சலம்பல்

அலுவலகப் பயணமாய் சென்ற வாரத்தின் முதலிரண்டு நாட்கள் தூத்துக்குடி.

கோடை கால தூத்துக்குடியின் முகமே வேறு.  வெக்கையும், புழுதியும், கடற்காற்றும் நம்மை பிசுபிசுக்கச் செய்யும். இந்த முறை தூத்துக்குடி அப்படியில்லை.  எப்போதும் தங்கும் விடுதியில், திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்காக வந்திருக்கும் வெள்ளை வேட்டிகள் மற்றும் கொடியுடனான வெள்ளை வண்டிகள் சாலையடைத்து நெரிசல்.

துறைமுக இணைப்புச் சாலை வேலைகள் இன்னும் முடியவில்லை.  எப்போதும் போல ஒரு வழிப்பாதைக் குழப்பம் இம்முறையும்.  இரவு தூக்கம் வராமல் ஐந்தாவது மாடியிலிருந்து சில படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன்.  உணவகங்களைப் பற்றி விசாரித்தால், எல்லோரும் ஒன்றிரண்டு பெயர்களையே சொன்னார்கள். அப்படியொன்றும் விசேசமில்லை.  தூத்துக்குடி வட்டாரமொழி ஒருவித தனித்துவம் கொண்டது.

அவம் ஏம்ல அங்க நிக்கான்….

சாரத்த எறக்கி விடுலே….

இப்பம் கான்ல போட்டுட்டு ஏச்சு வாங்கப் போற பாரு……

மக்ரோன் பொதிகள் பையில் இடம்பிடித்தது எப்பவும் போல.

சாலையோர பனை மரங்களில் ஓலைகளின் சலம்பல்களோடு திரும்பல்.

Advertisements

Comments on: "சலம்பல்" (32)

 1. //கோடை கால தூத்துக்குடியின் முகமே வேறு. வெக்கையும், புழுதியும், கடற்காற்றும் நம்மை பிசுபிசுக்கச் செய்யும். இந்த முறை தூத்துக்குடி அப்படியில்லை. எப்போதும் தங்கும் விடுதியில், திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்காக வந்திருக்கும் வெள்ளை வேட்டிகள் மற்றும் கொடியுடனான வெள்ளை வண்டிகள் சாலையடைத்து நெரிசல்.//

  கவிதையா? இரண்டு முறை இருக்கே,அதான் கேக்கேன்.

  படமெல்லாம் நல்லாதாம் இருக்கு.

 2. //மக்ரோன் பொதிகள் பையில் இடம்பிடித்தது எப்பவும் போல//

  தூத்துக்குடி போய்ட்டு அது இல்லாமலா?

  ப‌ட‌ங்க‌ள் ந‌ல்லாருக்கு

 3. படங்கள் எல்லாமே நல்லா இருக்கு வெயிலான்

 4. படங்கள் சூப்பரா இருக்கு தலைவா!
  எனக்கும் தூத்துக்குடி சாலைகளைப் புரிஞ்சுக்கவே முடியலை!
  ஆனா நல்ல மனிதர்கள் !

 5. சலம்புனதும் நல்லாத்தான் இருக்கு:-)

  படங்கள் அருமை.

 6. மொட்டை நல்லா இருக்கு 🙂

 7. ஈரவெங்காயம் said:

  // மக்ரோன் பொதிகள் //

  அப்படின்னா என்ன தல..?

 8. நல்ல பதிவு…
  படங்கள் சூப்பர்….

 9. Some Pics are great esp the kid with sunglass.
  Red ice drops on shirt and saliva in mouth are came out in detail.
  Boat also came out well.

 10. படங்கள் சூப்பர்..மொட்டை பாஸ் அழகு! 🙂

 11. எப்பயும் போல நல்லா இருக்கு..

 12. மொட்டை பாஸ் சூப்பர்

 13. ஏல, நல்லாதாம் சொல்லீருக்கீக.
  படம் பூராம் ச்சூப்பரா இருக்கு… போகும்போது கேமராவ தூக்கிக்கிட்டே போயிட்டியளோ?? 🙂
  எனக்கு எங்க மக்ரூனு….??

 14. அந்த கோபுரம் பனி மாதா கோயிலாங்ண்ணா? படங்கள் சூப்பருங்ண்ணா…

 15. முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் நன்றாக egg beater ல் அடித்து அத்துடன் நைஸாகப் பொடிச்ச முந்திரியை யாருக்கும் தெரியாம நைஸாக் 🙂 கலந்து கூடவே நைஸாப் பொடிச்ச சக்கரை, இல்லேன்னா castor sugar சேர்த்து oven bake செஞ்சால் மக்ரோன் கிடைக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: