வெற்றிப் படம்

நக்கல், கிண்டல், தெனாவட்டு, அசால்ட்டு, நையாண்டி இதெல்லாம் கலந்த ஒரு லொள்ளுக்கு ஒரு உதாரணம்

தமிழ்ப்படம்

வடிவேலு சொல்லுவது போல், இது வரை தமிழ்ப்படங்களில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களையும், இயக்குநர்களையும், பாடலாசிரியர்களையும் ஒரு முட்டுச் சந்துக்குள்ள வுட்டு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கொஞ்சங்கூட இடைவெளி இல்லாமல் அடி வெளுத்திருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார்களுக்கும், தளபதிகளுக்கும் டேமேஜ் அதிகம்.

நம்ம வலையுலகின் பிரபல பதிவர்கள் ஒரு அப்பாவி வலைப்பதிவன் எக்குத்தப்பாக மாட்டும் போது பின்னூட்டத்தில் சும்மா கும்மு கும்முனு கும்முவார்களே அது போல கும்மியெடுத்திருக்கிறார்கள்.

சமயங்களில் தணிக்கைத் துறையினரைக் கூட.  விளம்பரப் படங்களைக் கூட விட்டு வைக்கவில்லை.

உன்னைப் போல் ஒருவன் /ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி வலைப்பதிவர்கள் விமர்சித்தது போல இப்படத்தை விமர்சிக்க முடியாது.  ஏனென்றால் படமே நாலைந்து குசும்பன்கள் சேர்ந்து தமிழ்ப்படங்களை விமர்சித்தால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கிறது.

அமெச்சூர்த்தனமான விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியின் நீட்சி இப்படம்.  முதல் பாதி முழுவதும் இடைவிடாத நகைச்சுவை.  பிற்பாதியில் கொஞ்சம் குறைவு.  ஆனால், படம் நிறைவு.

நீண்ட நாட்களுக்குப் பின், பட இடைவேளையின் போதே அனைவரின் மகிழ்வான முகங்களைக் காண முடிந்தது.

திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் திரும்பிச் செல்லும் கூட்டமே அதிகமாயிருந்தது.  இரு சக்கர வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் நண்பர் செந்தில், அவர் வண்டியை Ticket Counterக்குள் நிறுத்தியிருந்தார்.

எங்கள் எல்லோருக்கும் (12 பேர்) நுழைவுச்சீட்டு எடுத்துக் கொடுத்த முரளிக்கு சீட்டு இல்லை.

நண்பர்களுடன் பார்த்ததில் நல்ல படம்.  நீங்கள் அடுத்து படம் ஏதாவது பார்க்க வேண்டுமென நினைத்தால் முதலில் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாம்.  மேலும், இது போன்ற படங்கள் அடிக்கடி வந்தாலே, மற்றவர்கள் எங்கே நம்மைக் கலாய்ப்பார்களோ என பயந்து நல்ல படங்களைக் கொடுப்பார்கள்.

நம் வலையுலகத்தைச் சேர்ந்த கே. சந்துரு என்ற மின்னல் ப்ரியன் இப்படத்தின் வசனங்களும், பாடல்களும், எழுதியிருக்கிறார்.  துணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

நல்ல நகைச்சுவைப் படத்தைக் கொடுத்ததற்கு, சந்துருவுக்கும் படக்குழுவுக்கும், ‘அ’ஞ்சா நெஞ்சத் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்!!!!!

Advertisements

Comments on: "வெற்றிப் படம்" (39)

 1. எல்லா பதிவர்களுமா கவர் வாங்கிருப்பாங்க ! ஒண்ணுமே புரியலையே, ஒரு வேளை உண்மையாவே படம் செம ரகளை போல., பார்த்துடுவோம்! ( முடிஞ்சா கேபிளிடம் சொல்லி பதிவர்கள் அனைவருக்கும் கவர் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்கப்பா !

 2. விமர்சனத்திற்கும், சந்துருவின் அறிமுகத்திற்கும் நன்றி. இதை பார்த்தாவது தமிழ்பட உலகம் திருந்தினால் சரி.

 3. நானும் பார்த்து விமர்சனம் எழுதிருக்கேன். படம் செம entertainer

 4. ஆமாண்ணே நானும் பார்த்தேன்.. உண்மைலயே நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல நகைச்சுவை படம்
  :))))))))))))))))))))))))))

 5. வடிவேலு உதாரணம் டாப்.

  பைதவே, சந்துரு அழைத்திருந்தார் இன்று!!!

  //(12 பேர்) //

  15!

 6. ////நம்ம வலையுலகின் பிரபல பதிவர்கள் ஒரு அப்பாவி வலைப்பதிவன் எக்குத்தப்பாக மாட்டும் போது பின்னூட்டத்தில் சும்மா கும்மு கும்முனு கும்முவார்களே அது போல கும்மியெடுத்திருக்கிறார்கள்.////
  —பாம்பின் காலை பாம்பறிகிறது..!

  வெளிப்படையான சுய விமர்சனத்திற்கு நன்றி. சுயநினைவிழந்து அப்படி உங்களை(பதிவர்கள்) சுயவிமர்சனம் செய்ய வைத்த அந்த தமிழ் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.

 7. தமிழ்படம் பற்றிய நம் பதிவர்களின் விமர்சனங்கள் அனைத்தும் அருமை. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் சந்துருவுக்கு.

 8. ithellam eppo nadanthuchu.. aha.. sari ok.

 9. அப்போ இதுல பின்னவீனத்துவம் அப்படில்லாம் ஏதும் இல்லியா…
  தெகிறியமா பார்க்கலாம்..ரைட்டு.

 10. அப்படியா கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் நன்றி வெயிலான்.

 11. தல… இன்னும் ஒரு தடவை பார்க்கணும் , வரீங்களா….

 12. கதை சொல்லாமல் விமர்சனம் செய்தது அருமை.

 13. யோவ் செந்தில் என்கிட்ட கேட்க வேண்டிய கேள்விய?

  தல, நான் இன்னைக்கு மறுபடியும் புக் பண்ணியிருக்கேன். நண்பர்களோடு சேர்ந்து சிரிக்க ரொம்ப பிடிச்சிருக்கு. முதல் முறை பார்த்தபொழுது நிறைய மிஸ் பண்ணிட்டேன், டிக்கெட்டை விட்ட டென்ஷன் வேற…

 14. //நம்ம வலையுலகின் பிரபல பதிவர்கள் ஒரு அப்பாவி வலைப்பதிவன் எக்குத்தப்பாக மாட்டும் போது பின்னூட்டத்தில் சும்மா கும்மு கும்முனு கும்முவார்களே அது போல கும்மியெடுத்திருக்கிறார்கள்//

  கங்கணம் கட்டிட்டு இருக்குத மாதிரிலா இருக்கு.

 15. தல ,
  சூப்பர் விமர்சனம்

 16. Blockbuster running in which theater in tirupur if u tell, will much helpful. i like to see this movie.

 17. கார்த்திக் said:

  // அமெச்சூர்த்தனமான விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியின் நீட்சி இப்படம். //

  சந்தானமும் ஜீவாவும் போன பின்னாடி அந்த நிகழ்ச்சி அமெச்சூர்தனமா போயிருச்சு

  நல்ல படம் நல்ல விமர்சனம் தல

 18. நானும் முதல் நாளே படத்த பார்த்தாச்சுங்ண்ணா, சூப்பருங்ண்ணா!!!

 19. படத்தின் வசனங்களில் தேர்ந்த ‘சட்டையர்’ இருந்தது. வசனகர்த்தா இயக்குனர்தான் என நினைத்துக்கொண்டிருந்தேன். படத்தின் பல்வேறு வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மின்னல் பிரியனுக்கு என் வாழ்த்துக்கள்!

  • படத்தின் வசனகர்த்தா கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவர் தான். உங்கள் வாழ்த்துக்களை அவரைச் சந்திக்கும் போது சொல்லி விடுகிறேன் செல்வா! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: