மதகு

 பென்ஸ்டாக் (Penstock) என்ற இடத்துக்கு நண்பர்களுடன் சில மாதங்களுக்கு முன் சென்றிருந்தேன். picture-010

 

அது மலை முகட்டிலமைந்துள்ள அமைதியான இடம்.  திருப்பூரிலிருந்து காலை 10 மணிக்கு கிளம்பி மேட்டுப்பாளையம் – மஞ்சூர்.  மதிய உணவின் பின், காத்திருந்த வன அலுவலருடன் பனி மூட்டத்தினிடையே பென்ஸ்டாக் சென்றடைந்தோம்.

 picture-016

 

பயணக்களைப்பில் நண்பர்கள் படுக்கைக்கு சென்று விட, அவ்விடத்தின் தட்ப வெப்ப நிலை மிகவும் இதமாக இருந்தது.  கை வசம் நண்பர் கும்கி கொடுத்த ஒரு சில புத்தகங்கள் இருந்தன (அடுத்த மாதம் வர்றப்பவும் புத்தகங்களை மறந்திடாதீங்க).   பரிசல்காரன் எல்லா புத்தகத்தையும் வாங்கீட்டுப் போயிட்டார். சரி. அத விடுங்க. அந்த புத்தகங்களை ஒரு முறை பார்த்த வடகரை வேலன் அண்ணாச்சி ஒரு புத்தகத்தை சுட்டி, இப்புத்தகத்தை பயணத்திலோ, அல்லது சத்தசூழலிலோ படிக்க வேண்டாம்.  மிக அமைதியான மன/சூழ் நிலையில் இப்புத்தகம் படிக்கவென்றே நேரம் ஒதுக்கி படியுங்களென்றார்.  அப்புத்தகத்தை வாசித்தேன். 

அண்ணாச்சி சொன்னது உண்மை தான்.  கடிதங்கள் ஒவ்வொன்றும் கடப்பதற்கு முன், எவ்வளவு வர்ணனைகள், விசயங்கள்.  அப்புத்தகம் வண்ணதாசன் கடிதங்கள்

 picture-030

 அந்த மலை முகட்டில் நான்கு கட்டிடங்கள்.  முதல் கட்டிடத்தில் குடும்பத்துடன் வன ஊழியர்.  இரண்டாவது கட்டிடத்தில் நாங்களிருந்தோம். தவிர தனித்தனியே மூன்று தங்கு கட்டிடங்கள்.  அனைத்தும் வனத்துறைக்கு சொந்தமானது.  அனுமதிக்கு பின்னரே தங்க முடியும்.

கட்டிடங்களுக்கு வலப்புறத்தில் வேலி, இடப்புறம் மலை.  கட்டிடங்களுக்கு பிறகு, கடைசியில் ஒரு காட்சி முனை (view point).  ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டதாய் இருக்கலாம்.  (வெள்ளைக்காரன் ரசனைக்காரன் தான்!) அங்கிருந்த இருக்கையில் இங்கிலாந்து ராஜா, ராணி உருவங்கள் இருந்தன.  இவ்விடத்திலிருக்கும் காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் வந்து பத்து மணித்துளிகள் பார்த்து விட்டு சென்று விடும் இடமாக தான் இருந்து வருகிறது.  

 pa270397

 ”பண்டிகை நாளும், அதுவுமா இது ஒரு இடம்னு, இங்கே கூட்டீட்டு விட்டானே படுபாவி”  என தூங்கி எழுந்த நண்பர்களின் முகம் சொல்லியது.  எனக்கும் அதே எண்ணம்.  ஆனால் வெளிக்காட்ட முடியவில்லை (அடி விழுமே 😉 ).  பின், நல்ல அமைதியான இடம், அடர்த்தியான பனி மூட்டம்.  வேற்று மனிதர்களைப் பார்க்க, எட்டு கிலோ மீட்டர்கள் போக வேண்டும் என அப்படி, இப்படிப் பேசி மனமாற்றம் செய்தேன்.

pa270505

வெண்பனி மூடிய காட்சி முனைக்கு நண்பர்களை வரச்செய்து, இருக்கைகளிலமர்ந்து, தேநீருடன் கைப்பேசியிலிருந்து மென் பாடல்கள் சிலவற்றை ஒலிக்க செய்து கொண்டே பேசிக் கொண்டிருந்தோம்.  சிறிது நேரத்தில் வெண்பனி சிறிது சிறிதாய் விலக,  கீழிலிருக்கும் ஊர்களின் மின் விளக்கு வெளிச்சம் மின் மினிகளாய் தெரிந்தது.  மறக்கவொண்ணா அக்காட்சி வானிலிருந்து கீழிருக்கும் நட்சத்திரங்களை பார்ப்பதை ஒத்ததாய் இருந்தது. 

மின்விளக்குகளை வைத்து நண்பர்கள், ஊர்ப் பெயர்களை அடுக்கினார்கள்.  காலையில் வெளிச்சத்தில் பார்த்த போது அவர்கள் சொன்ன ஊர்களில் ஒன்று கூட உண்மையில்லை.

pa260386a
நண்பர் ராஜன்

கம்பளி மூடியமர்ந்திருந்த நண்பரிடம், கம்பளி விலக்கி இந்த ஒரு ஏகாந்த நிலையையும் அனுபவிக்கச் சொன்னேன். நண்பர்கள் அனைவரும் உற்சாக மனநிலைக்கு மாறி விட்டிருந்தனர். வன ஊழியர் திரு. முத்துராஜ் வீட்டிலிருந்து சப்பாத்தியும், கறியுணவும் நாங்களமர்ந்திருந்த காட்சி முனைக்கே வந்தது. அன்றைய இரவு அனைவருக்குமோர் மறக்கவியலா மகிழரவாயிருந்தது. 

 காலை ஏழு மணிக்கு அறையிலிருந்து வெளியே சென்று, திரும்பவும் காட்சி முனைக்கு சென்றேன்.  காணுமிடமெங்கும் பச்சை பசேலென மலைகள்…. மலைகள்….. மலைகள்…..

 pa270393

 

நண்பர்களனைவரையும் எழுப்பி கூட்டி வந்து காண்பித்தபோது மிக்க மகிழ்ந்தனர்.  நேற்றிரவு இவ்விடத்தில் அமர்ந்து உணவு உண்ணும் போது சாதாரணமாக நினைத்தோம்.  இத்தகையதொரு இயற்கைச் சூழ்நிலையில் 1885 அடி உயரத்தில் இரவைக் கழித்திருக்கிறோம் என சொன்னவுடன், அவர்களுக்குள்ளாகவே வியந்து பேசிக் கொண்டனர். 

pa270417

பின் அவ்விடத்திலிருந்து மேலே செல்லும் சாலையில் சிறிது தூரம் நடந்தால் இன்னொரு காட்சி முனை.  அங்கிருந்து பார்த்த காட்சிகளும் மிகவும் ரம்மியமாயிருந்தது.

pa270413

அங்கிருந்து சிறிது தொலைவில் ஒரு சுழல் சக்கர பாரந்தூக்கி (Winch) நிலையத்துக்கு சென்றோம்.  ரஜினி விஞ்ச் ஓட்டுநராய் நடித்த முள்ளும் மலரும் படம் எடுத்த இடமென்று ஏற்கனவே வன ஊழியர் சொல்லியிருந்தார்.  பார்க்கும் காட்சியிலெல்லாம் படக்காட்சிகளே மனக்கண்ணில் தெரிந்தது.  மக்கள் சினிமாவை சம்பந்தப்படுத்தி அறிமுகப்படுத்துவதை என்றைக்கு விடப்போகிறார்களோ?

picture-0661

இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட மோட்டார்களே இன்னுமிருக்கின்றன.  நல்ல உறுதியான வலிமை மிக்க இரும்பு கயிறுகள் ஆட்களமர் மரப்பெட்டிகளை இழுப்பதற்கு உதவுகிறது.  விஞ்ச் ஆங்கிலேய ஆட்சியின் போது தண்ணீர் குழாய் பராமரிப்புக்கு அமைக்கப்பட்டிருக்கிறது.  இன்றளவும் இயங்கு நிலையிலிருக்கிறது.  இதில் பயணம் செய்ய மின்சார வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.  விஞ்சில் மூன்று கிலோ மீட்டர்கள் பயணிக்க எண்பது நிமிடங்களாகும்.  எனவே இப்போதெல்லாம் பயணிக்க யாரும் விரும்புவதில்லை.

picture-099

 

கீழே கெத்தை என்ற ஊரிலிருக்கும் மின் உற்பத்தி நிலையம் வரை விஞ்ச் இருப்பு பாதை செல்கிறது.  மின் உற்பத்தி நிலையம் வரை செல்ல வேண்டுமென்றால், வழியில் மூன்று விஞ்ச் நிலையங்களில் நீங்கள் பெட்டி மாறி அமர வேண்டும்.  மின் ஊழியர்கள் மட்டுமே இப்போது இதில் பயணிக்கிறார்கள்.

pa270656b

பெரிதாக்கி பார்த்தால் ஒரு விசயம் தெளிவாகப் புரியும்

மலையிலுள்ள மிகப்பெரிய தொட்டியிலிருந்து நீர் மதகுகள் மூலமாக ஐந்து பெரிய வார்ப்பிரும்புக் குழாய்களில் பயணித்து, மலையடிவாரத்திலிருக்கும், காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மின்னுற்பத்தி நிலையம் வந்தடைகிறது.  பல கிலோ மீட்டர்கள் பயணித்து வந்த நீரின் வேகத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். கனடா கூட்டுறவுடன் ஆரம்பிக்கப்பட்ட இம்மின்நிலையம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

 pa270594

எமரால்ட் அணை, அவலாஞ்சி அணை, அன்னமலை கோவில் போன்ற இன்ன பிற இடங்களைப் பார்த்து விட்டு திரும்பவும், வனஊழியரை அவரிடத்திலறக்கி விட்டு, பண்டிகை விடுமுறை தினமாக இருந்தாலும், எங்களுக்கும் சேர்த்து வீட்டில் பலகாரங்கள், உணவு செய்து உபசரித்து, இடங்களை உடனிருந்து சுற்றியும் காண்பித்த வனஊழியர் திரு. முத்துராஜ்க்கும், குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்து, காரமடை வழியாக, திருப்பூரடைந்தோம்.

picture-177

தங்குமிட ஏற்பாடு செய்தும், நீண்ட நாளாய் வரைவிலிருந்த பதிவை உயிர்ப்பிக்க கோரி, திரும்பத் திரும்ப நினைவுறுத்திய லதானந்துக்கு நன்றி!

பக்கப்பட்டையிலும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு

Advertisements

Comments on: "மதகு" (42)

 1. வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்க வெயில்.! இதே வேலையா அலையுறீங்களே.. கொடுத்து வெச்ச ஆளுய்யா நீர்.! (அதுவும் வெய்யக்காலத்துல..)

  Wonderful.!

 2. நானும் நண்பர்களோடு சில வருடங்களுக்கு முன்பு இதே இடத்திற்கு போய்வந்தது நினைவு வந்துவிட்டது. இந்த நினைவே இனிமையாய் இருக்கிறது. மூன்று பேர் மட்டுமே எனக்குத் தெரிகிறது. நீங்கள், அண்ணாச்சி, மற்றும் ஆதியில் தாமிரா.( சரிதானா நான் சொல்வதெல்லாம்?) மற்றவர்கள் யாரென்று அறிய ஆவல்.

  • நீங்கள் இதற்கு முன் இந்த இடத்துக்கு சென்றிருக்கிறீர்களா? நண்பர்களுடனான பயணம் இனிமையாய்த் தானிருக்கும். நன்றி முத்துவேல்!

   நிற்பவர்கள்
   1. ‘ஆதி’யில் தாமிரா
   2. பரிசல்காரன்
   3. கார்க்கி

   அமர்ந்திருப்பவர்கள்
   1. கும்க்கி
   2. அண்ணாச்சி
   3. செல்வேந்திரன்
   4. நான்

 3. Nice Travelogue. Nice Pictures too.

 4. இதுமாதிரியான மலைப்பகுதியில் தங்குவது ரொம்பவே நல்ல அனுபவம். நீங்க காட்டியிருக்கற 1850 அடி உயரத்துல இருக்கற காட்சிமுனையைப்பார்க்கறப்ப, வெள்ளைக்காரன் ரொம்பவே ரசனைக்காரன்னு தோணுது

  மலைவாழ் விலங்குகள் எதுவும் வழியில் வந்ததா (குறைந்தபட்சம் பாம்பாவது வந்திருக்கணுமே..) ?

  ஆனா, இப்படி படம்காட்டி மட்டும் ஒப்பேத்தாம, அடிக்கடி பதிவுகளும் போடுங்க வெயிலான் 🙂

  • ஆங்கிலேயர்கள் எப்படி அந்த இடத்தை எப்படி கண்டுபிடித்தார்களென்பதே ஆச்சரியம்!

   மலைவாழ் விலங்குகளென்றால் யானை, காட்டெருமை, மான் இவைகள் தான் இருக்கிறது.

   // இப்படி படம்காட்டி மட்டும் ஒப்பேத்தாம, அடிக்கடி பதிவுகளும் போடுங்க வெயிலான் //

   சரி! சரி! நம்ம தொழில் ரகசியத்தை இப்படி பொதுவுல சொல்லி மாட்டி விடாதீங்க கதிர்! 🙂

 5. அடிக்கடி பயணக்கட்டுரை எழுதுய்யான்னா கேட்டாத்தானே?

  டெம்ளேட்டில் அந்த க்ரூப் ஃபோட்டோ போட்டு நட்பிற்கு முன்னுரிமை கொடுத்ததற்கு என் கண்ணீர்த்துளிகள்! (ஆனந்தக் கண்ணீர் நண்பா!)

 6. வெயிலான் உங்க அனுபவம் நன்றாக இருந்தது..

  நான் எல்லாம் வரமுடியலையேன்னு கொஞ்சம் கடுப்பாகவும் இருந்தது. நான் ஊருக்கு வரும்போதும் இது மாதிரி ஒரு ட்ரிப் போடுங்க…. (ஆனா வழக்கம் போல “எஸ்” ஆகிடுங்க)

 7. மசினக்குடிக்கு அப்பறம் இது அடுத்த ட்ரிப்பா? நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க. படங்களைப் பாத்தா பொறாமையாவும் இருக்கு !!

 8. போட்டோஸும் பதிவும் நல்லா இருக்கு

  நல்லா அனுபவிக்கிறீங்கோ (ஹைய்ய்ய் பொறாமைப்பட்டுட்டேனே!!! )

 9. குசும்பன் said:

  //மக்கள் சினிமாவை சம்பந்தப்படுத்தி அறிமுகப்படுத்துவதை என்றைக்கு விடப்போகிறார்களோ?//

  அதோடு விடுகிறார்களே அதுவரை சந்தோசம். இதுதான் நயன்தாரா கால் பாதம் பட்ட மண் தொட்டு கும்புட்டுக்கோ! என்று சொல்லாமல் விடுகிறார்களே 🙂

  அருமையான கட்டுரை! இதுவரை இந்த இடம் பற்றி கேள்வி பட்டதே இல்லை!

  • // இதுதான் நயன்தாரா கால் பாதம் பட்ட மண் தொட்டு கும்புட்டுக்கோ! என்று சொல்லாமல் விடுகிறார்களே //

   நாமக்கல்-லில் தான் அப்படி சொல்றாங்களாம்! 😉

   // இந்த இடம் பற்றி கேள்வி பட்டதே இல்லை! //

   இந்தியா வரும்போது வாருங்கள். போய்ப் பார்க்கலாம்.

 10. வெயிலான்னு பேர வச்சிக்கிட்டு நல்ல குளிர் பிரதேசமா சுத்தி வயித்தெரிச்சல கிளப்பிகிட்டு இருக்கிங்களே, இது நியாயமா? நல்லா இருங்க (நெசமாத்தான் சொல்லறேன்).

  • நம்ம ஊருக்கும், வேலைக்கும் இப்படி எங்காவது போய் தான் குளிர் காய வேண்டியதிருக்குது. வாழ்த்துக்களுக்கு நன்றி முரளி! 🙂

 11. ☼ Veyilaan ☼ வெயிலான் ☼ – இப்படி ஐகான் வைச்சுக்கிட்டு சூப்பர் கூல் ப்ளேசுக்கு விசிட்டி கீறிங்க.. கலக்குங்க தல

 12. வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்

 13. \\சுழல் சக்கர பாரந்தூக்கி\\
  எந்த ஸ்கூல்ல படிச்சீங்க ரமேஷ் அண்ணே…

 14. ஆரம்பக் கல்வி கே.வி.சாலாவில். தமிழ் இதர வலை நண்பர்களின் எழுத்துக்களில் 🙂

 15. நித்தியானந்தம் said:

  //இதுமாதிரியான மலைப்பகுதியில் தங்குவது ரொம்பவே நல்ல அனுபவம், ஆனா, இப்படி படம்காட்டி மட்டும் ஒப்பேத்தாம, அடிக்கடி பதிவுகளும் போடுங்க வெயிலான்//

  அடிக்கடி எழுதுங்க

 16. \\நம்ம ஊருக்கும், வேலைக்கும் இப்படி எங்காவது போய் தான் குளிர் காய வேண்டியதிருக்குது. வாழ்த்துக்களுக்கு நன்றி முரளி! \\

  அருமையான அனுபவ பதிவு

  வாழ்த்துக்கள்…

  • // அருமையான அனுபவ பதிவு //

   நன்றி! அறிவே தெய்வம்.

   உங்களுக்கு திருப்பூர்னு தெரியும். உங்க வலைத்தளத்துக்கும் வந்திருக்கேன். கடவுள் நாத்திகம்னு போட்டு பின்னி பெடல் எடுத்திருந்தீங்க. கருணை இல்லம் பற்றிய பதிவு மிக அருமை.

 17. சென்ற வருடம் ஊட்டியில் மூன்று நாட்கள் டேரா போட்டது நினைவுக்கு வந்தது. திருப்பூரிலிருந்து பைக்கில் நால்வர்… ஒரே சுத்தல் மயம்தான்.. எல்லாம் முடிந்த பிறகு நண்பன், இன்னும் பாதி இடம் பார்க்கிறதுக்கு பாக்கி இருக்குடா என்றான்..

  கிடைத்த இடத்திலெல்லாம் போட்டொ எடுத்துக் கொண்டோம்… அது ஒரு ஜில் ஜில் அனுபவம்… (கிளுகிளுப்பான அனுபவமும் கூட 🙂 )

  பனிமூடிய படங்கள் இதயத்தில் ஜில்லிடுகிறது வெயிலான்… அதுவும் இந்த மொரட்டு வெயிலில்…. குளுகுளு!!!!

  ம்ம்ம்!!! இந்தவாட்டி எந்த ஊருக்கும் போகமுடியாது!!!!

 18. போன வாட்டி முதுமலையிலிருந்து மசினகுடி வழியா ஊட்டி… முப்பத்தாறு பெண்டையும் அலேக்காக திரும்பி வந்தோம்….

  அடுத்த நாள் ஒரு சாதாரண வளைவில் விழுந்து முட்டியில் சிராய்ப்பு!!!!!

  நினைத்தாலே இனிக்கிறது!!!

  • ம்…… முப்பத்தாறு கொண்டை ஊசி முனைகளை இலகுவாக தாண்டி வந்திட்டீங்க. ஆனால், தெரு முனை முட்டியை பதம் பார்த்திருக்கு. 😦

   பயணங்களெல்லாம் இனிக்கும் நினைவுகள் தான்!

 19. தங்களின் தங்கல் சவுகரியமாய் இருந்தமைக்கு மகிழ்ச்சி!

  உங்களைப் போன்றோரை எனக்குத் தெரிந்த அனைத்து வனப் பகுதிக்கும் அழைத்துச் செல்ல ஆசை.

 20. அண்ணே,

  மென்பாடல்கள் // உங்க தமிழ்க்கொடை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே வருது…

  போட்டோஸ் பாக்க ஏழலையே… 😦

 21. // போட்டோஸ் பாக்க ஏழலையே… //

  செல்வா,

  அப்டி இலகுவா தப்பிக்க விட்ருவோமா? 😉 தனி மின்னஞ்சலில் அனுப்புறேன்.

 22. கார்த்திக் said:

  ஆஹா அருமையான இடம் தல.

  படங்கள் எல்லாமே ரொம்ப அழகா வந்திருக்குங்க.

  நானும் ஒரு நட போயிட்டு வந்து சொல்லுறேன்.

  மாசம் ஒரு பதிவாவது போடுங்க தல.

  • நன்றி கார்த்திக்!

   இப்ப போகாதீங்க. அக்டோபர், நவம்பர்ல போங்க.

   // மாசம் ஒரு பதிவாவது போடுங்க தல //

   சரி தல!

 23. கூடவே இருந்தது போல் ஒரு உணர்வு!

  பார்வைக்கு கிடைக்காததை உங்கள் புகைப்படம் பூர்த்தி செய்த்து!

 24. பாலோ அப் போட மறந்துட்டேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: