அடர் வனம்

காட்டுக்குள் மூங்கில்களாலான அறை, மிகச்சிறந்த உணவு, அருமையான விருந்தோம்பல், மனதொத்த நண்பர்கள், சிறு மழையும், கடுங்குளிருமாய் கழிந்தன மூன்று நாட்கள்.

அடர்வனத்துக்குள் நான்கு மணி நேர நள்ளிரவுப் பயணம்.  வனவிலங்குகள் பல காணக்கிடைத்தன.  யானைக்கூட்டமொன்று துரத்தியது.   நள்ளிரவாகையால் விலங்குகளை  தெளிவாக படமெடுக்க இயலவில்லை.

38 thoughts on “அடர் வனம்

  1. // நள்ளிரவாகையால் //

    அண்ணாச்சி கூட சேர்ற எல்லோரும் இப்படி ஆயிடறீங்க. ஹிஹிஹிஹி…

    வார்த்தைகளை சேர்த்து சேர்த்து எழுதுவதை சொல்கிறேன். அவர் தான் ”எண்ணிக்கொண்டிருக்கையிலேவனது” அப்டின்னு எழுதுவாரு.

  2. வாழுறீங்க இப்படி அப்பப்ப சுத்திகிட்டு….

    நள்ளிரவாகையால் விலங்குகளை தெளிவாக படமெடுக்க இயலவில்லை. //

    துரத்தின யானைகிட்ட இருந்து தப்பி உயிர் பிழைச்சதை எழுதாம அங்கே படமெடுக்காதது தான் உங்களுக்கு வருத்தமாயா….

  3. எங்க ஊரு அடர்கானகபுலியை விட ரொம்ப டேஞ்சரா யானை?:)) அடர்கானகபுலி கூடயே மூன்றுநாள் இருந்துட்டீங்க, இனி சிங்கம் புலி எல்லாம் பிசாத்து மேட்டர்:)

  4. அன்பின் வெயிலான், படங்களுடன் அட்டகாசமான பதிவு. கோவையில் ஓசை அமைப்பு புகைப்படக் கண்காட்சியையும், டாகுமெண்டரி திரையிடல்களையும் நிகழ்த்தி வருகிறது. நாம் பார்த்த ஒவ்வொரு விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயரையும், விசித்திர குணாம்சங்களையும், காட்டிற்கு அவற்றின் பங்களிப்பினையும் ஓசையின் வாயிலாக அறிந்து விழிகள் விரிந்தேன். கழுதைப்புலி பற்றிய நீள் கட்டுரையொன்றும், தமிழ்நாட்டு யானைகள் தமிழரல்ல…! என்ற தலைப்பிலுமாக எழுதி வருகிறேன். தீராநதியில் வந்த ஓசை காளிதாஸின் நேர்காணல் இணையத்தில் கிடைக்கிறது. காடு குறித்த புரிதல்களை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக இருக்கிறது.

  5. நீல வர்ண ஆகாச பிண்ணனியில் சுந்தரராமசாமி ரேஞ்சுக்கு எடுத்த புகைப்படமெல்லாம் இருக்க ஸ்டாம்ப் சைஸில் மூஞ்சி கழுவாத படத்தைத்தான் போடனுமா… 🙂

  6. இது ஒரு அருமையான அனுபவமா இருந்திருக்கும்னு நம்பறேன்.

    //வெறும் படங்கள் மட்டும் தான் இப்போ. பதிவு இனிமேல் தான்//

    பதிவோடு, இன்னும் நிறைய படங்களையும் வெளியிடுவீங்களா ?

☼ வெயிலான் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி