புரிதல்

என் எழுத்துக்களுக்கு முழு முதற் காரணமான திரு. செல்வநாயகம் அவர்களுக்கும், என் உயர்விலும், தாழ்விலும், நிலைகுலையா வண்ணம் என்னை காத்து அரவணைக்கும் குருவுக்கும், நண்பன் நந்துவுக்கும், அலுவலக நண்பர்களுக்கும்,

வெறும் பத்து பதிவுகள் மட்டும் தான் எழுதியிருந்தேன். அதிலும் ஒன்றிரண்டு வெட்டி ஒட்டப்பட்ட பதிவுகள். நான் எந்த குழுவிலோ, ஒரு சாராரை மட்டும் பாராட்டும் பாரபட்சமானவனோ கிடையாது. இந்த நிலையில் என்னையும் ஒரு வார காலத்திற்கு நட்சத்திரமாக்கி அழகு பார்த்த தமிழ் மணத்திற்கும் நன்றி!

நான் பதிவுகள் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னேயே என் மேல் அன்பு காட்டிய நண்பர் பால பாரதி அவர்களுக்கும் நன்றி!

பதிவுகள் எழுத ஆரம்பித்த புதிதில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ‘சுருட்டுக் கடை‘ என்ற இடுகையை பதிப்பித்து விட்டு ஆர்வத்துடன் இருந்த போது, அந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை.

அந்த நேரத்தில் இந்த இடுகையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடலாமா? என்ற மின்னஞ்சல் மதி கந்தசாமி அவர்களிடமிருந்து வந்த போது, நான் பேரானந்தமடைந்தேன்.

அதே இடுகை போர்ச்சுகீசிய மொழியிலும், ஸ்பானிஷிலும் மொழி பெயர காரணமாய் இருந்த மதி கந்தசாமி அவர்களுக்கு நன்றி!

சிறந்த பதிவர்களையும், படைப்புகளையும் தேர்ந்தெடுத்து பாராட்டும் மதி கந்தசாமி அவர்களின் பண்பு அன்றிலிருந்து இன்று வரை தொடர்வது மிகவும் பாராட்டத்தக்கது.

கனியா கனிகளும்….. கண்ணாடி கனவுகளும் என்ற இடுகையை சற்று முன் குழுவினர் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்து என்னை ஊக்கமளித்த சற்றுமுன் குழுவினருக்கு நன்றி!

நட்சத்திர வாரத்தில் எனக்கு முதல் வாழ்த்து சொல்லி என் அனைத்து நட்சத்திரப் பதிவுகளுக்கும் கருத்துக்களை வழங்கிய கோவி.கண்ணன், அய்யனார், ஆழியூரான் ஆகியோர்களுக்கும்,

அருமை நண்பர் கானா பிரபா

டெல்பின் விக்டோரியா

மங்கை

princenrsama

காட்டாறு

மஞ்சூர் ராசா

ஜெகதீசன்

வல்லிசிம்ஹன்

சிவபாலன்

வெற்றி

ஜெஸிலா

கண்மணி

முத்துலட்சுமி

நாகைசிவா

யோகன்

வடுவூர் குமார்

வரவனையான்

jeevee

செந்தமிழ்

TBCD

ஓகை நடராஜன்

வி.ஜெ.சந்திரன்

Ramachandranusha

ஆகிய அனைவருக்கும் நன்றி!

எனக்கு பின் வந்து ஜொலிக்க இருக்கும் நட்சத்திரம் வரவனையானுக்கும் நன்றி!

என் எழுத்துக்களை வாசித்தும், புரிந்தும், தட்டியும், குட்டியும் கருத்துக்களை சொன்ன, சொல்லாமல் மனதில் நினைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி!

நன்றி! நண்பர்களே!!!!!!!!

Advertisements

Comments on: "புரிதல்" (17)

 1. நல்லதொரு நன்றி நவிலல்.

 2. உங்கள் எழுத்து நடை கற்பனை என்பதை கடந்து இயல்பாகவும், சிறப்பாகவும் இருக்கிறது, நட்சத்திர வாரத்துக்குப் பிறகும் அவ்வப்போது எழுதுங்கள். அனைத்து இடுகைகளும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாகவே இருந்தது.

  பாராட்டுக்கள் நண்பரே.

 3. //அவ்வப்போது எழுதுங்கள்//
  கண்டிப்பாக எழுதுவேன். நன்றி! ஜி.கே.

 4. உங்கள் நட்சத்திர பதிவுகள் அனைத்தையும் இப்போதுதான் படித்து ரசித்தேன்.
  உங்கள் பதிவுகளை எப்படித் தவறவிட்டேன் இவ்வளவு நாட்கள் என்று தெரியவில்லை.
  தமிழ்மணத்திலே அடித்த புயலிலே தமிழே வேண்டாம் என்றிருந்த வேளையிலே,
  தென்றலாக,சிரிப்புடன் சிந்தனைத் தேன் கலந்து, கல்வி வள்ளல் இல்லம் பார்த்த
  நினைவலைகளையும் சேர்த்து மீண்டும் இனிக்க இன்புற வைத்து விட்டீர்கள்.
  பட்டிக்காட்டு இளமைக்கு ஈடான கல்லுரிகள், நாடக அரங்கு என்றும் எங்கும் வர முடியாது!

 5. /// உங்கள் பதிவுகளை எப்படித் தவறவிட்டேன் இவ்வளவு நாட்கள் என்று தெரிய வில்லை ///

  நான் ஒன்றும் நிறைய பதிவுகள் எழுதவில்லை தமிழரே! என்னுடைய எல்லாப் பதிவுகளையும் படித்து கருத்து தெரிவித்ததற்கு நன்றி!

 6. விருதுநகர்க்காரரே!

  குறைச்சலாக எழுதினாலும் நிறைவான பதிவுகளை அளித்திருக்கின்றீர்கள், நன்றி

 7. /// குறைச்சலாக எழுதினாலும் ///

  புரிகிறது! புரிகிறது! குறைவு தான்.
  நட்சத்திர வாரத்திற்கு எழுதப்பட்ட பல பதிவுகள் இன்னும் இறுதி செய்யப்படாமலே உள்ளது. நன்றி பிரபு!

 8. நண்பா.. உங்கள் எழுத்து நடை, ஒப்பணையற்ற அப்பத்தாவின் பொக்கை வாய் சிரிப்பு போல இயல்பானது. அந்த பாசாங்கில்லாத தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது.

 9. /// ஒப்பணையற்ற அப்பத்தாவின் பொக்கை வாய் சிரிப்பு போல ///
  இப்டி, இப்டி தான் என்னால எழுத முடியலை.
  நன்றி ஆழியூராரே!

 10. அண்ணாத்தே! நம்மளையும் லிஸ்ட்-ல போட்டுக்கினியே! டேன்க்ஸ் பா!

 11. /// நம்மளையும் லிஸ்ட்-ல போட்டுக்கினியே! ///
  நீங்களும் நம்மளுக்கு வாழ்த்து தெரிவிச்சீங்கள்ள. அதுக்கு தான் பிரின்ஸ் என்.ஆர்.சமா.

 12. நன்றி நவிலலுக்கு ஒரு பதிவா ?? நடத்துங்க..

 13. நன்றி நவிலல் என்பதும் முக்கியமானது தானே?

  (திரும்பவும்) நன்றி ஜெயகுமார்!

 14. வணக்கம் வெயிலோன்,

  சற்றேறக்குறைய ஒரு வருடத்திற்க்கு முன் நீங்கள் எழுதிய இந்த பதிவை இப்பொழுதுதான் வாசிக்க முடிந்தது. இதில் என் பெயரையும் இணைத்திருக்கும் உங்கள் நன்றி நவிலல் பண்பு மறக்க முடியாதது. வாழ்த்துகள்.

 15. ஒரு வருடத்திற்கு பிறகும் படித்து பின்னூட்டமிடும் உங்களின் பண்பு என்னாலும் மறக்க முடியாதது.

  மீண்டும் நன்றி செந்தமிழ்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: