வடகரை வேலனின் – காத்திருந்த காதலி – 1

பரிசல்காரனின்         – காத்திருந்த காதலி – 2

நண்பர் பரிசல்காரன், இன்னும் காத்திருந்த காதலியக் காணோமே? னு என்னை போன்ல கூப்பிட்டுப் பார்த்தார்.  அப்புறம், நேர்லேயே வந்துட்டார்.  இதுக்கு மேலயும் காக்க வைக்க விரும்பலை.

ஆனா கதையைப் படிக்கிறதுக்கு முன்னாடி நிபந்தனைகளைப் படிச்சுக்கோங்க.

வடகரை வேலன் போட்ட கண்டிஷன்கள்:

1. யாரையும் சாகடிக்க கூடாது.

2. இதெல்லாம் கனவுன்னு டுமீல் விடக்கூடாது.

3. ஏற்கனவே வந்த கதை அல்லது திரைப்படத்தின் சாயல் வரக்கூடாது.

பரிசல்காரனின் எக்ஸ்ட்ரா கண்டிஷன்..

4. எந்த டாக்டரையும் மோசமானவராகக் காட்டக்கூடாது.

என்னா ஒரு வில்லத்தனம் பாத்தீங்களா? 😦

டாக்டரை என்ன பண்ணீங்க? னு நேர்ல வந்து விசாரிப்பு வேற…….. நல்லாருப்பு……நல்லாரு……..

இனிமே கதை………

“கௌ.. கௌரி…”

“கார்த்திக்.. என்னாச்சு…?”

கௌரிக்கு பதில் சொல்ல முடியாமல் அரை மயக்கமாய் கார்த்திக் நாற்காலியில் விழ, அவன் கையிலிருந்த செல்ஃபோனை வாங்கிப் பார்த்தாள்.

அதில்…

daddy serious
go home immly

ஐசியுவிலிருந்து வெளியே வந்த நர்ஸ்,

சங்கர்ன்ற பேஷண்ட் கூட வந்தது யாருங்க?

அருகே சென்ற கெளரியிடம்,

உள்ளே எல்லாம் இத வச்சுக்கக்கூடாதுனு சொன்னாக்கூட வச்சு பேசிட்டே இருக்காருங்க.  சீப் பார்த்தா என்னையும் சேத்து திட்டுவாருங்க.

அப்புறம் நான் வாங்கும் போது, அவசரமா ஒரு மெசேஜ் அனுப்பணும்னு சொன்னதால,  நானே அவர் சொன்னா மாதிரி மெசேஜ் அனுப்பிட்டேன்ங்க.

இந்தாங்க!

என்று செல்ஃபோனைக் கொடுத்து விட்டு கண்ணாடி கதவின் பின் மறைந்தார்.

ஆமா! கார்த்திக்! என்கிட்ட பேசுறப்ப கூட, எனக்கு ஒண்ணுமில்லை!

அப்பா என் கூட பேசிட்டிருக்கும் போதே மயக்கம் போட்டு விழுந்துட்டார்!

உடனே எங்க வீட்டுக்குப் போ!னு சொன்னார்.

நான் உடனே உனக்கு போன் பண்ணிப்பார்த்தேன்.  செல் ஆஃப்ல இருந்தது.

அரை மயக்கத்திலிருந்த கார்த்திக்குக்கு இப்போது ஓரளவு புரிந்தது.

இந்த மடையன் ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்ட்ட ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சுனு சொல்லியிருப்பான்.

ஏன் வீட்டுக்கு போன் பண்றான்? ச்சே!

இப்ப என்ன பண்றதுனு தெரியலையே?

உன்ன தனியா விட்டுட்டும் போக முடியாது.

கொஞ்சம் யோசித்த கெளரி,

எனக்கு ஒண்ணும் பிரச்னையில்ல கார்த்திக்!

இந்த விசயம் தெரிஞ்சதும், அப்பா தான் அவரோட ப்ரெண்ட் இருதயராஜ் அங்கிளை இங்க அனுப்பிச்சார்.

நான் பார்த்துக்கறேன்.  நீ மொதல்ல கெளம்பு!

ஆட்டோவில் விரைந்த கார்த்திக், கெளரியின் நிலையில் நம் சகோதரிகள் இருந்தால் இந்த அளவிற்கு தைரியமாக இருப்பார்களா? என்று பலவாறு யோசித்துக் கொண்டும்,  கெளரியின் மனஉறுதியை தனக்குள்ளே வியந்த படியும், சங்கர் வீட்டை அடைந்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது.

கதவைத் திறந்து வெளியே வந்த டாக்டர். இருதயராஜ்,

என்னம்மா கெளரி? எப்டி இருக்கே? அப்பா எப்படி இருக்கார்?

நல்லாருக்கார் அங்கிள்! சங்கருக்கு எப்படி இருக்கு?

கெளரியின் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்து விட்டு,

ஸ்கேன் பண்ணினப்புறம் தான் உறுதியா சொல்ல முடியும்மா!

அதுக்கு இடையில நினைவு தப்பிட்டா, ரொம்ப கிரிட்டிகல் ஆயிரும்.

எதுக்கும் இன்னும் ரெண்டு ஸ்பெசலிஷ்ட்டை வரச்சொல்லியிருக்கேன். பார்க்கலாம்!

‘இந்து’ வலைத்தளத்தில் BLOG பற்றி வந்த செய்தியை படித்துக் கொண்டிருந்த கெளரியின் அப்பா, மேசை மேல் இருந்த செல்ஃபோன் திரையில் யார் கூப்பிடுவது? என திரும்பிப் பார்க்கிறார்.

Irudhayaraj calling…….

செல்ஃபோன் பொத்தானை அழுத்தி பேச,

ஹலோ! கேட்டரிங்கா?

இல்…. ஆமாங்க! சொல்லுங்க!

என்றாள் கெளரி தடுமாற்றத்துடன்!

ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே சாப்பாடு வந்திட்டிருக்குனு சொன்னாங்க, இன்னும் வந்து சேரலை?  ஒறமொற எல்லாம் பசியோட காத்திட்டிருக்காங்க.  உங்க ஓனர்ட்ட போனை குடு கண்ணு!  நான் பேசிக்கறேன்!

↔↔↔↔

உஷ்…..ஷ்….ஷ்….. போதும்….. இதுக்கு மேல கதையை தொடர ஒரு பின்னூட்டத்தையே கதை அளவுக்கு எழுதும் 😉 நண்பர் கிரியை அழைக்கிறேன்.

மேலே இருக்கிற நாலு கண்டிசனே போதும். அதுக்கு மேலயும் கண்டிசன் வேணுமானு யோசிச்சேன். ஆனா, யான் பெற்ற இன்பம்! பெறுக இவ்வலையுகம்! என்பதற்கேற்ப ஒரே ஒரு சின்ன கண்டிசன்.

5. இதுக்கு மேலே கதாபாத்திரங்களை அதிகப்படுத்தக் கூடாது.

கிரி! நீங்களாவது நாலாவதா கதையை தொடரப் போறீங்க. பத்தாவதாகவோ, அதற்கு மேலேயே எழுதப் போறவங்களை நெனச்சு பாத்தா 😦 😦 😦

அவங்களுக்கெல்லாம் கண்டிசனே ஒரு கதை அளவுக்கு இருக்கும்னு நினைக்கிறேன்.

வடகரை வேலன் அண்ணாச்சி, கதையோட பேரை பேசாம ‘கங்கா ஆஸ்பத்திரி’னு மாத்திரலாம் போல………. ஒரே பெனாயில் வாடை…….

எடத்த ‘கோபி செட்டிபாளையம்’ பக்கம் மாத்துங்க கிரி!

கிரி                                            பாகம் 4

ஜெகதீசன்                                பாகம் 5

டிபிசிடி                                     பாகம் 6

கயல்விழி முத்துலெட்சுமி    பாகம் 7

மை பிரண்ட்                           பாகம் 8

கோபிநாத்                               பாகம் 9

கப்பி பய                                 பாகம் 10

Comments on: "காத்திருந்த காதலி – 3" (13)

 1. அட பாவிகளா!

  வெயிலான் உங்களை வலை பதிவர் சந்திப்புக்கு வர சொல்லி கொஞ்சம் “அன்பா” சொன்னதுக்கு எனக்கு இப்படி ஒரு தண்டனையா?

  பின்னூட்டம் தான் பெருசா போடுவேன்….கதை எல்லாம் எனக்கு எழுத தெரியாதே.!!.

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  காமெடி னா கூட ஏதாவது முயற்சி செய்யலாம் …இப்படி காமெடி டைமா இருந்த என்னை சீரியஸ் டைம் ஆக்கிட்டீங்களே …

  இன்னும் ஒரு இரண்டு நாள் கழித்து வந்து இருந்தா கூட ..நான் ஊருக்கு எஸ் ஆகி இருப்பேன்..

  சரி விதி யாரை விட்டது ..சரி முயற்சி பண்ணுறேன் முடியலைனா சரண்டர் ஆகிடுவேன்..

  “ஒறமொற” இதுக்கு தான் கோபி பேரை போட்டீங்களா?

  அது சரி இனி கோபி ஹாஸ்பிடலுக்கு மாத்திட வேண்டியது தான்..:-))))

 2. // வெயிலான் உங்களை வலை பதிவர் சந்திப்புக்கு வர சொல்லி கொஞ்சம் “அன்பா” சொன்னதுக்கு எனக்கு இப்படி ஒரு தண்டனையா? //

  🙂 🙂 🙂 🙂

  // பின்னூட்டம் தான் பெருசா போடுவேன்….கதை எல்லாம் எனக்கு எழுத தெரியாதே.!!. //

  இதெல்லாம் நாங்க நம்பமாட்டோம்.

  // காமெடி னா கூட ஏதாவது முயற்சி செய்யலாம் …இப்படி காமெடி டைமா இருந்த என்னை சீரியஸ் டைம் ஆக்கிட்டீங்களே … //

  ஏன் காமெடியா கூட மாத்துங்க கதையை! அதனாலென்ன?

  // இன்னும் ஒரு இரண்டு நாள் கழித்து வந்து இருந்தா கூட ..நான் ஊருக்கு எஸ் ஆகி இருப்பேன்..

  சரி விதி யாரை விட்டது ..சரி முயற்சி பண்ணுறேன் முடியலைனா சரண்டர் ஆகிடுவேன்.. //

  சரண்டரெல்லாம் கோபிக்காரருக்கு அழகா? 😉

 3. வெயிலான்,

  நல்ல ட்விஸ்ட்.

  பொருத்தமான படங்களோட நல்லா இருக்கு.

  சங்கரோட அப்பாவையும் சீரியஸாக்கி கிரிய மாட்டி விட்டுட்டீங்களே.

  கிரி பாவம்.

 4. // பொருத்தமான படங்களோட நல்லா இருக்கு.

  சங்கரோட அப்பாவையும் சீரியஸாக்கி கிரிய மாட்டி விட்டுட்டீங்களே. //

  நன்றி! அண்ணாச்சி!

  வேற வழியில்லை. வேற எப்படி சீரியஸ் கதையாக்குறது? 🙂

 5. எப்படிங்க கதை எழுதச் சொன்னா. அதுக்குள்ளே இப்படி பொருத்தமான படங்கள்,
  நியூஸ்-ன்னு போட்டு கலக்கறீங்க?

  சூப்பர்!

  கிரி.. இந்தியா வர்ற உங்களுக்கு நல்ல பரிசு! (இங்கிருக்கும்போதே இப்படி ஆப்பு வைக்கிறாங்க.. நேர்ல வந்தா என்னாகுமோ-ன்னு பயமா இருக்கா?)

 6. // அதுக்குள்ளே இப்படி பொருத்தமான படங்கள்,
  நியூஸ்-ன்னு போட்டு கலக்கறீங்க?

  சூப்பர்! //

  செய்யுறத தெளிவா செய்யணுமில்ல.

  நன்றி! கிருஷ்ணகுமார்.

 7. வெயிலான்.

  //வீடு பூட்டப் பட்டிருந்தது.

  கதவைத் திறந்து வெளியே வந்த டாக்டர்//

  கொஞ்சம் குழப்புது. ICU கதவைத் திறந்து வெளியே வந்த டாக்டர் னு மாத்துங்க.

 8. // கொஞ்சம் குழப்புது. ICU கதவைத் திறந்து வெளியே வந்த டாக்டர் னு மாத்துங்க. //

  அண்ணாச்சி,

  குழப்பம் வரக்கூடாதுனு தான் டாக்டர்னு போட்டிருக்கேனே!

  சினிமா டைரக்டர்லாம் கதை சொல்லும் போது சொல்லுவாகல்ல.

  இங்க கட் பண்ணி அங்க ஓபன் பண்றோம்னு. அது மாதிரித் தான் இதுவும்!

  சரி! நீங்க சொல்லிட்டீங்கனா, மாத்திர வேண்டியது தான்!

 9. எனக்கு

  “Irudhayaraj calling…….

  செல்ஃபோன் பொத்தானை அழுத்தி பேச,

  ஹலோ! கேட்டரிங்கா?

  இல்…. ஆமாங்க! சொல்லுங்க!

  என்றாள் கெளரி தடுமாற்றத்துடன்!

  ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே சாப்பாடு வந்திட்டிருக்குனு சொன்னாங்க, இன்னும் வந்து சேரலை? ஒறமொற எல்லாம் பசியோட காத்திட்டிருக்காங்க. உங்க ஓனர்ட்ட போனை குடு கண்ணு! நான் பேசிக்கறேன்”

  இந்த பகுதி தான் கொஞ்சம் குழப்பமா இருக்கு..அதனால என் கதை அப்படி இப்படி தான் இருக்கும்..அதெல்லாம் கண்டுக்கப்படாது…

  ஏகப்பட்ட கண்டிசனை வேற போட்டு மனுசனை டென்ஷன் பண்ணுறீங்க

  அப்புறம் எனக்கு இந்த சீரியஸ் மேட்டர் எல்லாம் வேலைக்கு ஆகாது…அதனால ….ஹி ஹி ஹி ஹி

 10. கிரி,

  உங்களை நம்பி கதையக் குடுத்திருக்கேன்.

  // அப்புறம் எனக்கு இந்த சீரியஸ் மேட்டர் எல்லாம் வேலைக்கு ஆகாது…அதனால ….ஹி ஹி ஹி ஹி //

  இதெல்லாம் வேண்டாம். கதை நீங்க இந்தியா வர்றதுக்குள்ள வரணும். பாத்துக்கோங்க! 🙂

  பெரிய எழுத்தாளர்கள்ட்ட இருந்து கதை வாங்க காத்திட்டிருப்பாங்களாம் பத்திரிக்கைக்காரங்க.

  அந்த நெலமைக்கு கொண்டு வந்திட்டிங்களே 😉

 11. என்ன ஒரு கொலைவெறி முழுக்க முழுக்க hospitalஅயே கதை முழுக்க கொண்டு போகனும் என்னு ஒரு முடிவா?? நடத்துங்கய்யா நடத்துங்க

 12. http://girirajnet.blogspot.com/2008/07/4.html

  வெயிலான் என்னோட வேலைய முடித்து விட்டேன்..நேரம் இருக்கும் போது வந்து பாருங்க :-))

 13. //வெயிலான்
  கிரி,
  உங்களை நம்பி கதையக் குடுத்திருக்கேன். //

  ஹா ஹா மன்னித்துக்கங்க சொதப்பியதற்கு..

  இனி நம்ப மாட்டீங்கன்னு நினைக்கிறேன் :-))))))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: