மொத அனுபவம்

பரிசல்காரன் ஏதாவது முதல் அனுபவத்தைப் பற்றி எழுதச் சொல்லிக் கேட்டிருக்கார்.

கல்லூரியில படிச்சு முடிஞ்சதும், கலெக்டர் வேலைக்கு காத்திட்டிருக்கப்ப, தட்டச்சு கொஞ்சம் தெரிஞ்சிருந்ததுனால, சும்மா சின்ன, சின்ன, தட்டச்சு வேலைகளுக்கு அரசு அலுவலகங்கள், வங்கிகள்னு போய் தட்டிட்டிருந்தேன் இல்லைனா தட்டழிஞ்சிட்டிருந்தேன்.

அது ஒரு மாதிரி சுதந்திரமான வேலை.  அரை நாளோ! ஒரு நாளோ சமயங்கள்ல வாரக்கணக்குல கூட இருக்கும்.  மத்த நேரம் தூக்கம், நூலகம், திரைப்படம், நண்பர்களுடன் அரட்டைனு போய்ட்டிருக்கும்.

வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல இருக்கிற தட்டச்சர்களுக்கு வேலை செய்யத் தெரியுதோ இல்லியோ, எப்படி வேலைய தட்டிக் கழிக்கிறதுனு மட்டும் தெரியும்.  சின்னதா, சீக்கிரமா தட்டச்சி முடிக்கிற வேலையெல்லாம் நோகாம முடிச்சிட்டு, பக்கம், பக்கமா எண்கள் அதிகமாக இருக்கக்கூடிய (வரவு செலவு கணக்கு, புள்ளி விவரங்கள்) தாள்கள நம்ம தலயில கட்டிட்டு போயிடுவாங்க.  ஆறு மணிக்கு மேல தான் நான் தட்டச்ச ஆரம்பிப்பேன்.  இரவெல்லாம் தொடரும்.

அங்கருக்கிற தட்டச்சு எந்திரத்துக்குள்ள ஒரு வண்டிக்கு மண்ணும், தூசும் இருக்கும்.  தட்டச்சர்களாருந்தாலும், தட்டச்சிகளா இருந்தாலுஞ்சரி மறந்தும் தொடைக்கிறதே இல்லை.  எண்ணை பிசுக்குன்றதே மருந்துக்கும் இருக்காது.  ரிப்பன்ல மை இருக்காது.  கார்பன் பேப்பர் இருக்காது.  உட்கார்ற சேருக்கு மேல ரெண்டு மூணு பெரிய ரிஜிஸ்டரப் போட்டிருப்பாங்க.  அதும்மேல உக்காந்து அடிச்சாத்தான் நல்லா எசவா இருக்கும்.

மிசினு பழய காலத்து ஹால்டாவாயிருக்கும், இல்லைனா ரெமிங்டன் மிசினாருக்கும்.  நம்ம தட்டச்சுனோம்னா செக்கு மாதிரி நகலும்.  வெரலால ஒவ்வொரு பொத்தானையும் குத்துனாத்தான் எழுத்து விழும். வெரலெல்லாம் விண் விண்ணுனு தெறிக்கும்.  காசு குடுக்குறதுக்கு மட்டும் ஏழுமட்டம் நடக்க வைப்பானுக.  அவனுகளுக்கு லஞ்சக்காசு எப்ப வருதோ அப்பந்தாம் நமக்கு குடுப்பாங்க.  அதும்மட்டும் லொங்கு, லொங்குனு அலையணும்.  சிலமட்டம் நாம கேக்க காசக் கொடுப்பானுக.  சிலமட்டம் ரொம்பக் கொறவா இருக்கும்.

இப்படியே திரிஞ்சிட்டிருந்தவன எனக்கு தட்டச்சு சொல்லிக் குடுத்த வாத்தியார் முத்துக்குமார் தான் மொத வேலையா இல்லைன்னா மொத ‘வேலை’யா ஒரு ஆடிட்டர் ஆபீஸ்ல சேத்து விட்டாரு.  கீழே ஆடிட்டர் வீடு, மேல ஆபீஸ்.  நாலஞ்சு பசங்க வேல பாக்குறானுக.  நான் போன உடனே மிசினுல உட்கார வச்சு ஒரு ஸ்டேட்மெண்ட் அடிக்க சொல்ல, அந்த லட்சணத்தப் பாத்துட்டு, சரி நாளைலருந்து வேலைக்கு வந்துரு,  மாசம் 200 ரூவா சம்பளம்னு சொல்லிட்டாங்க.

அதுக்கப்புறம் கொஞ்ச நா அங்க தான் வேல.  மொத வேல.  அதுக்கு மின்னாடி ஆபீஸ்னா எப்படிருக்கும்?  எப்படி நடந்ததுக்கணும்?  யார்ட்ட எப்படி பேசணும்னே தெரியாது.  நமக்கு முன்னால வேலைக்கு சேந்தவனுக ஆடிட்டர் இருந்தா பேசவே மாட்டானுக. உம்மணா மூஞ்சியாட்டம் உக்காந்திருப்பானுக.  சரி, ஆடிட்டர் போயிட்டாக்கூட அப்படியே இருப்பானுக.  என்னடானு கேட்டா, ஆடிட்டர் இல்லைன்னா அவர் சம்சாரம் மாடிக்கு திடீர் பிரவேசம் பண்ணி ஆச்சா! போச்சா!னு சத்தம் போடுமாம்.  பாக்குறதுக்கு, மேக்கப் போடாத காந்திமதி மாதிரி இருக்கும்.  எப்ப பாத்தாலும் மூஞ்சிய உர்ருனு வச்சுருக்கும்.

எனக்கு அடப்போங்கடா! னு ஆயிருச்சு.  இதுக்கிடையில ஆடிட்டர் பையன் அடிக்கடி இங்க வந்து உக்காந்துக்குவான்.  அவன் கொஞ்சம் அரை லூசு மாதிரி இருப்பான்.  அம்மா முந்தானியவே புடிச்சு சுத்திட்டிருக்கிற புள்ள!  நான் படிச்ச காலேசுல தான் படிச்சான். டிகிரி வேற வாங்கிருக்கான். ஆனா வேற வகுப்பு.  நம்ம சினேகிதகாரங்கட்ட ஆளு எப்படினு வெசாரிச்சேன். அவன் யாரோடயும் பேச மாட்டான்.  பிரெண்ட்னு யாருமே கிடையாது.  சாயந்தரம் காலேஜ் விட்ட அடுத்த நிமிசம் சைக்கிள்ல வீட்டுக்கு பறந்திருவான்.  கொஞ்சம், 5 – 10 நிமிசம் லேட்டா போனாக்கூட அவங்கம்மா வய்யும்பான்.

ஆகா! இந்தக் காலத்துல இப்படி ஒரு பிள்ளையா?

நாம தான் கொஞ்ச நாள்ல ஆள மாத்தீர மாட்டோம். கொஞ்சொஞ்சமா நம்ம வழிக்கு வந்தான்.  அவனுக்கு பிடிச்சு மேட்டரா பேசிட்டிருந்தா ‘ஈ’னு பல்லைக் காட்டிட்டிருப்பான்.  திடீர்! திடீர்னு அமைதியாயிருவான்.   அவம் புத்தி ஒரு நிலயில இருக்காது.

ஒரு நா இப்படித்தான் பேசிட்டிருக்க, பேசிட்டிருக்க டிவில வர்ற ஒரு வெளம்பரத்த சொல்லி,

அதுல காட்டுறானுவளே, ஒரு பாக்கெட் அது என்னப்பா?னு கேட்டான் பய.

நாம தான் எல்லா பொஸ்தவமும் படிச்சு  தெரிஞ்சு வச்சிருக்கோமாச்சா?

என்னப்பா? இதுங்கூட உனக்கு தெரியாதானு வெள்ளந்தியா கேட்டேன்.

என்னனு எங்கம்மாட்ட கேட்டேன்.  அதெல்லாம் உனக்கு போகப் போக தெரியும்னு கோவமா சொல்லிட்டாங்கன்னான்.

அடப்பாவமே!னு பரிதாபப்பட்டு அந்த விளக்கம், இந்த விளக்கம், அறிவியல் விளக்கமெல்லாம் சொல்லி (பின்னாடி வெளக்கமாத்து அடி வாங்கப்போறோம்னு தெரியாம),  அந்த பாக்கெட் இன்னின்ன மாதிரி, இதுதுக்கு உபயோகிக்கிறதுனு அவனுக்கு ஒரு வழியா புரிய வச்சேன்.

அப்படியா? நெசமாவாப்பா? னு ஆச்சரியப்பட்டு கேட்டுட்டு செத்த நேரத்துல வீட்டுக்கு போய்ட்டான்.

போனதுக்கப்புறம், அங்க இருந்த அப்ரசிண்டுக சொல்றானுக,

டேய்! நாம இங்க என்ன பேசுனாலும் அவங்கம்மாட்ட சொல்லுவான்.

எது சொன்னாலும், நம்பாம அவங்கம்மாட்ட போய் வெளக்கம் கேட்பான்.

அவங்கிட்ட எதுக்குடா சொன்னே?

அட சண்டாளனுகளா! மொதயே சொல்றதுக்கென்னடா? னு வஞ்சுட்டு அன்னிக்கு வேல முடிஞ்சு போய்ட்டேன்.

மறுநா ஆடிட்டர் மதுரைக்கு ஐடி ஆபீசு போய்ட்டாரு.  மாடிப்படி ஏறுறதுக்கு நிக்கேன்.

காந்திமதி, படார்னு வீட்டுக்கதவ தொறந்து வந்து,

நீ இனிமே வேலைக்கு வரவேண்டாம்!  சார் வந்தவுடனே, உன் கணக்க முடிக்க சொல்றேனு சொல்லுச்சு.

நான் ஒரு கூறு கெட்ட பய, விசயம் என்னனு தெரியாம, எதுக்குனு கேட்டேன்.  அதுக்கு அந்தம்மா சொல்லுச்சு – “நீ இருந்தா என் மகன் கெட்டுப் போயிருவான்”னுச்சு.  இதென்னடா கொடுமனு நெனச்சுக்கிட்டு நான் அப்படியே வீட்டுக்கு திரும்பிட்டேன்.

அட! வேலையே போற அளவுக்கு, அப்படி என்னத்தப் பத்தி தான் வெளக்கமா சொல்லித் தொலைஞ்சே?  னு கேக்குறீங்களா?

இத அழுத்தி பாருங்க.

நான் செஞ்சது தப்பா? சரியா?னு நீங்களே சொல்லுங்க.

Advertisements

Comments on: "மொத அனுபவம்" (40)

 1. வெயிலான்,

  பின்னீட்டிங்க. இவ்வளவு திறமைய வச்சுக்கிட்டு ஏன் கொஞ்சமா எழுதறீங்க?

  நல்ல நடை, நக்கல், நையாண்டி.

 2. நன்றி! அண்ணாச்சி!.

  நிறைய எழுதணும். எழுதுவேன்.

 3. உங்க ‘ஸ்லாங்’ பிரம்ம்மாதமா இருக்கு வெயிலான், பாராட்டுக்கள்.!

 4. // பிரம்ம்மாதமா இருக்கு //

  ஏகப்பட்ட ம் போட்டு பாராட்டியிருக்கீங்க தாமிரா! நன்றி!

 5. அட்டகாசமா அடிச்சு ஆடறீங்க!!!!!

  தட்டச்சு மிசினு படங்கள் படு ஜோரா இருக்கு.

  எங்கிட்டேயும் ஒரு மிசினு கிடக்கு. அதை ஒரு நாளைக்கு எடுத்து நோண்டிப்பார்க்கணும்.

 6. கொஞ்சம் பயந்துட்டே தான் எழுதுனேன்.

  நீங்களே நல்லாயிருக்குனு சொன்னதுல கொஞ்சம் தைரியம் வந்திருக்கு டீச்சர்!

  // எங்கிட்டேயும் ஒரு மிசினு கிடக்கு. அதை ஒரு நாளைக்கு எடுத்து நோண்டிப்பார்க்கணும். //

  சீக்கிரம் எடுத்து பாருங்க. துரு பிடிச்சிருக்கப் போவுது.

 7. அண்ணாச்சி, நல்ல அனுபவம்தான். வேற எதுவும் நடக்கலையே… இல்லை அதை மட்டும் எடிட் பண்ணிட்டு சொல்றீங்களா?

  முன்னால எழுதுனதை விட இந்த ரைட் அப் நல்லாயிருக்குவே.

  வாழ்த்துகள்.

 8. // வேற எதுவும் நடக்கலையே… //

  இல்லை அண்ணாச்சி! வேற எதுவும் நடக்கறதுக்குள்ள எடத்தக் காலி பண்ணிட்டேன்ல.

  // முன்னால எழுதுனதை விட இந்த ரைட் அப் நல்லாயிருக்குவே //

  எல்லாம் நீங்க தர்ற ஊக்கமும், வழி நடத்தலும் தான் அண்ணாச்சி!

 9. முதல் வேலை அனுபவத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா?

  நல்லா இருக்கு 🙂

 10. // நல்லா இருக்கு 🙂 //

  நன்றி கயல்விழி!

 11. விஜய் ஆனந்த் said:

  சூப்பருங்க!!! கும்முன்னு இருக்கு!!!

  // (பின்னாடி வெளக்கமாத்து அடி வாங்கப்போறோம்னு தெரியாம) //

  இதப்பத்தி பின்னாடி டீட்டெயிலு ஒண்ணுமில்லயே??? இம்பர்மேஷன் ப்ளீஸ்….

 12. // இதப்பத்தி பின்னாடி டீட்டெயிலு ஒண்ணுமில்லயே??? //

  நல்லாக் கேக்கிறாங்ஙய்யா டீடெயிலு……….
  நல்லாருப்பு விசய் ஆனந்து நல்லாரு………..

 13. ரொம்ப நல்லா இருக்குங்க….

 14. நன்றி விக்கி! என்ன பேர மாத்திட்டிங்களா?

 15. ஓ எழுதின விதம் நல்லாருக்கு… மொதவேலையா, சிலமட்டம்ன்னு ஊரு பேச்சு வழக்கு வேற..

  அசத்துங்க..

  நாளைக்கு என்ன நடக்குன்னு தெரியாமன்னு சொல்ல ப்ராக்கெட்ல என்னமோ எழுதி இருக்கீங்க.

  ஆனா.. கடைசியில் பார்த்தா வராதேன்னு சும்மா சொல்லிவிட்டுட்டாங்கன்னு எழுதீருக்கீங்க… 🙂

  கோச்சுக்கக்கூடாது சும்மா கேட்டேன்..

 16. // ஓ எழுதின விதம் நல்லாருக்கு… //

  நன்றி!

  // நாளைக்கு என்ன நடக்குன்னு தெரியாமன்னு சொல்ல ப்ராக்கெட்ல என்னமோ எழுதி இருக்கீங்க //

  ஹி! ஹி! நீங்க எதிர்பாத்த மாதிரி எதுவும் நடக்கல 🙂

 17. தப்பு உம்மேல தான் தலை. ஒரு லூசுப் பயலுக்குப் போய் க்ளாஸ் எடுத்திருக்கியே…

 18. // தப்பு உம்மேல தான் தலை //

  ஒத்துக்கறேன் ‘தல’.

  // ஒரு லூசுப் பயலுக்குப் போய் க்ளாஸ் எடுத்திருக்கியே… //

  இருவது வயசுப்பயலாச்சே! டிகிரி வேற முடிச்சிருக்கானே! இப்படி வெவரம் தெரியாத பயலா இருக்கானேனு நம்பி கிளாஸ் எடுத்துட்டேன் 😦

 19. ///
  இருவது வயசுப்பயலாச்சே! டிகிரி வேற முடிச்சிருக்கானே! இப்படி வெவரம் தெரியாத பயலா இருக்கானேனு நம்பி கிளாஸ் எடுத்துட்டேன்
  ///

  நீ ரொம்ப நல்லவன்னு தான் சொல்லணும்

 20. ஹாஹா.. சூப்பரா இருந்துச்சு உங்க அனுபவம்… :-))))

 21. நன்றிங்க சின்னப்பையன்!!!!!

 22. வேள ராசியோட இந்தப் பதிவப் பாருங்க : குழந்தைகள் கற்றுக் கொடுக்கும் பாடம்.

  http://velarasi.blogspot.com/2008/07/blog-post_29.html

 23. தாமதமா வர்றதுக்கு மன்னிக்கணும்.

  மத்த எல்லாரையும் விட உங்ககிட்ட நேர்ல அதிகமா பேசறவன்ங்கறதால சொல்றேன். இத சொல்றதுக்கு நீங்க சங்கடப்படக் கூடாது. சங்கடப் பட்டாலும் பரவால்லைன்னு எழுதறேன். ஏன்னா, என்னால இத சொல்லாம இருக்க முடியல.. ஆனா, எப்படிச் சொல்லன்னுதான் தெரியல..
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  மனுஷனாயா நீ?
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  இவ்ளோ நல்ல எழுத்து நடையை வெச்சுகிட்டு, எல்லாரோட பதிவையும் ஒரு நாள் விடாம படிச்சுகிட்டு, ஆராய்ஞ்சுகிட்டு இருக்க. என்னோட மொக்கையெல்லாம் படிக்கற நேரத்துல டெய்லி இல்லாட்டியும், வாரத்துக்கு மூணு பதிவாவது போடலாம்ல?

  உங்ககிட்ட நேர்ல உக்கார்ந்து பேசற மாதிரியே இருந்துச்சு ரமேஷ்! ச்சும்மா, முகஸ்துதிக்காக சொல்லல. அவசியமும் இல்ல. நிஜமாச் சொல்றேன். அபாரமான ரைட்டிங் ஸ்டைல்! விட்டுடாதீங்க. நிறைய எழுதுங்க.

  அப்புறம், உங்க `மொத’ பத்தி சொல்லணும்ன்னா, வித்தியாசமான சப்ஜெக்ட்டை எடுத்துகிட்டிருக்கீங்க! நடையுலயும் வித்தியாசப்படுத்திருக்கீங்க. நல்ல ஸ்கிரீன்ப்ளே இருந்தது. உங்க எழுத்து, படிக்கறவங்கள, அப்படியே உங்க கூடவே இருந்து நீங்க அவனுக்கு சொல்லிக் குடுக்கறத, ஆடிட்டர் மனைவிகிட்ட திட்டு வாங்கறதையெல்லாம் பார்க்கறா மாதிரியே அமைஞ்சிருக்கு!

  நல்ல (அதே) சமயம் விவகாரமான சப்ஜெக்டை லாவகமா கையாண்டு ஜெயிச்சுட்டீங்க! வேற என்ன சொல்றதுன்னே தெரியல!

  இப்படி ஒரு எழுத்தை உங்ககிட்ட இருந்து வர வெச்சதுக்கான துவக்கமா என் பங்கு இருந்ததுக்காக பெருமைப்படறேன்!

  K E E P I T U P!

 24. // தாமதமா வர்றதுக்கு மன்னிக்கணும் //

  என்ன க்ருஷ்ணா இதெல்லாம்……..

  // நல்ல (அதே) சமயம் விவகாரமான சப்ஜெக்டை லாவகமா கையாண்டு ஜெயிச்சுட்டீங்க! வேற என்ன சொல்றதுன்னே தெரியல! //

  இதுக்கு தான் ரொம்ப யோசிச்சேன். நீங்களே ஜெயிச்சுட்டீங்கனு சொல்லிட்டிங்க. நன்றி!

  உண்மையிலேயே இந்த விசயத்தை எழுதணும்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டிருந்தேன். உங்க மூலமா சாத்தியமாயிருக்கு.

  மனந்திறந்த பாராட்டுக்கு நன்றி!!!!!!

 25. அப்பறம் இன்னொரு விஷயம்..

  நான் வேற பாக்கெட்டை நெனைச்சேன்!

  இந்தப் பாக்கெட்ன்னா, அவன்கிட்ட நீங்க சொல்லிக்குடுத்ததுல தப்பே இல்ல. இது சுகாதாரத்துக்கு நல்ல ஒரு விஷயம்தான்.

  நம்ம ஊர்லதான் சாராயத்தை வெளிப்படையாவும், கேர்ஃப்ரீயை மறைச்சு பேப்பர் சுத்தியும் குடுக்கற மனோபாவம் இருக்கு!

  நான் வாங்கறப்ப, வெட்கப்படாம கேட்டு வாங்கி, சுத்தறதுக்கு பேப்பர் தேடினா `பரவால்ல குடு’ -ன்னு வாங்கீட்டு போவேன்!

 26. // நான் வேற பாக்கெட்டை நெனைச்சேன்! //

  அதுக்குத்தானே நான் சஸ்பென்ஸ் வச்சிருந்தேன் 😉

  // நம்ம ஊர்லதான் சாராயத்தை வெளிப்படையாவும், கேர்ஃப்ரீயை மறைச்சு பேப்பர் சுத்தியும் குடுக்கற மனோபாவம் இருக்கு! //

  இது கடைக்காரரோட மனோபாவம் இல்லை. நம் பெண்களின் மனோபாவம். அவங்க தானே பேப்பர்ல சுத்தி தரச்சொல்லி கேட்கிறாங்க.

  // நான் வாங்கறப்ப, வெட்கப்படாம கேட்டு வாங்கி, சுத்தறதுக்கு பேப்பர் தேடினா `பரவால்ல குடு’ -ன்னு வாங்கீட்டு போவேன்! //

  அது தான் க்ருஷ்ணா!

 27. கானா பிரபா said:

  கலக்கல் பதிவு 😉 அன்றைக்கே படிச்சிட்டு பதில் போடமறந்திட்டேன்.

  இதுமாதிரி எழுத்தாளர் சுஜாதாவும் தன் பைலட் அனுபவத்தை எழுதியிருக்கார்.

 28. அதானே! எங்கேடா பிரபுவக்காணோம்னு தேடிட்டிருந்தேன்.

  நன்றி! பிரபு!

  எழுத்தாளர் சுஜாதாவும் இது மாதிரி 😉 எழுதிருக்காரா?
  படிக்கிறேன்.

 29. ” சுவைபட எழுதியிருக்கிறீர்கள்.

  நன்கு உள்ளது.

  அந்தப் பையனிடம் என்னவென்று விவரித்தீர்கள்?

  விளக்கவே இல்லையே?

  நிறையப் பையன்களுக்குப் பயன்படுமே? “

 30. // அந்தப் பையனிடம் என்னவென்று விவரித்தீர்கள்?

  விளக்கவே இல்லையே?

  நிறையப் பையன்களுக்குப் பயன்படுமே? //

  வலையுலக மக்களே! இவ்வளவு பேர் படிச்சீங்களே! யாருக்காவது இப்படி ஒரு கேள்வி கேட்கணும்னு தோணுச்சா?
  ‘அது’க்குனு ஒருத்தர் இருக்கார். அவர் தான் லதானந்த் அங்கிள்!

 31. // அந்தப் பையனிடம் என்னவென்று விவரித்தீர்கள்?

  விளக்கவே இல்லையே?

  நிறையப் பையன்களுக்குப் பயன்படுமே? //

  இதெல்லாம் எழுதி எனக்கு வெளக்கமாத்து அடி வாங்க வைக்கணும்னு ஆசைப்படறீங்க. 😉

  இது நாயமா?

  அது ‘ க்கு தான் நீங்க இருக்கீங்க.

  ஆனா, நீங்களே ***** னு நாலஞ்சு நட்சத்திரம் போட்டு சமாளிச்சிருக்கீங்க.

 32. ரொம்ப தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். இப்பொதான் கொஞ்ச நாளாக பரிசல் பழக்கம். அவர்தான் இங்கயும் இழுத்துட்டு வந்துருக்காரு. கொங்கு தமிழ்ல பதிவுகள படிக்கறதே ஒரு தனி சொகம். எல்லரு சொல்லற மாதிரி நீங்க லேட்டா வந்தாலும், லொள்ளோடதான் வந்திருக்கீங்க. வாழ்துக்கள்.

 33. ரொம்ப நல்லா இருக்குங்க,நிறைய எழுதுங்க

 34. ம்….. நித்தி! ரொம்ப நாளாச்சு! எங்கே இருக்கீங்க இப்போ?

  நன்றி! நித்தி. நிறைய எழுதுறேன். அடிக்கடி வாங்க.

 35. ரொம்ப தாமதமாக வந்ததற்கு மன்னியுங்க

 36. இன்று தான் உங்கள் வலைப்பக்கத்தை வாசிக்கிறேன்.

  ‘மொத அனுபவம்’ நன்றாக உள்ளது.

  உங்கள் எழுத்து நடையும் நன்றாக இருக்கிறது.

  படிப்பவர் கண்ணில் காட்சி ஓடுகிறது.

  நிறைய எழுதுங்கள்.

 37. புதுசா வந்துருக்கீங்க. ஒரேடியா பாராட்டிட்டீங்க.

  அலுவலக வேலைப்பளு காரணமாக நிறைய எழுத முடிவதில்லை.

  அடிக்கடி நம்ம பக்கத்துக்கு வாங்க ராசு!

 38. அன்பின் வெயிலான்

  அருமையான இடுகை – கத நல்லாச் சொல்றீங்க – மிக மிக ரசித்தேன் – பயலக் கெடுத்துருப்பீங்கன்னு ( வேற பாக்கெட்னு நினைச்சென் ) நினைசென். பரவால்ல

  தட்டச்சு இயந்திரங்கள் படங்கள் தேடிப் பிடிச்சுப் போட்டது நன்று – நானும் கொஞ்ச காலம் தட்டச்சிருக்கேன்

  கத சொல்ற விதம் எனக்குப் பிடிச்சிருக்கு

  நல்வாழ்த்துகள் வெயிலான்
  நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: