ஒற்றை மான்

p1260059a

பேசிக் கூடினோம் கூடிப் பேச
தமிழ் பேச தமிழ்ப் பிரியனே காத்திருக்க
ஓரிரவு ஒரு கூட்டினிலடைந்தோம்

பரிவுடன் கவனிக்க வடகரையாரிருக்க,
கலாய்த்தலுக்கு கார்க்கியும் பரிசலும்
கூடவே கும்கியும் சஞ்சயுமாய்
அவ்விரவை உண்டுரையாடிக் கழித்தோம்

தாமத வண்டியில் தாமிரா வர
புது வண்டியில் செல்வாவும் சேர
பின் பெருவண்டியில் சிறுபயணம்

இடைநிறுத்தி இளைப்பாறுகையில் வந்த
இடையூரகற்றி இரவு வரை
இடைவிடாப் பயணம் நீலமலைக்கு

இடையிடையே செவி சிரி கறி
விழி விருந்து – பின் சித்தருக்கு
காத்திருந்து அல்வா கொடுத்து வரும்
வழியில் எங்களுக்கே கிடைத்தது

நாற்புறமும் இயற்கையோடு
மின்வேலி நடுவே உய்வறை
இரவுணவுடன் இன்பப்பேச்சு

இடையிடையே விளக்கணைத்து
வேலிக்குப்பின் விலங்கு தேடி
குளிராடை பகிர்ந்து குறை தூக்கம்

காலையில் வனமே வாசலில்
கண்ணுக்கெட்டும் தூரத்தில்
மான்கள் மயில்கள் மனம் நிறைக்க

பாலில்லா பானத்தை தாமிராவுடனானும்
பசிக்கிதமாய் குளிர்பானங்களுடனும்
கும்கியுடனான செல்ல விவாதங்களுடனும்
அனைவரும் அறையில்

அறையருகே தாமிராவுடனமர்ந்து
குளிர்காற்றும் இளவெயிலுமடிக்க
இனிய அளவலாவல் மரத்தடி
மூங்கிலிருக்கையிலமர்ந்து

மாவுணவுடன் ரொட்டி முட்டையும்
மலைப்பிரதேச தேநீரும் கூடவே
தீந்தமிழும் குடித்ததென்ன…

சுழித்தோடிய ஆற்றில் குதித்தாடியபடி
இடை உடை நீர் நனையமர்ந்து
வண்ணதாசனும் பாலகுமாரனும்
சுஜாதாவுமாய் தமிழ்ப்பேச்சு
நீரோடையில் நீராடையிலும்

நானொரு ஒரு தனிப்பறவை
தனித்த போது காணக்கிடைத்த
காட்டெருமைகளென்ன…

இருபுறமும் மூங்கில் மரங்களடர்ந்த
ஓரிறக்கத்தில் ஓர் சிற்றோடை
தனித்து கண்ட ஓடை நீரருந்திய
ஒற்றை மானழகென்ன…

இனியுமொரு முறையும் கூடுவோமென
கூடிப்பேசி கூடுகளுக்கு பிரிந்தோம்.

********

தொடர்புடைய சுட்டிகள்

பரிசல்காரன் – செல்வேந்திரன்!
தாமிரா – பதிவர் சந்திப்பு
செல்வேந்திரன் – பதிவனாய் ஆனபயன்
ஊட்டியும் பதிவர்களும் – 1

Advertisements

Comments on: "ஒற்றை மான்" (50)

 1. வெயிலான்… ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கப்பறம் எழுதினாலும் சும்மா சூப்பரா…. நன்றி…

  உங்கள் தமிழ்த் தேனை ரொம்ப ரசித்து சுவைத்தேன்…

 2. ண்ணா.. நீங்க அவரா? வாய்ப்புகளே இல்ல… வார்த்தைகளே வரவில்லை.. கையக் கொடுங்க.. ச்சே கால கொடுங்க

 3. நச்!

  எப்படிய்யா இப்படியெல்லாம்!!!

  பாரேன்.. இந்தப் பையனுக்குள்ளயும் எதோ இருக்கு!

  (நான் பதிவு போட்டுட்டேன்.. அதுக்கு சுட்டி குடுத்துடுங்க)

 4. சுற்றுலா பற்றிய உனது கவிதை பிரமாதம் ரமேசு.

 5. நீலகிரியே அல்லோல கல்லோலப் பட்டிருக்குமே…. யானைஒன்னு தான் மிஸ்சிங் (நான் வரலைல்ல அதத்தான் சொல்றேன்)

 6. // உங்கள் தமிழ்த் தேனை ரொம்ப ரசித்து சுவைத்தேன்… //

  நான்கைந்து தமிழ்த் தேனீக்களுடன் சுற்றி வந்ததாலோ என்னவோ! நமக்கும் கொஞ்சம் தமிழ் வருகிறது.

  நன்றி மகேஷ்.

 7. நன்றி கார்க்கி, பரிசல் – சுட்டி கொடுத்திடறேன்.

  நன்றி அண்ணாச்சி – இதுக்குப் பேர் தான் கவிதையா? இதுக்குப் பேரும் கவிதையா?

 8. அடுத்த முறை எல்லோரும் கலந்து கொள்ளும்படியாக ஏற்பாடு செய்து விடுவோம் விஜய்!

 9. ஓ பாட்டாவே படிச்சிடிங்களா
  நல்லாருக்கு
  அங்கங்க மானே தேனே பொட்டிருக்கலாம்!

  சிறந்த படைப்பாளிகள் அபூர்வமாய் எழுதுவது ஏன்?
  ஒருவேலை அபூர்வமாய் எழுதுவதால் தான் அவர் சிறந்த படைப்பாளி ஆகிறாரோ?

  அடிக்கடி எழுதுவதை விட அடிக்கிற மாதிரி எழுதுறது ரொம்ப நாளைக்கு மனசுல நிக்குது!

 10. // அங்கங்க மானே தேனே பொட்டிருக்கலாம்! //

  மான் இருக்கு. தமிழ்த் தேனும் இருக்கு. அப்புறமென்ன?

  // அடிக்கடி எழுதுவதை விட அடிக்கிற மாதிரி எழுதுறது ரொம்ப நாளைக்கு மனசுல நிக்குது! //

  அடிச்சு எழுதுனீங்களானு தெரியல. ஆனா அடிச்சு ஆடியிருக்கீங்க அருண். நன்றி

 11. வெயிலானைப் பருகியதில்
  குளிர்ந்தவர்கள் நாங்கள்.
  குழந்தையின் திருவாயுள்
  உலகமே தெரிந்ததாம்.
  குழந்தையின் பன்விரலில்
  பெருங்கவிதை தெரிகிறது
  தாமிராவின் பதிவில்
  தங்கப்பதக்கம் உனக்குத்தான்.
  கொழுகொழு நண்பனே
  எழுதவும் செய் அவ்வப்போதாவது.

  அனுஜன்யா

 12. வாவ்! வித்தியாசமான பயணக் கவிதை!!

  //தனித்த போது காணக்கிடைத்த
  காட்டெருமைகளென்ன…

  இருபுறமும் மூங்கில் மரங்களடர்ந்த
  ஓரிறக்கத்தில் ஓர் சிற்றோடை
  தனித்து கண்ட ஓடை நீரருந்திய
  ஒற்றை மானழகென்ன…//

  படிக்க அருமையான வரிகள்..மேலும் பல பயணங்கள் வாய்க்கட்டும்..(எங்களுக்கு கவிதைகள் கிடைக்குமல்லவா..;-)..)

  படம் ரொம்ப நல்லாயிருக்கு…பயணத்தில் எடுத்ததா?

 13. மிக அருமை தல‌

 14. மிக மிக அருமையான பயணக்கவிதை வெயிலான்…

  நானும் வந்திருக்கலாமோ என்று ஏங்க வைக்கிறது…

  அதெல்லாம் சரி கொடுத்த அல்வாவை திருப்பி வாங்கினது நல்லாவா இருக்கு..?

  // பின் சித்தருக்கு
  காத்திருந்து அல்வா கொடுத்து வரும்
  வழியில் எங்களுக்கே கிடைத்தது //

  என்னதான் இருந்தாலும் நான் இதை ஏத்துக்க முடியாதுங்க…

 15. // எழுதவும் செய் அவ்வப்போதாவது //

  அப்படியே செய்கிறேன் ஐயா!

  பதிவிற்கு பின்னூட்டம் வரும். பின்னூட்டமே கவிதையாகக் கிடைத்திருக்கிறது.

  நன்றி! நன்றி! அனுஜன்(ஐ)யா.

 16. வெயிலான் கடைசி ஓவர் வரைக்கும் அமைதியா இருந்துட்டு…. காட்டடி அடிச்சிட்டீங்களே…. ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு கொடுத்துவிட்ட பவுலர்களானோம்.

  தமிழ்நாட்டில் ஏழு மணிக்கு மேல் ஒலிக்கும் “செம… செம… செம…”, “மைண்ட் ப்ளோயிங்…” “யூ ராக்ஸ்…” எல்லாமே உங்களுக்குத்தான்….

 17. // படிக்க அருமையான வரிகள்..மேலும் பல பயணங்கள் வாய்க்கட்டும்..(எங்களுக்கு கவிதைகள் கிடைக்குமல்லவா..;-)..)

  படம் ரொம்ப நல்லாயிருக்கு…பயணத்தில் எடுத்ததா? //

  நன்றி சந்தனமுல்லை.

  உங்கள் பெயரும் பயணத்தில் அடிபட்டது. தாமிராவின் பதிவில் தலைப்பில் வந்தீர்களே, அதனால்.

  பயணத்தின் போது படம் எடுத்தவர் பெயர் கிருஷ்ணகுமார் என்ற பரிசல்காரன்.

 18. // மிக அருமை தல‌ //

  நன்றி தல.

 19. // நானும் வந்திருக்கலாமோ என்று ஏங்க வைக்கிறது… //

  லாமே…

  // அதெல்லாம் சரி கொடுத்த அல்வாவை திருப்பி வாங்கினது நல்லாவா இருக்கு..? //

  தாமிரா திருநெல்வேலியிலிருந்து எல்லோருக்கும் அல்வா வாங்கி வந்தார். அதிலிருந்து சித்தருக்கு ஒரு அல்வா பொதி கொடுத்தோம்.

  பின் எங்களுக்கும் ஒவ்வொரு அல்வா பொதி கிடைத்தது.

  நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் சித்தர் எங்களுக்கெல்லாம் அல்வா கொடுத்து விட்டதைப் போன்ற அர்த்தம் தொனிக்கிறது.

 20. // வெயிலான் கடைசி ஓவர் வரைக்கும் அமைதியா இருந்துட்டு…. காட்டடி அடிச்சிட்டீங்களே…. ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு கொடுத்துவிட்ட பவுலர்களானோம். //

  நன்றி செல்வா!

  ஆனாலும், இது ரொம்ப “ஓவர்”

 21. நல்லா இருக்கு பயணக்கவிதை..

  ஓ பாட்டாவே படிச்சிட்டீங்களா கமெண்ட் நல்லாருக்கு.. 🙂

 22. கவிதையும் இல்ல பாட்டும் இல்லைங்க. ஏதோ கிறுக்கியிருக்கிறேன். நன்றி!

 23. //நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் சித்தர் எங்களுக்கெல்லாம் அல்வா கொடுத்து விட்டதைப் போன்ற அர்த்தம் தொனிக்கிறது.//

  அல்வா கொடுத்தாரோ….ஆட்டுக்குட்டி கொடுத்தாரோ…
  எனக்கு தெரியாதே…

  ஆனா ஏதோ ஒண்ணு கொடுத்த மாதிரி தெரியுது…!!!
  என்கிட்ட சொன்னா புடுங்கிக்கவா போறேன்…?

 24. // ஆனா ஏதோ ஒண்ணு கொடுத்த மாதிரி தெரியுது…!!!
  என்கிட்ட சொன்னா புடுங்கிக்கவா போறேன்…? //

  யோவ் சாமி, என் வாயைப் புடுங்காதேய்யா.

 25. ரசித்து எழுதியிருக்கிறீர்கள்,மிக நன்றாக வந்திருக்கிறது
  //இருபுறமும் மூங்கில் மரங்களடர்ந்த
  ஓரிறக்கத்தில் ஓர் சிற்றோடை
  தனித்து கண்ட ஓடை நீரருந்திய
  ஒற்றை மானழகென்ன…//

  கண்முன்னே விரிகிறது காட்சி

 26. இதுவரை பயணம் பற்றிய செய்தியை தொடராகவோ கட்டுரையாகவோ தான் படிச்சிருக்கேன் இன்னைக்குத்தான் கவிதையா படிக்குறேன் கலக்கல் தல.

  அடிக்கடி எழுதுங்க.

 27. பேர் மட்டும் இருக்குது. பின்னூட்டம் எங்கே சஞ்சய்? 😉

 28. பின்ராருப்பா அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது

  வெயிலான் அருமையா எழுதி இருக்கீங்க..ஜாலியோ ஜிம்கானாவா இருந்து இருக்கீங்க போல 😉 நடத்துங்க

 29. // கலக்கல் தல //

  நன்றி கார்த்தி.

 30. கிரி,

  டி.எஸ் பாலையா வசனத்தை சொல்லியிருக்கீங்க. நன்றி!

  சின்னகிரி என்ன பண்றார்?

 31. அடடா…பயணக் கவிதையா இது? ரொம்பவே நல்லாத்தான் இருக்கு.
  பயணக் கட்டுரை தான் படிச்சதா ஞாபகம்,இது பயணக் கவிதை !உங்கள் நண்பனாக அனைத்தையும் பகிர்ந்து கொள்ளனு கேப்சன் வச்சுட்டு பின்னால திரும்பி உட்கார்ந்துகிட்டா என்ன நியாயம் வெயிலான் ? உங்க பதிவுகள் “காக்காப்பொன்…சொர்க்கம் ஒரு தீராத்தாகம்…ஒற்றை மான்…வரை வாசித்தேன்…நல்ல இயல்பான நடை .

 32. // அடடா…பயணக் கவிதையா இது? ரொம்பவே நல்லாத்தான் இருக்கு. //

  நன்றி மிஸஸ். டவுட். என் எல்லா பதிவுகளும் படிச்சிட்டிருக்கீங்கன்றதுல ரொம்ப மகிழ்ச்சி!

 33. கவிதை நடையில் கலக்கி இருக்கிங்க, ரமேஷ் !

  சூப்பர் !

 34. நாம் ஏன் இத்தனை நாளா இதுக்கு பின்னூட்டம் போடாம இருந்தேன்? ம்.. சரி நாளைக்கு திரும்பவும் வர்றேன்..

 35. ‘வருகை’க்கும் வாழ்த்துக்கும் நன்றி கோவியாரே!

 36. // சரி நாளைக்கு திரும்பவும் வர்றேன்.. //

  கொஞ்சம் குழப்பத்தில இருக்கீங்கனு நினைக்கிறேன். எதுக்கும் நாளைக்கு வர்றதுக்கு முன்னால கும்கிட்ட பேசித் தெளிஞ்சு வாங்க தாமிரா.

 37. கலக்கல் வெயிலான்.. வரிக்கு வரி அசத்திட்டீங்க.. முதல் வரியில ஆரம்பிச்ச பிரமிப்பு கடைசி வரி வரைக்கும் அதிகமாகிட்டே போகுது.. பாராட்டுகள்.

 38. நன்றி வெண்பூ!

  இன்னும் நீங்க இயல்பு நிலைக்கு திரும்பலியா?

 39. நல்லாருக்குதுங்க. ஏங்க வைக்கும் அனுபவம். நல்லா பதிவு பண்ணியிருக்கிறீங்க.
  முத்துவேல்.

 40. அட! இது… அந்த பயணப்பதிவா கலக்கல்…

 41. கவிதை நடையில் ஒரு பயணப்பதிவு.நின்று நிதானமாக வாசித்து மற்றொரு பின்னூட்டம் இடுகிறேன்

 42. நன்றி முத்துவேல், தமிழன் – கறுப்பி.

  கவிதை மாதிரி எழுதுனவுடனே கவிஞர்களின் வருகையா இருக்கு.

 43. // நின்று நிதானமாக வாசித்து மற்றொரு பின்னூட்டம் இடுகிறேன் //

  திரும்பவும் நிச்சயம் வாங்க.

 44. எல்லோரும் ஒரே அறிவு ஜீவிகளா இருக்கீங்களா. இங்கன எட்டிப் பார்ப்பதற்கு கொஞ்சம் கூச்சமா இருக்கு.

  வந்ததைத் தெரிவிச்சுட்டேன்.

  எதுவும் தப்பிருந்தால் மன்னிச்சுக்கோங்க.

 45. பதிவராக இருப்பதன் பயன் இன்பத்தைப் பகிர்தலும் என்பதை உணர்த்துகிறது உங்கள் பயணம்!!!

  Dr.Deva.

 46. வெயிலான் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: