட்டியாரு எப்பப்பாத்தாலும், தெனமும் சுருட்டுக்கட வாசப்படி ஓரத்துல ஒக்காந்துட்டே இருப்பாரு.

நானே ஒருநா செட்டியார்ட்ட போய், ‘ஏன் தெனமும் இங்கனக்குள்ள வந்து உக்காந்துக்கிட்டே இருக்கீங்க’ன்னு கேட்டேன். அதுக்கு அவரு, “ தம்பி! இந்தக்கடைக்கே வருசக்கணக்கா வந்து போய்ட்டிருந்துட்டேன்ல! அதுனாலதான்“னாரு.

திரும்ப நான் என்ன காரணம்னு அடிக்கடி போக வர, கொடஞ்சு, கொடஞ்சு கேட்டுட்டே இருந்ததுனால, ஒருநா உண்மைய தயங்கி, தயங்கி சொன்னாரு.

இந்தக்கருமம் புடிச்ச புகயிலலேயே (புகையிலையிலேயே) பொழங்கீட்டே இருந்துட்டேனா, அதுனால புகயில வாட (வாடை) இல்லாம வீட்டுல இருக்கமுடியல! நானும், அப்புடியும் வீட்டுலயே இருந்து பாத்தேன். ஆனா, என்னமோ மாதிரி இருக்கு! அத எப்புடி சொல்றதுன்னு தெரில. அதுனால தான் வீட்டுல இருப்பு கொள்ளாம இங்ஙன வந்து உக்காந்து வாட பிடிச்சிட்டிருக்கேன்.

பகலைக்கு சரி. அப்ப ராத்திரிக்கு?

ராத்திரி படுக்குறதுக்கு முன்னாடி கூட, தலமாட்டுல ஒரு சுருட்டப்பிரிச்சு வச்சு புகயிலவாசம் பிடிச்சாத்தான் தூக்கமே வருது.

கடயில வேல பாக்குறப்ப இப்படி சுருட்ட பிரிச்சு வச்சா தூங்குனீங்கன்னு கேட்டதுக்கு,

இல்ல அப்ப வேல முடிஞ்சு வீட்டுக்கு வந்தாலும், மேலு, காலெல்லாம் புகயில வாட தான அடிக்கும், ஏன் கட்டிருக்கிற துணிமணியெல்லாங்கூட வாடை அடிக்கும்ல்ல ன்னாரு.

அன்னைக்குத்தான் ஏன் சுருட்டுக்கட வாசல்லயே செட்டியாரு பொழுதன்னைக்கும் உட்காந்திருக்காருங்கிற கேள்விக்கு, விடை கிடைச்சது.

இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊருக்குப் போயிருந்தப்போ தான் செட்டியாரு, பீடி, சீரட்டு குடிக்கிறவங்களுக்கு வர்ற சீக்கு (நோய்) வந்து செத்துப்போயிட்டாருன்னு சொன்னாங்க.

சுருட்டுக்கடையும், சுருட்டு சரியா யாவாரம் ஆகாததுனால மூடிட்டாங்கன்னாங்க.

DON’T MAKE IT!

 

Advertisements

Comments on: "சுருட்டுக்கடை" (9)

 1. வெய்யிலான்,

  அருமையான இடுகை!

  உங்களுடைய இந்த இடுகையை Global Voices Onlineஇல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இட்டிருக்கிறேன்.

  http://www.globalvoicesonline.org/2007/07/05/tamil-blogosphere-the-cheroot-store

  -மதி
  (http://mathy.kandasamy.net)

 2. வெய்யிலான்,

  உங்களுடைய இடுகை, ஆங்கிலத்திலிருந்து போர்த்துக்கீசிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

  http://pt.globalvoicesonline.org/2007/07/06/blogosfera-tamil-a-loja-de-cheroot

  -மதி

 3. அலங்காரங்களற்ற எளிய கதை… நன்றாக இருந்தது வெயிலான்

 4. /// அலங்காரங்களற்ற எளிய கதை… ///
  நன்றி செல்வேந்திரன். இதில் நிறைய உண்மைகளும் உள்ளது.

 5. A very nice article. It took me some 30/40 years, before and renewed my old thoughts. I remember my old grandma’s, uncle’s residence and my cousins playing out there. Thank you. Keep continuing in publishing nice articles like this.

 6. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி! கணபதி சுந்தரம்.

 7. மொழிபெயர்ப்புக்கு தகுதியான கதைதான். செட்டியாரின் கேரக்டரைசேஷன் நல்லாயிருந்தது.

  இதை இப்போ எழுதியிருந்தா இன்னும் கூட நீங்க பெட்டரா எழுதுவீங்க என்பது என் எண்ணம்.

 8. எளிமையான ’நச்’ கதை வெயிலான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: