முயல் மார்க்

கந்தையா!  டேய்…. கந்தையா! வெளையாடப் போனன்னா ஒரேடியா போக்கழிஞ்சு போயிருவ.

சொல்லும்மா! 

நேரத்துக்கு வந்து தின்னுட்டுப் போனா என்னடா?  பசையில கை வச்சிட்டேன்னா, நீயே தான் எடுத்துப் போட்டு தின்னுக்கணும்.

எனக்கு பசிக்கலம்மா! இங்கன பிள்ளையார் கோவில் கிட்ட வெளாண்டிட்டிருக்கேன்.  அப்பா வர்ற நேரத்துக்கு கூப்பிடு.

வாடா மொதல்ல வீட்டுக்கு.  அங்க போய் ஆடுற நேரத்துக்கு ரெண்டு கட்டு ஒட்டலாம்லடா. 

போம்மா! ஒட்டுனா நீ காசு தரமாட்ட.  ஒட்டி முடிச்சு சனிக்கெழம சம்பளம் வாங்குனதும் வீட்டுச் செலவுக்கு பத்தலம்ப.

இல்ல ஆங்ஞான்!  இப்பம் வந்து ஒட்டு.  இன்னைக்கு கொண்டோய் குடுக்கணும்டா.  இல்லைன்னா, காளியப்பன் வைவான்டா.

இப்புடி அவசர   அவசரமா ஒட்டி காஞ்சும், காயாம கொண்டு போனா, போறதுக்குள்ள வாயப் பொளந்திருது.  அவன் சத்தந்தான் போடுவான்.

சரி! ஓடியா.  நல்ல பிள்ளைல்ல.  வந்து பசை தடவி குடுக்கேன்.  சமத்தா ஒட்டி மட்டும் போடுவியாம்.  போய் கை, கால் கழுவீட்டு வந்து உக்காரு.  சாப்ட்டுட்டு ஒட்டலாம்.

 

ம்மா! ம்மா!

நொய்யு நொய்யுங்காம சீக்கிரம் ஒட்டிப் போடுடா!

நாராயணசாமி டாக்கீஸ்ல புதுப்படம் போட்டிருக்கான்.  நா நாலு கட்டு ஒட்றேன்.  சம்பளம் வாங்கி அம்பதீசா குடுப்பியா?

படத்துக்கு போறது, அப்பாக்கு தெரிஞ்சது கொன்னே போட்ருவாங்க.

நாயித்துக் கெழம சரசத்த வீட்டு நிச்சியத்துக்கு தூத்தூடி போவாங்கள்ள.  முந்தாநா கூட லெட்டர் வந்திச்சே.  அப்ப போய்ட்டு வந்திர்றேன்.

இத  மட்டும் கரெக்டா தெரிஞ்சு வச்சுக்கோ.  களவாணிப்பெய. களவாணிப்பெய. அதென்ன நாலு கட்டு கணக்கு? நாலு கட்டு ஒட்டுனேன்னா, கட்டுக்கு 7 பீசா.  28 பீசா தாண்டா வரும்.

போம்மா! ஒரு கட்டுக்கு 144 தாள்.  அத முழுசும் ஒட்டுனா 7 பீசா தானா?  முத்துராம்பட்டியிலெல்லாம் பத்து பீசாவாம்மா. கூடப்படிக்கிறவங்ங சொன்னாங்ங.

அடிப்பெட்டிக்கா இருக்குண்டா. அதுல சில்லு போடுற வேல இருக்குல்ல.

இல்லம்மா, மேப்பெட்டிக்குத்தான்!

இங்கனக்குள்ள, தந்திமரத் தெரு வரைக்கும் மூட்டய சைக்கிள்ல கொண்டாந்து தாடான்னா, ஒனக்கு வலிக்குது.  இதுல முத்துராம்பட்டி வரைக்கும் எப்புடி நான் ஒத்தயில மூட்டயத் தூக்கீட்டுப் போறது?  என்னால முடியுற வரைக்கும் ஒட்றேன்.  இப்பவே அப்பப்ப ஒருவடியா வருது. 

 

எம்மா நா போய்ட்டு வாறேன்!

பத்தரமா போய்ட்டு வா!  அங்க இங்க பராக்கு பாத்துட்டு நிக்காத.  படம் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்து சேரு.

சரிம்மா!

 

கையில அம்பத்தஞ்சீசா இருந்ததுடா மாரியப்பா!  நாப்பதீசா டிக்கட்டு.  பத்தீசா வாங்கித்திங்க. அஞ்சீசா எதுக்குமிருக்கட்டுன்னு அமுல் டப்பாக்கு அடியிலருந்து எடுத்திட்டுப் போனேன். ஒரு வேளைக்கு நாப்பதீசா டிக்கட்டு கிடைக்கலீன்னா, அம்பத்தஞ்சீசா டிக்கட்டு எடுத்துக்கலானு வச்சிருந்தேன்.

புதுப்படம்னா,பேருக்கு பத்து டிக்கெட்டக் குடுத்துட்டு இல்லைன்னுருவாங்ஙனு கவுண்டர் கதவ  ஒட்டி நின்னுட்டிருந்தேன்டா.

கதவத் தொறந்ததும்… நெரிச்சு தள்ளினாங்ங. யப்பா! கவுண்டருக்குள்ள போறதுக்குள்ள நச்சு சாணி சக்கையெடுத்திட்டாங்ங.  உள்ள போம்போதே ஒருத்தன் என்ன உள்ள வுடாம டவுசர் பையப் பிடிச்சு இழுத்தான்.  நானும் உடாம பிச்சுப் புடுங்கிட்டு உள்ள போய்ட்டு, டிக்கெட் எடுக்க டவுசர் பைக்குள்ளருந்து காச எடுக்குறேன்…..  இருவதீசா தாமரத் துட்டக் காணம்.  எவனோ அடிச்சிட்டான்.

பொறவு…. என்ன பண்ணுன?

பெறவென்ன? நாராயணா பாட்டு வேற போட்டுட்டாங்ங.  நாப்பதீசா தரை டிக்கெட்டுக்கே அஞ்சீசா குறஞ்சது.  வீட்டுக்கு திருப்பி வந்துட்டேன்.  அம்மாட்ட டிக்கெட் கெடைக்கலைனு சொன்னேன்.

காசத் திருப்பித் தரச்சொல்லி கேட்ருப்பாங்கள்ள?

இருபதீசாக்கு பால் அய்ஸ் வாங்கித் தின்னேன்னு சொல்லி, மிச்சக்காசக் குடுத்திட்டேன்.

அப்பம் படம் திருப்ப எப்ப பாக்கப் போற?

எங்கப்பா எங்கியாவது ஊருக்கு போனாத்தான்.  அதுக்குள்ள காசு வேற சேக்கணும்.  நா பள்ளிவாச வழியா காளியப்பன் தீப்பெட்டி ஆபிஸ்க்குப் போயி பசை மாவு வாங்கப் போறேன்.   

 

இதென்ன தீப்டி ஆபீஸ் அண்ணாச்சி? 

என் பசை மாவு டப்பால துத்தம் எடுத்து போட்டுட்டிருந்த கணக்கப்பிள்ள ‘முயலு’  ‘முயலு’ன்னாரு.

rabbit drawing

நூத்தியொண்ணு, ரெண்டு, மூணு, நாலு…

ச்சே! நூத்தி நாப்பத்தி நாலு தீப்பெட்டி ஒட்டுனாத்தான் ஒரு கட்டு முடியும்.  இன்னம் மூணு கட்டு ஒட்டணும்.

 

உரையாடல் : சமூகக் கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை

Advertisements

Comments on: "முயல் மார்க்" (71)

 1. நச்சுனு இருக்கு ரமேசு. செவிக்க வாழ்த்துறேன்.

 2. ரொம்ப நன்றி அண்ணாச்சி! செவிச்சா உங்களுக்குத் தான் மொத விருந்து! 🙂

 3. வெயிலான் அருமையாக இருக்கிறது..

  வாழ்த்துக்கள்..!

 4. நல்லா இருக்குங்க…

  வெற்றி பெற வாழ்த்துக்கள்.. இன்னும் ஒரு டிரீட் உறுதி …

 5. ரொம்ப நல்லா வந்திருக்கு ரமேஷ். அட்டகாச வட்டார நடை. பரிசு வெல்ல வாழ்த்துகள். நீங்க இன்னும் அடிக்கடி எழுதலாம். எழுதணும். எழுதறீங்க 🙂

  அனுஜன்யா

 6. சூப்பர் தலைவா!

  அந்த ஸ்லாங் அப்படியே வந்திருக்கு..//நாப்பதீசா..// ச்சான்ஸே இல்லை!

  கண்டிப்பா ஜெயிக்க வாழ்த்துக்கள்!

 7. வட்டாரமொழி வழக்கில் சமகால வீளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை வெகு அருமையாக எழுத்தில் வடித்துள்ளீர்கள் தோழரே!

  வாழ்த்துக்கள்!

 8. சிறுதவறு நடந்துவிட்டது!
  அதனால் தான் போட்டோ மாறி போச்சு!

 9. பரிசு வெல்ல வாழ்த்துகிறேன்

  வாழ்த்துக்கள்

 10. இது பின்னூட்டங்களை உள்பெட்டியில்(inbox) பெற

 11. வட்டார வழக்கு நல்லா இருக்கு வெயிலான்.
  நேரில் மீதியைக் ‘கதை’ப்போம்.

  (உரையாடல் சிறுகதைன்னா இதுதானா?ஒரே உரையாடலாகவே இருக்கே அதான்….)

 12. சொல்ல மறந்துட்டேன்
  வெற்றிபெற வாழ்த்துகள்…!

 13. நண்பா வாழ்த்துக்கள், இன்னும் படிக்கவில்லை படித்தபிறகு பின்னூட்டம் இடுகிறேன்.

 14. அப்படி போடுங்க.. எல்லாம் அமுக்கமா இருந்தீங்களா?

  வாழ்த்துகள்

 15. பிரபு.இரா said:

  அண்ணா அருமையா இருக்குதுங்ண்ணா………. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!!!!

 16. வாழ்த்துக்கள்

 17. நன்றி டி.வி.ஆர். ஐயா!

 18. ரொம்ப நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  மாசற்ற கொடி

 19. படிச்சுட்டு சோகமா போயிருச்சுங்கண்ணே.

  வட்டார வழக்குல பின்னியெடுத்துருக்கிங்க.

  நல்லா சுவையா சொல்லியிருக்கிங்க. வெற்றியடைய வாழ்த்துக்கள்.

 20. கதை சூப்பரு…தல .. போட்டோவும் சூப்பரு..

  வாழ்த்துக்கள் , வெற்றி பெற..

 21. கதை அருமைங்க…வெற்றி பெற வாழ்த்துகள்…

 22. அழகான எழுத்து நடை தல !

  வாழ்த்துகள்

 23. ரமேஷ்….

  பண்பட்ட நடையுடன், தீப்பெட்டியும் துத்தநாகமும் பிஞ்சுக்கைகளின் வாழ்வை தொலைத்த வேலையும் பற்றியதான ஓவியம் உங்களிடமிருந்து வருமென்று எதிர்பார்த்ததுதான்.

  சிறப்பாகவே அது வெளிப்பட்டிருக்கின்றது….
  யாரின் யாசகங்களையும், பரிதாபங்களையும் கோரிப்பெறாமல் இருப்பது இப்படியான வாழ்க்கைதான் என்ற உண்மையை முகத்திலறைந்தபடி…

  விருந்திற்க்கான பட்டியலில் எனது பெயரும் உண்டல்லவா..?

 24. ஈரவெங்காயம் said:

  //முயலு’ ‘முயலு’ன்னாரு//

  = முயற்சி செய், முயற்சி செய்…

  சரிதானே வெயிலான் என் புரிதல்…??

  எளிமையான, அழகான கதை…உங்களைப் போலவே !

  • // முயற்சி செய், முயற்சி செய்…
   சரிதானே வெயிலான் என் புரிதல்…?? //

   சரி தான் சாமிநாதன். கணக்கப்பிள்ள சொல்வது தீப்பெட்டி ஆபீஸ் பெயரை – முயல் – முயல் மார்க் தீப்பெட்டி ஆபீஸ்.

   ஆனால், அவன் திரும்பவும் படம் பார்க்க ‘முயற்சி செய்‘ என்பதாக புரிந்து கொள்கிறான்.

   நன்றி ஈரவெங்காயம் 🙂

 25. நல்லா இருக்குங்க…

  வெற்றி பெற வாழ்த்துக்கள்

 26. இன்னும் தீராத தித்திப்பு.
  கதை நடந்து போகும் திசையெல்லாம்
  கந்தக பூமியின் சுளீர் வார்த்தைகள்.
  ஆகா அசத்தல் வெயிலான்.

 27. அம்மாடி… இம்புட்டு நாளாச்சாய்யா உமக்கு?மண்மணத்தோட அருமையான கதை… ஒரு காலத்துல நானும் தீக்குச்சி அடுக்குனது ஞாபகத்துக்கு வந்தது.

  • 🙂 நன்றி மகேஷ்!

   ஓ! கட்டை அடுக்கினீங்களா? உடுமலையில அதெல்லாம் இருந்ததா என்ன? ஒரு கட்டைக்கு எவ்வளவுனு நினைவிருக்கா……

 28. நல்லா இருக்குங்க. நல்ல கரு

 29. அன்பின் வெயிலான்

  அருமையான வட்டார நடையினில் எழுதப்பட்ட உரையாடல் மட்டுமே கொண்ட கதை. அருமை அருமை

  வெற்றி பெற நல்வாழ்த்துகள்

 30. வட்டார வழக்குல எங்களை அங்கியே இழுத்திட்டு போயிட்டீங்க.
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 31. வட்டார வழக்கில் அருமையாக எழுதியுள்ளீர்கள்.

 32. மிகவும் அருமையான கதைங்க..

  அப்படியே உள்ள இழுத்துட்டு போய்டுச்சு..

 33. பின்னிட்டீங்க!

  வட்டார வழக்கு அப்படியே கதையோடு இழைஞ்சு…..
  சூப்பர்.

  ரொம்ப நல்லா இருக்கு. படிச்சு முடிச்சப்ப மனசின் மூலையில் சின்னதா ஒரு வலி.

  அதுவே உங்கள் வெற்றி.

  இனிய பாராட்டுகள்.

 34. தங்களது கதையை இப்பொழுது தான் படித்தேன் வெயிலான். மனதை தொடுவதாக இருக்கிறது. மொழி நடை புதுமை. சில வார்த்தைகள் என் பால்யத்தை நினைவு படுத்துகின்றன. கந்தையா, சிறு வயதில் நான் பார்த்திருக்கும் தீப்பெட்டிச் சிறுவர்களில் ஒருவனை நினைவு படுத்துவதாய் இருக்கிறான்.

  வாழ்த்துகள் வெயிலான் 🙂 அப்பறம் ட்ரீட் ல நானும் இருக்கேன் ல. 😉

  • நன்றி ரெஜோவாசன்.

   // அப்பறம் ட்ரீட் ல நானும் இருக்கேன் ல. //
   ஆமா நீங்களும் இருக்கீங்க. ட்ரீட் வைக்க வேண்டியவங்க லிஸ்ட்ல 🙂

 35. உரையாடல் போட்டிக்கு உரையாடலிலேயே கதையா.? மொழி சிறப்பாக வந்திருக்கிறது. வாழ்த்துகள் வெயில்.!

 36. 🙂 For Follow up..

 37. ரொம்ப அழகா இருக்கு. அப்படியே நம்ம ஊரு பேச்சு. வாழ்த்துக்கள் வெயிலான்.

 38. மிகவும் அருமை …….

  உங்கள் வட்டார மொழி நடையில் ஓர் கதைத் தோரணம்.

  இத்தோரணம் வெற்றி மாலையாக விழட்டும் உங்கள்

  தோளில்…….. வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: