‘நகர்’வு

Anklet

கடக்கும் வாகனப்

பின்னமர் பெண்

கைகளுள்ளிருக்கும்

மடிக்குழந்தையின்

வெளித்தெரியும்

சிறுகொலுசுக்கால்கள்

அழகென்றேன்…..

உடனடந்தவள்

பார்வையில்

சந்தேக எச்சம்

50 thoughts on “‘நகர்’வு

  1. வெயிலான், நல்லா இருக்கு.

    ”கைகளுள்ளிருக்கும்” கைகளுக்குள் இருக்கும்
    ”உடனடந்தவள்” உடன் நடந்தவள்

    நல்ல கவிதையை ரொம்ப கஸ்டப்பட்டு படிக்க வச்சிட்டிங்கன்னு நினைக்கிறேன்.

  2. இந்த பொண்ணுகளே இப்படித்தான்..

    அதுக்காக குழந்தையை ரசிச்சா கூட சந்தேகப் பட்டா என்ன தான் செய்றது??

  3. உங்களின் ரசனையை ஏற்கனவே புரியவைத்ததனால் சந்தேகமா அல்லது இன்னும் புரியவைக்காததால் சந்தேகமா. சந்தேகமா இருக்கு! :)))))

  4. வெயிலான் நகைச்சுவை கலந்த வரி… இந்த பெண்களே இப்படி தான் எனும் ஒரு சிறு நெடி கொஞ்சமாய் எட்டிப் பார்க்கிறது… ம்ம்ம்ம் ஆகட்டும் 🙂

  5. நகைச்சுவை, உண்மை,படபடப்பு, மூன்று சேர்ந்த மொத்த கலவையான சிறப்பு.

    அப்படியே கட்டியணைத்து பறக்க விட்டு பரிதாபத்தில் பறந்து செல்லும் மானத்தைப்பற்றி (சிக்கிய துப்பட்டா) சற்று எழுதுங்களேன்.

    லாவகமான இந்த வார்த்தைகளைப் போல், நீங்களும் தினந்தோறும் சாலையில் பார்த்துக் கொண்டு தான் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

    ஓத்துழைப்புக்கு நன்றி.

    தேவியர் இல்லம். திருப்பூர்

  6. மிக அருமையா சொல்லியிருக்கீங்க வெயிலான் அண்ணா.

    சிம்பிள் & அண்ட்; சூப்பர்

    //சஞ்சய்
    மிகச் சிறந்த கவிதை.

    (ஏன்னா, எனக்கு புரியலை.. ) //

    இவருக்கெல்லாம் புரிஞ்சுருந்தா தான் ஆச்சரியமே!!

முரளி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி