கனவுச் சிறகுகள்

விமானத்திற்கும்

எனக்குமுள்ள தொடர்பு

ஒரு சிலகணங்களில்தான்

நிகழ்ந்திருக்கிறது.

 

என் ஊரிலும்

வயலுண்டு என்றாலும்

இறங்கியதில்லை இதுவரை

எந்த விமானமும்.

 

நினைவு தெரிந்தென்

சின்ன வயதுகளில்

தாழப்பறந்த

ஹெலிகாப்டர்கள் பின்னால்

ஓடியிருக்கிறேன்.

 

சென்னைக்குச் செல்கையில்

மீனம்பாக்கத்தைக் கடக்கும்

அபூர்வ விநாடிகளில்

விழிவிரிய வியந்து

ரசித்திருக்கிறேன்.

  

திருவிழாவை முன்னிட்டு

சென்ற வாரம்தான்

விமானத்தில் ஏற

வாய்ப்பு கிட்டியது.

என்றாலும்

கோயில் கோபுர விமானமெல்லாம்

விமானமா என்ன?

 நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் கவிதைத் தொகுதியிலிருந்து…..

நடுத்தர வர்க்கத்தினருக்கு ரயில் பயணமே கனவு.  குளிர் வசதி செய்யப்பட்ட பெட்டியிலோ, பேருந்திலோ பயணிப்பது பெருங்கனவு.  விமானப் பயணம் கனவின் கனவு.  

 இரண்டு மாதங்களுக்கு முன்பே, நண்பர்களுடன் ஐதராபாத் செல்வதாக பயணத்திட்டம்.  இருவர் திருப்பூரிலிருந்தும், மற்றவர்கள் சென்னையிலிருந்தும் தொடர்வண்டியில் ஐதராபாத்துக்கு வந்து விடுவது என திட்டமிட்டிருந்தோம்.  இடையில் பணியிலும், பதவியிலும் சில ஏற்ற, இறக்கங்கள்.  அதன் காரணம் என் தலைமை அதிகாரி பயணத்தேதியன்று எதிர்பாராததாய் திருப்பூர் வருவதாக தகவல்.

அதனால், திட்டமிட்டபடி என் நண்பர் மட்டும் கோவையிலிருந்து தொடர் வண்டியில் பயணிக்கிறார். நான் ? திருப்பூர் – ஐதராபாத் 20 மணி நேரப்பயணம்.  திருப்பூரில் மாலை 5.30க்கு கிளம்பி மறுநாள் மதியம் 1.30 மணிக்கு சென்றடையும்.

என் பயணத்தேதியன்று  திருப்பூர் வந்த தலைமை அதிகாரியை வரவேற்று மறுநாள் மாலை 5 மணிக்கு வழியனுப்பும் போது, ஐதராபாத் செல்ல விடுமுறையும் வாங்கியாயிற்று.  மற்ற அனைவரும் ஐதராபாத் சென்றடைந்து விட்டார்கள்.  வராததற்கு திரும்பத் திரும்ப செல்லடித்து சொல்லடித்தார்கள் L

என்ன செய்வதென்று தெரியவில்லை.  நண்பர்கள் விமானத்தில் வந்து விடு.  பயணச்சீட்டுக் கட்டணத்தை பகிர்ந்து கொள்ளலாம் என ஆலோசினார்கள் (எம்புட்டு பாசக்காரப் பயலுவ! ).  பயணச்சீட்டுக்கு உடனே ஆவண செய்யச் சொன்னார்கள்.  செய்தாயிற்று. மறுநாள் காலை 10.40க்கு விமானப்பயணம்.

 நான் இது வரை கோயம்புத்தூர் விமான நிலைய வாசலில் நிறைய பேரை வழியனுப்பியிருக்கிறேன்.  ஒரே ஒரு முறை மேலிருக்கும் கண்ணாடி அறையிலிருந்து விமானத்தை வேடிக்கை பார்த்திருக்கிறேன்.  மற்றபடி பரங்கிமலை மேலிருந்து கழுகுப்பார்வை.  வானில் பறக்கும் போது தூரப்பார்வை.  இது தான் எனக்கும் விமானத்துக்குமான வரவு செலவுகள்.

ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னமே விமான நிலையம் வந்து, பயணப்பையுடன் நேரடியாக பயணச்சீட்டு கொடுக்குமிடத்திற்கு சென்றேன்.  அம்மணி ஏதோ கேட்க, எனக்கிருக்கும் படபடப்பில் என்ன கேட்கிறாரென்றே புரியவில்லை.  பின்பு திரும்ப கேட்டதில், கையில் எடுத்துச் செல்லும் பையா? எனக்கேட்டது.  ஆமென்றவுடன், பையை, செக்யூரிட்டி செக்க வேண்டுமே என என்னைப் பார்த்தார்கள்.  எனக்கென்ன தெரியும்?  செக்கைத் தெரியுமா?  சிவலிங்கத்தை தெரியுமா?  பே! என விழித்தேன்.  பையை உதவியாளரிடம் கொடுத்து கூர்ந்தாராயும் பகுதிக்கு அனுப்பி வரச்செய்தனர்.  பயணச்சீட்டு கொடுத்து, எதிரறைக்கு போகச் சொன்னார்கள்.

 அந்த அறைக்கு செல்ல யத்தனிக்கும் போது, காவலர் இன்னும் நேரமிருக்கிறது என இருக்கையை காண்பித்தார்.  உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஆண்களும், பெண்களும் தங்கள் உடலெடைக்கு நாலுமடங்கு பயணப்பைகளோடு வந்து வெந்து கொண்டிருந்தனர்.  சிலர் வாடிய முகங்களுடன் வழியனுப்பினர்.  ஒரு பெண் கைப்பையிலிருந்து ஒரு கிலோ குண்டு சாம்பார் பருப்பு பொதியை பெரிய பைக்கு மாற்றினார்.  ஒருவர் நறுமணத் திரவிய உருளை, நுரை உருளை, சவரக்கத்தி எல்லாவற்றையும் வெளியே இருக்கும் நண்பரிடம் கொடுத்தார்.  புதுமணப்பெண் கண்ணீரடக்கி, சாடை காட்டிக் கொண்டிருந்தார்.

dsc02646

விமான ஓடுதளம் செல்லும் வாசல்  இருக்கும் அறைக்குள் சென்றேன்.  இங்கு டெல்லி செல்லும் வட இந்தியர்கள் குடும்பத்துடன் குழுமியிருந்தனர்.  குழந்தைகளனைவரும் கொழு! கொழு!   ஏதாவது ஒரு தீனியை இருந்த அரைமணிநேரமும் அரைத்துக் கொண்டிருந்தனர்.  முப்பரிமாண (3D Vision) தொலைக்காட்சியொன்றும் இருந்தது.  அதனைப்பார்த்த கண்ணாடியர்கள், சந்தேகத்தில் கண்ணாடியைத் துடைத்தும், கழட்டியும் தொலைக்காட்சியையே உற்று பார்த்துக் கொண்டிருந்தனர். 

ஓடுதளத்துக்குள் செல்ல எப்போது அனுமதிப்பார்கள் என தெரியவில்லை.  அறையுள்ளிருக்கும் ஒலிபெருக்கியில், ஒலி கர கரவென கேட்கிறது.  அதிலும் அமெரிக்க ஆங்கிலத்தில் அறிவிப்பு.  சுத்தமாகப் பு(தெ)ரியவில்லை.  நான் வைத்திருக்கும் வண்ணத்தில், யார் பயணச்சீட்டு வைத்திருக்கிறார்கள் என பார்த்து வைத்துக் கொண்டேன்.  அவர் எப்போது எழுந்து உள்ளே போவாரோ, அப்போது நாமும் கூட போய் விடலாம் என எண்ணி அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்  வேற வழி?

ஒரு வழியாக ஓடுதளத்திற்குள் விட்டார்கள்.  பயணச்சீட்டு சரி செய்யும் பெண் வாழ்த்துச் சொல்ல, என்னவென்று புரியாமல் நான் நிற்க.  நமக்குத்தான் காலும், கையும் வெட வெடங்குதே.  ஒண்ணும் காதுல விழமாட்டேங்குது.  ஒரு வழியாக விமானத்தில் ஏற்கனவே துண்டு போட்டு இடம் பிடித்த சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன்.  வெள்ளை மேலுடுப்பும், சிகப்பு கீழுடுப்பும் (விமான வண்ணக்கலப்பு) அணிந்த அம்மணிகள் இடை வார் எப்படி மாட்டுவது?  மூச்சுக்கருவி எப்படி  உபயோகிப்பதென்று சாடைமாடையாக விளக்கினார்கள்.

விமானப்பயணம் –  நெடுநாள் கனவு.  கனவுக்கும், எனக்கும் இப்போது தான் சிறகு முளைத்திருக்கிறது.  சிறிது நேரத்தில் பறக்கப் போகிறேன் என்ற நினைவே ஏகாந்தமாய் இருந்தது.

விமானம் மேலெழுந்தவுடன் உள்ளேயே ஒரு அம்மணி பழரசக்கலவைகள், ரொட்டித்துண்டுகள், அடங்கிய வண்டி தள்ளிக் கொண்டு வந்தார்.  ஏதாவது வாங்கலாமா?  காசு கேட்பார்களா? இலவசமா? தெரியவில்லை.  நல்லவேளையாக பக்கஇருக்கை பகவான் எல்லாவற்றையும் தெளிவாக கேட்டார்.  தெரிந்தது.  தண்ணீர் மட்டும் இலவசம்.  விடுவோமா?  தவிக்காட்டியும், ஒரு தண்ணீர் புட்டி வாங்கி வைத்துக் கொண்டேன்.  அதை வரும் போது எடுத்துக் கொண்டு வரவில்லை என்று குறிப்பிட விரும்புகிறேன் 🙂

 கொஞ்ச நேரம் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன்.  தூக்கம் அசத்தியது.  ம்ஹீம்…  இம்புட்டு காசு கொடுத்து தூங்குறதுக்கா வந்தே? என்னையே கேட்டுக் கொண்டேன்.  சக பயணிகள் ஆங்கில புத்தகத்திலும், சிலர் அதீத தூக்கத்திலும் மூழ்கி விட, அண்ணன் ரமேஷ் வைத்யா எழுதிய உயரங்களின் ரசிகன் கவிதைத் தொகுப்பை உயரத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன்.  கொஞ்சம் படம் எடுத்தேன் – வரலாறு மிக முக்கியம் நண்பர்களே! 🙂

சில மணித்துளிகளில் விமான ஓட்டி குரல் கேட்டது.  எப்பவும் விமான இயந்தரம் பழுதடைந்தால், விமானி பேசுவார் என்று திரைப்படங்களிலும், கதைகளிலும் கேள்விப்பட்டது நினைவில் வந்து தொலைந்தது.  நல்லவேளையாக, விமானம் எவ்வளவு அடி உயரத்தில் பறக்கிறது என்பதோடு நிறுத்தி விட்டு, இன்னும் சிறிது நேரத்தில் ஐதராபாத் விமான நிலையம் வந்தடையப்போகிறது என்ற தகவலினார்.

கீழிறங்கி வந்து நின்ற பின், ஒரு சிலர் எழுந்து முன் சென்றார்கள்.  என் பக்க இருக்கையாளர் மட்டும் எழவே இல்லை.  சரி! இறங்கு படிகள் பொருத்தி, கதவு திறந்த பின் இறங்குவார் என எண்ணி நானும் அமர்ந்திருந்தேன்.  முன் எழுந்து சென்றவர்களைக் காணவில்லை.  இறங்கியது மாதிரி தெரிந்தது.  நாமும் இறங்கலாமென பக்க இருக்கையாளரை தாண்டி விமானக் கதவுக்கருகே செல்லும் போது, டெல்லி செல்லும் பயணிகள் இறங்க வேண்டாமென ஒரு அறிவிப்பு. 

அடப்பாவி! பக்க இருக்கையாளர் டெல்லி செல்பவர் போல!

 இந்தியாவின் அதி நவீன விமானநிலையத்துக்குள், வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன்.  தாமதமாக வந்து சேர்ந்ததற்காக, அடி பிசிறப்போகிறார்கள் என பயந்து கொண்டே வாயிலுக்கு வந்தேன்.  நண்பர்கள், நீ விமானத்தில் வந்ததால் தான், இத்தகைய விமான நிலையம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என மகிழ்ந்தனர்.  

அங்கிருந்து பயணம் தொடர்ந்தது.


இனியும் தொடரும்……..

Advertisements

Comments on: "கனவுச் சிறகுகள்" (65)

 1. ரமேஷ்… எது எழுதினாலும் ரசிச்சு எழுதி ரசிக்கும்படியா எழுதறீங்க…. அருமை !! உங்ககிட்ட கத்துக்க நிறைய இருக்குங்க.

 2. // உங்ககிட்ட கத்துக்க நிறைய இருக்குங்க. //

  முதல்ல உங்ககிட்ட நான் பின்னூட்டம் எப்படி போடணும்னு கத்துக்கணும்.

  நிறைய முறை உங்க பதிவுகளை படிச்சிட்டு மட்டும் வந்துடுவேன் 🙂

 3. //செக்கினேன்//
  //ஆலோசினார்கள்//
  //சொல்லடித்தார்கள்//

  நல்ல சொல்லாடல் !!

 4. அதான் மகேஷ் சொல்லிட்டாரே நானும் அதையேதான் நினைத்தேன்.
  என் முதல் விமான அனுபவமும் ஓரளவுக்கு இப்படிதான் இருந்தது.

 5. நன்றி நாடோடி இலக்கியன்.

  நேரிலும், வலையிலும் பார்த்து ரொம்ப நாளாச்சு.

 6. நன்றாக எழுதி இருக்கீங்க…. கோவை ஹைதராபாத் பேரமவுண்டிலா? இப்போதெல்லாம் டிக்கட் செலவு எவ்வளவு?

  அங்கு என்னவெல்லாம் பார்க்கலாம்? எவ்வளவு நாள் வேண்டும்?

  செப்டம்பர் மாதம், என் கணவரின் தம்பி வீட்டில் அங்கு விசேஷம். ….செல்ல வேண்டும்.

 7. நன்றி வினிதா!

  கோவையிலிருந்து ஸ்பைஸ் ஜெட்டில் மட்டுமே நேரடி சேவை. ரூ.3600 பகல் மற்றும் ரூ.3200 இரவு நேர விமானக்கட்டணம்.

  நல்ல ஊர். கோடைக்காலத்தில் சென்று மாட்டிக் கொள்ளாதீர்கள். 2-3 நாட்கள் இருந்தால், ராமோஜி ராவ் பிலிம் சிட்டி மட்டுமே ஒரு நாள், கோல்கொண்டா கோட்டை, சார்மினார் அவ்வளவு தான் – நான் பார்த்தது 🙂

  கார்க்கி, புதுகைத் தென்றல், விஜய் கோபால்சாமி போன்ற பதிவர்களிடம் கேட்டால் இன்னும் நிறைய இடங்களைக் குறிப்பிடுவார்கள்.

 8. எனக்கும் அப்படி தான் இருந்தது தலைவரே

 9. வெயிலான் நல்லா எழுதி இருக்கீங்க..

  நீங்க என்னோட பதிவில் ஒரு முறை கூறி இருந்தது நினைவிற்கு வருகிறது. உங்கள் ஆசை நிறைவேறியதில் எனக்கு சந்தோசமே..

 10. // நீங்க என்னோட பதிவில் ஒரு முறை கூறி இருந்தது நினைவிற்கு வருகிறது. //

  ஓ! நினைவிருக்கா கிரி? ஆசை நிறைவேறி விட்டது.

  நன்றி!

 11. //எது எழுதினாலும் ரசிச்சு எழுதி ரசிக்கும்படியா எழுதறீங்க…. அருமை !! உங்க கிட்ட கத்துக்க நிறைய இருக்குங்க.//

  நான் சொல்ல நினைச்ச வரிகளும் கூட இதே….!

 12. கலக்கல், நானும் விரைவில் ஒரு பயணக்கட்டுரை இடலாம் என உள்ளேன். ஜாக்கிரதை.!

  கொழுகொழு குழந்தைகளா? உங்களைப்போலவா??

 13. // நானும் விரைவில் ஒரு பயணக்கட்டுரை இடலாம் என உள்ளேன். ஜாக்கிரதை.! //

  ஜாக்கிரதைனு மிரட்டலா? எவ்வளவோ பாத்துட்டோம். இதையும் பார்த்துடுவோம்.

  // கொழுகொழு குழந்தைகளா? உங்களைப்போலவா?? //

  🙂

  நன்றி ‘ஆதி’யில் தாமிரா!

 14. Nice Write-up Sir !
  Waiting for the next part 😉

 15. அருமையான கவிதை,
  சிறப்பான பதிவு.
  விமானம்
  சாதாரண ஜனங்களுக்கு
  அபூர்வக்காட்சிப் பொருள்தானே ?
  வாழ்த்துக்கள் வெயிலான்.
  புகைப்படங்கள் சிகரத்துக்கும் மேலே.

 16. // விமானம்
  சாதாரண ஜனங்களுக்கு
  அபூர்வக்காட்சிப் பொருள்தானே? //

  ஆமாய்யா! தூரப்பறக்கிற கள்ளப்பருந்து! அம்புட்டுத்தான்.
  நன்றி!

 17. ஆரம்ப கவிதை அருமை!

  பயண விவரிப்பை விட உங்கள் மொழி நடை வெகு சுவாரஸ்யம்!

 18. ///
  கார்க்கி, புதுகைத் தென்றல், விஜய் கோபால்சாமி போன்ற பதிவர்களிடம் கேட்டால் இன்னும் நிறைய இடங்களைக் குறிப்பிடுவார்கள்.
  ///

  இதையெல்லாம் எலக்கணமா சொல்லுங்க. பொஞ்சாதி ஊருக்குப் போயிருக்க நேரமா பாத்து வந்து போயிருக்கீங்க. சொல்லிருக்கக் கூடாதா… வீட்டுல ஒரு பதிவர் சந்திப்பு நடத்திருக்கலாம்ல. மென்பானம் வன்பானம்னு சந்திப்ப பல்பராட்டா கொண்டாடிருக்கலாம்…

  • விஜய்,

   நானே வரமுடியுமா? முடியாதானு இருந்தது. கடைசி நேரத்தில் தான் உறுதியானது.

   விடுங்க! அடுத்த தடவை கலக்கிடலாம். நீங்க எப்ப திருப்பூர் வர்றீங்க?

 19. 🙂

  அடுத்த சந்திப்புல கதை கதையா சொல்றேன்.

 20. அழகா எழுதியிருக்கீங்க வெயிலான்..கூர்ந்தாராயும் பகுதி, நுரை உருளை..கலக்கறீங்க! 🙂 படிக்க சுவாரசியமா இருந்தது!

 21. நன்றி சந்தனமுல்லை!

 22. கார்த்திக் said:

  // நான் இது வரை கோயம்புத்தூர் விமான நிலைய வாசலில் நிறைய பேரை வழியனுப்பியிருக்கிறேன். ஒரே ஒரு முறை மேலிருக்கும் கண்ணாடி அறையிலிருந்து விமானத்தை வேடிக்கை பார்த்திருக்கிறேன் //

  தல என் நிலமையும் இதே தான். பல தடவ கோவை ஏர்போர்ட் போயும் இன்னும் விமானம் மட்டும் ஏறமுடியல.

  இதுவும் ஒரு கனவாவே இருக்கு

  உங்க கனவு நனவானது மகிழ்ச்சியே 🙂

  அடுத்ததையும் சீக்கிரம் எழுதுங்க.

  • ஏர்போர்ட்டே பார்க்காதவங்க நிறைய பேர் இருக்காங்க தல! நாம எவ்வளவோ பரவாயில்ல.

   உங்கள் கனவு விரைவில் நனவாகும். அதுவும் ஒரு பதிவாகும் 🙂

   போகும் போது வாலையும் கூட்டீட்டு போங்க. அன்னைக்கு விமானப்பயணம் பற்றி ரொம்ப ஏக்கமா பேசிட்டிருந்தார்.

 23. கார்த்திக் said:

  எடுத்ததையும் கவிதைய பாத்தாதையும் பயந்து போயிட்டேன்.
  எங்க போன பதிவு போல இதுவும் கவிதையோ என்னவோன்னு :-))

 24. அருமை அருமை 🙂

 25. நன்றி சேவி!

  இந்தப் பக்கம் நீங்க வந்து ரொம்ப நாளாச்சே?

 26. நல்ல பதிவு..! இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறோம்… 🙂

  //சில மணித்துளிகளில் விமான ஓட்டி குரல் கேட்டது. எப்பவும் விமான இயந்தரம் பழுதடைந்தால், விமானி பேசுவார் என்று திரைப்படங்களிலும், கதைகளிலும் கேள்விப்பட்டது நினைவில் வந்து தொலைந்தது//

  அதே தான் எனக்கும் தோன்றியது…பய புள்ள அப்போ என்ன சொன்னார்னா

  ” கடும் மழையுடன் அடர்ந்த மேகமூட்டம் உள்ளதால் விமானம் தரை இறங்குவதில் சிக்கல் உள்ளது..அனைவரும் இடுப்பு பட்டையை இறுக்கி கொள்ளவும்”

  பிறகு அரை மணி நேரம் வானத்தில் வட்டமடித்து எப்படியோ நல்லபடியாக இறக்கி விட்டார்..

  • ராசு,

   நான் தொடரும்னு சொன்னது, இது என் முதல் விமானப்பயணம், அதற்கப்புறம் இரண்டு, மூன்று முறை பயணித்து விட்டேன். இன்னும் என் (விமானப்)பயணம் தொடரும்ன்ற அர்த்தத்துல சொல்லியிருக்கிறேன்.

   இதுவே ரொம்ப பெரிய பதிவுனு சொல்றாங்க. ரெண்டாம் பாகம் வேறயா?

   நன்றி!

 27. வசந்த் ஆதிமூலம் said:

  அண்ணா வணக்கம் . நல்லா இருக்கியளா ? உங்களை திரும்பவும் சந்திக்கிறதுக்கு ஆர்வமா இருக்கேன்.

 28. வணக்கம் வசந்த்,

  திரும்பவும் நிச்சயம் சந்திக்கலாம்.

  வருகைக்கு நன்றி!

 29. முதல் முறை விமானத்தில் பயணிப்பதாக சொன்னால் அங்கே உங்களுக்கு ஸ்பெஷலாக உதவுவார்கள். எல்லோரும் முதல் முறை தடுமாறி ஆரம்பித்து தான், தொடர்ச்சியாக பறக்கிறார்கள். இதைக் கேட்க தயக்கம் வேண்டாம். முதல் விமான அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் வெயிலான்.

  உங்கள் தமிழ் ரொம்ப நல்லாருக்கு. எங்கே இருந்து தேடுறீங்க இது போன்ற வார்த்தைகளை. கூர்ந்தாராயும் பகுதி, நுரை உருளை, etc…

 30. தயக்கத்தினால் தான் கேட்கல.

  அதையே வேற மாதிரி சொல்லலாமே – தன்னம்பிக்கை 🙂

  ஆங்கிலத்தில இருந்து தமிழில் மொழி பெயர்த்தால் புதிய தமிழ் வார்த்தைகள் கிடைக்கும். அவ்வளவு தான்!

  நன்றி விக்னேஷ்வரி!

 31. சுவாரசியமா எழுதியிருக்கீங்க வெயிலான்..(வழக்கம்போல)

  //இனியும் தொடரும்……..//ன்றத படிச்சுட்டு, நானும் அடுத்த பாகம் வரும்போலன்னு நினைச்சேன் 🙂

 32. நன்றி கதிர்!

  என்ன இருந்தாலும், நீங்க விமானப்பயணத்தில் எடுத்த படங்கள் ரொம்பவும் அருமை!

  திவ்யா எப்படி இருக்கிறாள்?

 33. கூடவே ஒரு சிறிய பௌச் குடுத்தாங்களா? இல்லனா சொல்லுங்க எழுதி போட்டு வாங்கிடலாம்…

 34. பயண விவரிப்பு அருமையாகவே இருந்தது. அதிலும் அழகான கவிதைப் பிள்ளையார் சுழியோடு!

  அடுத்தது போடுங்க, தொடர்ந்து வந்து படிக்கிறேன்.. இப்படி பாதியிலயா விட்டுட்டு போவது??

  பிகு: நாமெல்லாம் விமானத்தைச் செய்துபார்த்ததோடு சரி!!

 35. He he he ) 😉 🙂

 36. நன்றி விஜி!

  நான் போன விமானத்துல பெளச் கொடுக்க மாட்டாங்க. 🙂

  தண்ணீர் பாட்டில் மட்டும் தான்.

 37. வருகைக்கு நன்றி ஆதவா!

  வாங்க! ஒரு தடவை பயணிக்கலாம்.

 38. மிக அற்புதமான நடை.. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க தல.

 39. அட, என்னைப்போலவே நல்ல அனுபவம். முதல்லதான இப்படி. அப்புறம அடிக்கடி விமான ஆசை வந்து, மயிலாப்பூருக்கும் கே.கே..நகருக்கும் இன்னுமா விமானம் விடலைன்னு தோண வச்சிடுச்சு மக்கா. இப்பலாம் கொட்டாம்பட்டிக்கு போகணும்னு இருந்தா கூட, எந்த ஏர்போர்ட்ல இறங்கணும்னு கேட்கிறேன்னா பாருங்களேன்.

  அடுத்த அனுபவத்துக்கு வாழ்துக்கள்.

 40. // மிக அற்புதமான நடை.. //

  நன்றி தல!

 41. // அட, என்னைப்போலவே நல்ல அனுபவம். //

  நான் உங்களோட முதல் விமானப்பயண அனுபவம் பற்றி எழுதச் சொன்னேன். நீங்க தான் இப்ப இந்தப்பக்கமே வர்றதில்ல.

  என்னை விட உங்களின் ‘அனுபவ’ எழுத்துக்கள் நன்றாயிருக்கும்.

  நன்றி அண்ணாச்சி!

 42. ஹய்யா.. எனக்கு ரொம்ப புடிச்ச கவிதை.. செல்வா புண்ணியத்துல அந்த புத்தகத்தில் அனைத்துக் கவிதைகளும் ரசிச்சிப் படிச்சேன்.

  உங்க பயண அனுபவம் அப்பாலிக்காப் படிக்கிறேன். ஆற்க்காட்டார் ஆப்பு வச்சிட்டார். 🙂

 43. நாம ரெண்டு பேரும் தானே புத்தகம் வாங்கினோம். அதிலிருந்த இந்தக் கவிதையை படிச்சதுக்கப்புறம் உருவானது தான் இந்தப் பதிவு.

  நன்றி சஞ்சய்!

 44. நீங்கள் சொன்ன பிறகுதான், இந்த முறை விமான பயணத்தை தூங்காமல் வந்தேன் (எப்பவும் டேக் ஆப் ஆனதும் தூங்கிடுவேன்) தலையணை பஞ்சு போன்ற மேகம், சத்தமற்ற நீல வானம்.. நல்லாத்தான் இருக்கு. அதுவும் நேற்று ஊட்டி ரொம்ப அழகா இருந்தது மலை மேகங்களுடன்… உத்து பாத்திருந்தால் நாரதர், பெருமாள், ரம்பா, ஊர்வசி கூட தெரிவாங்கனு தோணுச்சு……

  • // தலையணை பஞ்சு போன்ற மேகம், சத்தமற்ற நீல வானம் //

   ம்…… என்னை விட நீங்க ரொம்ப நல்லா ரசிச்சிருக்கீங்க.

   ஆனா, நான் ஊட்டியை பாக்கலியே? 🙂

 45. அடிக்கடி எழுதுங்க சகா..

  சுவாரஸ்யமா இருக்கு

 46. அடிக்கடி எழுதணும்னு நினைக்கிறதோட சரி!

  நன்றி கார்க்கி!

 47. பிரபு.இரா said:

  அண்ணா உங்களுக்கு விமானத்தில் முதல் அனுபவமா? என்னால் நம்ப முடியவில்லையே!!!!!!!!!

 48. ஆமா! தம்பி இதான் முதல் அனுபவம். நீ நம்பணும்ன்றதுக்கு தான் இவ்வளவு கதை சொல்லியிருக்கேன் 🙂

 49. //என் முதல் விமான அனுபவமும் ஓரளவுக்கு இப்படிதான் இருந்தது//

  எனக்கும் அதே அனுபவம்

 50. very happy birthday ramesh…
  be happy as now always.

 51. அணு அணுவாய் ரசிச்சீங்க போல!

  கனவு மெய்ப்பட்டமைக்கு வாழ்த்து(க்)கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: