சொக்கப்பனை

Child

பள்ளியூட டவுசர் சட்டையே

புதுத்துணியாவும்

வெல குறைஞ்ச

ஓலை வெடியே வேட்டாவும்

பெரிய வீட்டு புஸ்ஸு

வேட்டு சொக்கப்பனயாவும்

பலாரச் சீட்டுக்காரருக்கு

கட்டுப்படியாவதே

நம் வீட்டு பலகாரமாவும்

கழிச்ச தீவாளிக்கு

இணையில்லை

இப்போதையவைகள்….

28 thoughts on “சொக்கப்பனை

  1. கொன்னுட்டீங்க…

    அந்த கருப்பு வெள்ளை புகைப்படமும், அதிலுள்ள மெல்லிய புன்னகையும், அப்புறம் கொஞ்சம் யோசித்து படிக்கப்பட்ட கவிதையும்………….

  2. உண்மை, பகிர்ந்து அளித்து விடிய காத்து வெடித்த பட்டாசுகளும், டெய்லர் கடையில் காஜா பையன் கையில் இருந்து பிடுங்கி வந்து அணிந்த ஆடைகளும், பலகார சீட்டு இனிப்பும் ……………இனிமேல் வரவே வராது என்றே நெனைப்பே தொண்டை அடைக்க செய்கிறது. இழந்து பெற்ற இந்த தீபாவளி இனிக்கவே இல்லை.

  3. // நம் வீட்டு பலகாரமாவும்

    கழிச்ச தீவாளிக்கு

    இணையில்லை

    இப்போதையவைகள்….//

    உண்மையான வரிகள்.

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

☼ வெயிலான் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி