பிரம்மராயர் கல்வி மற்றும் அனைத்து கலைகளும் கற்பிக்கும் ஒரு உபாத்தியாயர். குடுமியும், வேட்டியுமாக எந்நேரமும் காட்சியளிப்பார். மரத்தடியில் எப்போதும் இருக்கையில் அமர்ந்து மாணாக்கர்களுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். இல்லையேல், தூங்கிக் கொண்டிருப்பார்.

flyingdhoti.jpg

பிரம்மராயர் கனிவும், கண்டிப்புமாகவே இருப்பார், தன் கேள்விகளுக்கு பதில் கூறும் மாணாக்கனுக்கு, உடனே தேனும், தினைமாவும் கலந்த ஒரு உருண்டை கொடுப்பார். பதில் தெரியாவிட்டால் எழுத்தாணியினால் ஒரு சின்ன குத்து கிடைக்கும்.

இடுப்பில் துண்டு மாதிரியான ஒன்று மட்டும் தான் மாணாக்கர்களின் அதிகபட்ச உடை. ஒரு நாள் சீராளன், உபாத்தியாயர் சொல்லுவதைக் கவனிக்காது, மரத்தின் மேல் ஓடி விளையாண்டு கொண்டிருக்கும் அணில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை பிரம்மராயர் பார்த்து விட்டார்.

அதற்கு தண்டனையாக நான் சொல்லும் வரை, மரக்கிளையிலேயே தொங்கிக் கொண்டிரு! என ஏற்றிவிட்டு விட்டார். சீராளன் மரக்கிளையை இரண்டு கைகளால் பிடித்த படி தொங்கிக் கொண்டே இருந்தான். அவன் காலுக்கும், மண் தரைக்கும் பத்து, பதினைந்து விரக்கடை அளவு இடைவெளி தான் இருக்கும். அவன் இறங்காமல் இருப்பதற்காக காலுக்கு கீழே நான்கைந்து எழுத்தாணியை வேறு குத்திவிட்டார்.

தொங்கிக் கொண்டே இருப்பதால் கைகள் வலியெடுக்கிறது. குதிக்கவும் வழி இல்லை. கட்டெறும்பு வேறு உடுப்புக்குள் சென்று வெளியே வந்து கொண்டிருக்கிறது.

அரைநாழிகை கழித்து உபாத்தியாயர், எழுத்தாணிகளை எடுத்து விட்டு அவனை இறக்கி விடுங்கள் என்று மற்ற மாணாக்கர்களிடம் உத்தரவிட்டு போய்விட்டார்.

dhoti.jpg

சீராளன் கீழே இறக்கப்பட்டான். வெகு நேரம் கிளைகளைப் பிடித்திருந்ததால் இரு கைகளும் கீழே இறங்கவும் இல்லை, இறக்கவும் முடியவில்லை. அப்படியே வீட்டுக்கும் வந்து விட்டான். தாய், தந்தை, அக்கம் பக்கத்தவர் அனைவரும் கையை கீழே கொண்டுவர முயற்சிக்கின்றனர். முடியவேயில்லை.

handgall.jpg

மருத்துவர் கூட வந்து ஏதேதோ, தைலம், மூலிகையின் உதவியால் முயற்சித்துப் பார்க்கிறார், முடியவில்லை.

உபாத்தியாயருக்கு விசயம் தெரிந்து சீராளன் வீட்டுக்கு வருகிறார். நிலைமையை பார்த்து விட்டு, இவ்வளவு தானா விசயம் என்று கூறி விட்டு, படாரென்று இடுப்புத் துணியை இழுக்கிறார். அடுத்த விநாடி சீராளனின் கைகள் தன்னையறியாமல் சடாரென்று கீழே இறங்குகிறது.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

அன்றும், இன்றும் நட்பு தான் என் இடுக்கண்ணையும் களைகிறது.

உங்களுக்கு………

Comments on: "பிரம்மராயரும்.. சீராளனும்…" (18)

 1. கடைசி வரை சுவையார்வமாக கொண்டு சென்றீர்கள். அப்பறம் ஒரு சஸ்பென்ஸ்
  சூப்பர் !!!

 2. என்ன இருந்தாலும் உங்க மாதிரி கனத்த கருத்துக்களுடனான பதிவுகளைத் தரமுடியவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது.

  நன்றி ஜி.கே.

 3. அற்புதம், வெயிலான். குறள் கொண்டு இன்னும் எத்தனை முறை கதை சொன்னாலும் அதன் சுவை குன்றாது என்பதே உண்மை

 4. ஆஹா! வராத வரவனையானையே வரவழைச்சிருச்சா இந்தக் கதை.
  நன்றி! செந்தில்.

 5. அன்பு வெயிலான்,
  எழுத எடுத்துக் கொண்ட விஷயமும்,
  எழுதிய பாங்கும், அதற்கேற்ற புகைப்படங்களும் அருமையாக இருந்தன.
  அந்தக் காலத்திலிலெல்லாம் மாணாக்கர்களுக்குத் தண்டனை அப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்து,
  கல்வி கற்பித்த ஆசானின் கெளரவத்தைக் காப்பாற்றி இருக்கிறீர்கள்.
  பாராட்டுக்கள்.
  உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது.
  நிறைய எழுதுங்கள்.
  ஜீவி

 6. ஜீவி,
  தங்களின் வருகைக்கும் மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றிகள் பல.

 7. நல்லாயிருக்கு..

  இரசித்தேன்..

  நன்றி!

 8. ரசித்தமைக்கு நன்றி! சிவபாலன்..

 9. ரொம்ப நல்லா இருக்கு, வள்ளுவம் கொண்டு கதைகள் சொல்லும் பாங்கு நன்று!

 10. சுவையாக சொல்லியிருக்கிறீர்கள்..

  தலைப்பைப் பார்த்து படிக்காமல் சென்றேன்…..

  இன்று படித்ததற்கு மகிழ்கிறேன்..

 11. நன்றி! TBCD.
  தலைப்பைப் பார்த்துட்டு பயந்துட்டீங்கனு நினைக்கிறேன் 🙂

 12. நல்ல கற்பனை.
  வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  ஓகை நடராஜன்

 13. மிக்க நன்றி! ஓகை ஐயா!

 14. எளிமையான கதை. அழகான முடிவு.

 15. // எளிமையான கதை. அழகான முடிவு //

  உங்களின் கவிதையைப் போல அருமையாக இருக்கிறது பின்னூட்டமும்.

  நன்றி! அருட்பெருங்கோ!

 16. ஏன்யா இப்படியெல்லாம் எழுதிவிட்டு இப்போ வெறும் வேடிக்கை மட்டும் பார்க்கிறீர்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: