‘ஙா’னிகள்

புகைவண்டி நிலையத்தில் நடைமேடைச் சீட்டு எடுக்காமல், மூன்று ரூபாயை மிச்சப்படுத்த எண்ணி, அபராதத் தொகை ஐநூறு, அறுநூறு என்று கொடுத்து விட்டு ‘ஙே’ என விழித்தபடி வெளியே வருபவர்கள் தான், தனக்குத் தான் எல்லாம் தெரியும் என எண்ணிக் கொள்ளும் ‘ஙா’னிகள்.

Head

முன்பெல்லாம் வெளிநாட்டு வணிகர்கள் திருப்பூர் வரும் போது, மாதிரி உடைகள் கொண்டு வருவார்கள்.  உடைகள் எங்கோ குப்பைத் தொட்டியிலிருந்து எடுத்து வந்தது போல் இருக்கும்.  அதுவும் ஒன்றோ, இரண்டோ தான் இருக்கும்.  அதிகத் தேவைக்கு புகைப்படம் தான்.  வணிகருடன் வந்திருந்த ஒரு கம்பெனி உரிமையாளர், குழியாடிகள் பொருத்தப்பட்ட, சுருள் புகைப்படக்கருவியுடன் படமெடுத்துக் கொண்டிருந்தார்.  இதற்கிடையில், தேவையற்ற கட்டளைகள் வேறு.

Camera Lens Lid

படங்களெல்லாம் எடுத்து முடித்ததும், ஒருவர் அருகில் வந்து படக்கருவியின் முன் மூடியை நீக்க வில்லையென்று சொன்னார்.

ஒரு முக்கிய அலுவலக கூட்டத்தின் முந்தைய நாள் என் மேலதிகாரிகள் இருவர், தத்தமது கைப்பேசியின் இணைப்பு அட்டைகளை மின்கல ஆற்றல் குறைவால் மாற்றிக் கொண்டனர்.  மறுநாள் காலை திரும்பவும் இயல்புக்கு.  இதில் ஒருவரது கைப்பேசியில் மட்டும் ஒரு சிக்கல்.  பேசும் போது மறுமுனை குரல் கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் இருக்கிறது. இவரும் ஒலி அளவைக் கூட்டிப் பார்க்கிறார்.  என்னென்னவோ செய்து பார்க்கிறார்.  சிக்கல் தீரவில்லை.  கூட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் அவருக்கு!  இருக்கும் வேலையில் கைப்பேசியினால் அளவுக்கதிகமான பதற்றம்.

Mobile Cover

நிகழ்வைப் பார்த்த ஒரு கடைநிலை ஊழியன்,  அஜீத் ஒரு படத்தில் கருணாசுக்கு கண்ணாடியை திருப்பி வைத்து விட்டு, தானியை எடுக்கச் சொல்வாரே, அது போல கைப்பேசியில் தூசு உறையை கழட்டுகிறார்.  திரும்பவும் மாட்டுகிறார். சிக்கல் தீர்ந்தது.  உறையை திருப்பி போட்டதனால், ஒலி கேட்பதற்கேற்ப, துளைகளுள்ள பகுதி பின்னால் சென்று விட்டது. விசயம் புரிந்ததும், அதிகாரிகள் கை தலையில்!

காலையில் அலுவலகம் வந்ததும் அனைவரும் பதட்டத்திலிருந்தனர்.  சரக்கு பெட்டகம் ஏற்றிச் சென்ற வாகனம் ஒரு சாலைத் திருப்பத்தில், நிலை தடுமாறி கவிழ்ந்து விட்டது.  ஊழியர் ஒருவரிடம் நடந்த விசயத்தை சொல்லிக் கொண்டிருந்தவர்,  நேற்று இரவிலிருந்து தொலைக்காட்சி செய்தியில் ஒலிபரப்பானதே!  அப்போது நடிகைகளின் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தாயா? அப்போது பார்த்திருந்தால் அது நம்முடைய வாகனம் என்று தெரிந்திருக்கும்! என பெருங்குரலில் திட்டியபடி இருந்தார்.

Container Accident

ஒரு கட்டத்துக்கு மேல், தலை குனிந்து கொண்டிருந்த ஊழியர் ” எங்க வீட்ல கரண்ட்டே இல்ல சார்! ”தயங்கியபடியே சொன்னார்.

நான் தப்பு பண்ணீட்டேன்.  சே! இந்த கோணத்தில் நான் நினைத்துப் பார்க்கவே இல்லையே! என அதிகாரி அரற்றிக் கொண்டிருந்தார்.  பின்னர், மின்வசதி பெறுவதற்கும் உதவினார்.

சில நிகழ்வுகள் சிலருக்கு பாடங்களாகின்றன.

Advertisements

Comments on: "‘ஙா’னிகள்" (57)

 1. இதிலிருந்து அறியப்படுவது யாதெனில்! 😉

 2. ‘ஙே’ ன்னு முழிச்ச சம்பவம் நிறைய இருக்கு வெயிலான்.

 3. உண்மைதான் அண்ணா .. ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொருவருக்கு பாடமாகின்றன..

 4. இதிலிருந்து அறியப்படுவது யாதெனில்!..

  ஹெ..ஹெ.

 5. மிக மிக எளிதாகவும் ஆனால் நேரடியாகத் தாக்கும்
  எழுத்துக்கள்.

  ” நடமாட்டு மோத்தரண்டா, தடிமாட்டுப் பெயலே”

  என்ற நம்மூரு சொலவடையை ஞாபகப்படுத்தும் அழகிய பதிவு.

 6. கார்த்திக் said:

  // கைப்பேசியின் இணைப்பு அட்டைகளை மின்கல ஆற்றல் குறைவால் மாற்றிக் கொண்டனர் //

  தல இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு தமிழ்ல சொல்லமுடியுமா ?

  ஙா

  • தமிழுக்கு விளக்கம் கேட்கும் பெரியார் ஊர்க்காரரே! இது உமக்கே நியாயமா?

   இணைப்பு அட்டை – சிம்கார்டு
   மின்கல ஆற்றல் – பேட்டரி சார்ஜ்

 7. கார்த்திக் said:

  // இணைப்பு அட்டை – சிம்கார்டு
  மின்கல ஆற்றல் – பேட்டரி சார்ஜ் //

  இப்படி தமிழ்ல சொல்லுங்க :-))

 8. ஙா’னிகள் – தற்கால நொன்னைகள்..:-)

 9. டேமேஜர் கூட எதுவும் சண்டையா ரமேஷ் அண்ணே..?

 10. ஹிஹி…நாங்கள்ளாம் புகைப்படச்சுருள் இல்லாமலே புகைப்படம் எடுப்பதா பிலிம் காட்டியிருக்கோமே! :-)) நல்ல இடுகை, வெயிலான்!!

  • // நாங்கள்ளாம் புகைப்படச்சுருள் இல்லாமலே புகைப்படம் எடுப்பதா பிலிம் காட்டியிருக்கோமே! //

   அது நீங்க தெரிஞ்சு பிலிம் காட்டுவது.

   நான் சொன்னது தெரிஞ்ச மாதிரி பிலிம் காட்டுவது…. 🙂

 11. பங்கெடுத்து கொள்ள முடியாமல் பொன் மானை தேடிக்கொண்டிருக்கும் வெங்காயத்தின் கலை மான் வார்த்தைகளை யாரோ திருடி பின்னுட்ட மிட்டுருப்பதை பொறுக்க முடியவில்லை?

  யோசிக்க வைத்த (அட இப்படிக்கூட முடியுமா?) படங்களும் நல்ல தமிழ் முயற்சிகளும். கலக்கலில் தெளிந்த முத்து.

  பூங்கொத்து.

  • // பொன் மானை தேடிக்கொண்டிருக்கும் வெங்காயத்தின் கலை மான் வார்த்தைகளை //

   ஆஹா! அருமை.

   என் வலை வீடு தேவியர் இல்ல பூங்கொத்துக்களால் நிரம்புகிறது.

 12. கைப்பேசி என்பதை விட அலைபேசி என்பது சிறப்பான மொழியாக்கமாக இருக்கும். ஒலியை அலைவடிவில் நேராக பெறுவதாலும், அலைந்து கொண்டே பேச முடிவதாலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். சரியா இல்லை ஞே என்று முழிக்க வைத்து விட்டேனா?

  http://kgjawarlal.wordpress.com

 13. அருமையான “ங”

  பிறந்தவுடனே சொல்ல துவங்கிவிட்டேன். 🙂

  //என்னயப் பாத்து தான் எல்லாரும் இப்படி கேள்வி கேட்பீங்களா? நானென்ன நீதிக்கதையா எழுதுறேன் கோவியார் மாதிரி? 🙂
  அவ்வ்வ்வ்வ்வ்வ்………///

  பதிவை விட கோவியாரை குறிப்பிட்டது ரொம்ப சூப்பர் 🙂

 14. தமிழ் விளையாடுது தல!
  தொடர்ந்து இதே போல் தமிழில் மட்டும்!

 15. //நான் தப்பு பண்ணீட்டேன். சே! இந்த கோணத்தில் நான் நினைத்துப் பார்க்கவே இல்லையே! என அதிகாரி அரற்றிக் கொண்டிருந்தார். //

  அந்த அதிகாரி யாருங்க நீங்களா?

 16. நல்லதொரு பகிர்வு நண்பா..

  வித்தியாசமான தலைப்புக்கும் சபாஷு!

 17. //தனக்குத் தான் எல்லாம் தெரியும் என எண்ணிக் கொள்ளும் ‘ஙா’னிகள்.//

  நானும் ஒரு ஙானி என்ற முறையில் கேட்கிறேன், எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் இந்த ‘ஙானி’த் தனம் எப்படியாவது எட்டிப் பார்த்துவிடுகிறதே, அதை எப்படி அடக்குவது? ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்கள் நண்பா.

  உங்க பதிவுகளை நான் அவதானித்தவரை, இந்த பதிவிற்கு என்றில்லை, உங்களின் எல்லா இடுகைகளின் தலைப்பிலும் ஏதாவது ஒரு வித்தியாசம், அதே நேரத்தில் பதிவிற்கு அத்தனை பொருத்தமாகவும்.அதற்கு எவ்வளவு உழைப்பைக் கொடுப்பீர்கள் என்பதையும் அறிவேன். இந்த ஒரு விஷயத்திற்காகவே மனம் திறந்த பாராட்டுகள் வெயிலான்.

  • அட! எனக்குமே அப்படித்தான் நண்பா! வேண்டுமானால் ஸ்வாமி ஓம்காரைக் கேட்டுப் பாருங்கள். தீர்வு கிடைக்கலாம்.

   என்ன செய்தாலும், இஷ்டப்பட்டு செய்ய வேண்டும் இல்லையெனில் செய்யாது விட்டு விட வேண்டும் என்று நினைப்பேன்.

   நன்றி நாடோடி இலக்கியன்!

 18. பிரபு.இரா said:

  சரக்கு பெட்டகம் தூத்துக்குடிக்கு போற வழியிலயாண்ணே கவுந்துச்சு?????

 19. மின்கல ஆற்றல் – appadina enna?

 20. போட்டோ உங்களுதாண்ணே.?

 21. ஒன்னுமே பிரில பாசு.. தமிழ்ல எழுதுங்க.. 🙂

 22. என்ன சொல்ல?
  நல்லா இருக்கு.

 23. 🙂 பதட்டத்தோட, அதிகார மனோபாவமும் சேரும்போது இப்டி ஆகிடுது

  இந்த முதல் படத்தை (முட்டைத் தலை) எப்டி/எங்க தேடிப்பிடிச்சீங்க ?

 24. அன்பே சிவம் படத்தில் வரும் மாதவன் ஞாபகம் வந்துவிட்டது. பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: