நல்லாருக்கு

தலவாசக் கதவும் நிலையும் தேக்கு
கேரளாலருந்து கொணாந்த தடி
பாலிசுக்கே பாஞ்சாயிரமாச்சு

ம்….

தரைக்கு கிரானைட் போட்டிருக்கலாம்
கடசீல சதுரக்கல்லு பதிச்சிட்டேன்
சதுர அடிக்கு அஞ்சாயிரமாச்சு

ம்…. நல்லாருக்கு

புள்ளைக ரூமு டிசைனே தனி
கட்டில்லருந்து சுவத்துலருக்கிற படம் வரைக்கும்
மானத்துல இருக்குற மாதிரி நட்சத்திரம் வேற

ம்…. டிசைன் நல்லாருக்கு

பாத்ரூமுக்கே ஜாக்குவார் குழாயி
டப்பு டைல்ஸ் பேசினு கண்ணாடினு
காசு அத்துருச்சு

ம்…. எல்லாந்நல்லாருக்கு

பெட்ரூம் கட்டிலும் மிச்ச தேக்குலயே
அப்படியே பீரோலும் மரத்துலேயே புதுசா
கையோட ஏசியும் மாட்டியாச்சு

ம்…. ரொம்ப நல்லாருக்கு

எல்லாமே நீட்டா இருக்கணும் எனக்கு
அதனால தான் காசக்கூட பாக்கல
அந்தா இந்தானு அம்பதாச்சு
ம்…. எல்லாமே நீட்டாருக்குடா

அம்புட்டையும் விட

அவம்வீட்ட நெனச்சா

எந்நெனப்புக்கு வர்றதென்னமோ

அந்த அழுக்குச் சீப்பு மட்டுந்தான்!

34 thoughts on “நல்லாருக்கு

  1. கடைசிப்பத்திய தவ்வி வந்ததால முதலில் புரியல.அழுக்குச்சீப்ப வச்சிக்குட்டு பேந்த பேந்த முழிச்சன்.திரும்ப போயி பாத்தாப்றம்.

    அடடா கவிதை.கவிதை.

  2. ஒன்று புது சீப் வாங்குவது அல்லது பழையதுக்கு ப்ரஸ்ஸால் பல் துலக்கிவிடுவது… எதுவும் செய்யாமல் சிலர் சீப்பை சீப்பாக வைத்திருக்கிறார்கள்..
    நல்கருத்து!

  3. சீப்பை ம‌ட்டும் பார்க்கும்
    சீப் மெண்டாலிடியா?
    பெருமை பீற்றியவ‌ரின்
    சிறுமைக் குண‌மா?
    அல்ல‌து இருவ‌ருமே அப்ப‌டித்தானா?

  4. தல அருமை, சூப்பர், அடா அடா, ங்கொக்கா மக்கா!

    அந்த ஒயின் கிளாஸ் இருக்கும் ஸ்டாம்ப் சைஸ் flicker போட்டோவை சொன்னேன்!:)) பல தத்துவங்களை சொல்லுது தல அந்த போட்டோ!!!

    ஹி ஹி நாங்க எல்லாம் அர்ஜுனன் மாதிரி தேவையானது மட்டும் தான் கண்ணில் படும். பாஸ் அதை கிளிக் செஞ்சா பெருசா ஆவ மாட்டேங்குது இங்க flicker தடை. கொஞ்சம் பெருசாக்கி அனுப்புங்களேன்:))))

நாடோடி இலக்கியன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி