டேய் செரட்ட! எதுக்குடா ஸ்டிரைக்கு?
எனக்கென்ன தெரியும்?  நானும் உங்கூடத்தான வர்றேன்.
அந்தா, அவன் உந்தெருக்காரன் தான? கேட்டுப் பாரேன்!
டேய் சைசு! இப்பக் கேட்டேன்னா அப்பியே புடுவாங்ஙடி!  மூடிட்டு வா!

வெளியேறு!  வெளியேறு!  பள்ளியை விட்டு வெளியேறு!
மாற்று!  மாற்று!  தலைமையாசிரியரை மாற்று!

என்ன ஸ்டிரைக்குடா?  எதுக்கு இப்புடி ஊர்வலம் போறீங்க?
தெர்லண்ணாச்சி!  பன்னெண்டாப்பு அண்ணங்ஙெல்லாம் காலைலயே பள்ளியூடத்துக்குள்ளயே உடல.  அங்கருந்து ரோட்டு வழியெ கூட்டீட்டு வந்துட்டாங்கண்ணாச்சி!

பள்ளிக்கூடம் இன்னிக்கு இருக்காடா?
போயிப் பாத்தாத்தான தெரியும்.  கெளம்பு!
காக்கி டவுசர் மாத்தீட்டு வரட்டா?
போய்ப் போட்டுட்டு வா!  இல்லேண்ணா, ஒண்ணுமில்லாமக் கூட வா! எனக்கென்ன?
இர்றா மயிரு! மாத்தீட்டு வர்றேன்! பள்ளிக்கூடம் தொறந்திருந்தா திரும்ப ஓடியாறணும்?

பள்ளியூடத்து பக்கம் போனியாடா?
இல்லடா!  நா அங்கிட்டுப் போகல…. கவட்டக் காலன் காலைல நந்தவனத்துக்கிட்ட வெளிக்குப் போம்போது பாத்தானாம்.  திரும்ப சொல்ற வரைக்கிம் லீவுனு தட்டில எழுதிப்போட்டிருந்துச்சாம்.
ஐய்யய்யோ!  சும்மாவே எங்கய்யா படி! படிம்பாரு.  இனி பொஸ்தவமும், கையுமா வீட்டுக்குள்ளயே ஒக்கார வச்சிருவாரு.  என்ன பண்றதுடா?
நம்ம க்ளாசு வாத்தியார் வீட்ல வச்சு பாடம் நடத்துறாராம்.  க்ளாஸ் மாதிரி இல்லியாம்.  நல்லா ஜாலியா சொல்லித் தர்றாருனு மூக்கன் சொன்னான்.  அங்க போயிரலாண்டா!

காட்டாஸ்பத்திரிக்கிட்டருக்கு வாத்தியார் வூடு! அது வரைக்கும் பைக்கட்டத் தூக்கீட்டு வரமுடியாதாடா சைசு?
சைக்கிள்ல சும்மா டக்கடிச்சிட்டு  தான வர்ற…. பின்னாடி கேரியல்ல வச்சா கொறஞ்சா போற?
செரட்ட! எதுக்கு லீவு வுட்டாங்ஙனு மாங்காயன்ட்ட கேட்டியாடா?
இல்ல. அவன் தெருப்புள்ளைக கூட சேந்து தீப்பெட்டி ஒட்டீட்டிருந்தான்.  கேக்க முடியல.

எதாச்சும் தெரிஞ்சுச்சாடா?
ம்… ம்…. சொல்றேன் எவங்கிட்டயும் சொல்லீராத!  பக்கத்துக்க்ளாசுல ஆரோக்யராஸ் இருக்கான்ல.  லூயிசு கூடச் சுத்திட்டிருப்பான்ல.
ஆமா! அவிங்ங ஞாய்த்துக்கிழம கோயிலுக்கு ஒண்ணாப்போவாங்ங.
அப்பம்போது தான் ஆரோக்கியத்துக்கிட்ட, லூயிசு சொன்னானாம்.
என்ன சொன்னானாம்டா?
அது, லூயிசு கூடப்படிக்கிறவன் ஒருத்தன் கேட்டான்னு, பாஸ்பரஸ்னு ஒரு மருந்து இருக்காமே? அதுல கொஞ்சத்த மிச்சர் பொட்டணம் மாதிரி மடக்கி பள்ளிக்கூடத்துக்கு கொணாந்தானாம்.

அவனுக்கு எப்படிக் கெடச்சதுடா?

லூயிசோட மச்சான் அல்லம்பட்டில தீப்ட்டி ஆபிசு வச்சிருக்காரு.  அங்கணருந்து எடுத்திட்டு வந்திருக்கான்.
எடவேளையப்ப தொடயில சுரு சுருன்ருக்கு.  என்னனு பாத்தா, டவுசர் பைக்கட்ல இருந்த பொட்டணம் கிழிஞ்சு, பைக்கட்ல ஓட்டை விழுந்திருக்கு.  தொடையிலயும் லேசா பொத்துப் போன மாதிரி இருந்திருக்கு.

பொறவு?

எந்திச்சுப் போயி எட்மாஸ்டரப் பாத்து வீட்டுக்குப் போறதுக்கு கேட்டிருக்கான்.  வெவரத்தச் சொல்லி, தொடையக் காமிச்சிருக்கான்.  கடசி ரூம்ல இரு. பெல்லடிச்சதும் நா வர்றேன்ருக்காரு.

அப்றம்?

அம்புட்டுத் தான் சொன்னானாம் லூயிசு.

ஆனா, எட்மாஸ்டர் ரெஸ்ட் எடுக்குற ரூம்லருந்து லூயிசு அழுதுட்டே வந்தத இட்லிக் கருப்பையா வாத்தியார் கிளாசுப் பயங்ஙெல்லாம் சன்ன வழியா பாத்திருக்காங்ங.

ரூம்ல என்ன நடந்துச்சுடா?

ம்… எட்மாஸ்டர வேணாக் கேட்டுச் சொல்லட்டுமா?  இப்பம் அவருமில்ல.

என்னடா சொல்ற?  எங்க போயிட்டாரு?

அவரு இங்கயில்ல?  அவங்க வேதக்கோயில்ல சாமியார் முன்னாடி கட்டப்பஞ்சாயத்தாம்.  லூயிசிட்டயும், சாமியார்ட்டயும் மன்னிப்பு கேட்டுட்டு வேற ஊருக்குப் போயிட்டாராம்.

நல்ல வேளைக்கு ரெண்டு பேரும், ஒரு சாமி கும்புடுற வேதக்காரங்ஙன்றதுனால பிரச்சனை முடிஞ்சுதாம்.

பாஸ்பரச பைக்கட்ல வச்சா எப்புடிடா ஓட்ட விழும்?

பாஸ்பரச காத்துல வச்சாக்கூட புகையா வந்திருமாம்.  சண்டைக்காரங்ங, அவங்ஙளுக்குப் புடிக்காதவங்ங வீட்டுக் கூரைல இத எறிஞ்சிட்டுப் போயிருவாங்ஙளாம்.  கொஞ்சநேரங் கழிச்சு கூரை தீப்பிடிச்சிருமாம்.  அதெயும் ஆரோக்கியந்தான் சொன்னான்.

டவுசர் பைக்கட்ல ஓட்ட விழுந்ததுக்கெதுக்குடா செரட்ட ஸ்ட்ரைக்கு? எட்மாஸ்டர் எதுக்கு மன்னிப்பு கேட்டாரு?  ஏன் போனாரு?
அப்டியே குண்டில நாலு வப்பு வச்சா எப்டிருக்கும் தெரியும்ல?  நானே அது தெரியாமத் தான் மண்டய கொழப்பிட்டிருக்கேன்.

Advertisements

Comments on: "பாஸ்பரஸ் விளைவுகள்" (38)

 1. ஆமாமாம்…..எதுக்கு?

 2. பள்ளி சிறுவர்களுக்குள்ளான உரையாடல்கள் கொசுவத்தி சுத்த வைச்சுடுச்சு !

  //ரூம்ல என்ன நடந்துச்சுடா?

  ம்… எட்மாஸ்டர வேணாக் கேட்டுச் சொல்லட்டுமா?//

  lol :))

 3. சரி எதுக்குதான் ஸ்டிரைக்கு!

  சொல்லுங்கடே!

 4. மிகச் சிறந்த வடிவமைப்பு என்பதாக தங்கள் தளத்தையும் உங்கள் உழைப்பையும் இன்று வரையிலும் வியந்து பார்த்துக்கொண்டுருக்கும் எனக்கு இன்று எழுத்துருக்கள் (FONTS) ஏன் இப்படி வந்து உள்ளது?

 5. டவுசர் பைக்கட்ல ஓட்ட விழுந்ததுக்கெதுக்குடா செரட்ட ஸ்ட்ரைக்கு? எட்மாஸ்டர் எதுக்கு மன்னிப்பு கேட்டாரு? ஏன் போனாரு?

 6. வா.மு. கோ.மு வின் சிறுகதை ஒன்றில் சவரத்தொழிலாளி மகள் ஒருவரின் மீதான அத்து மீறலுக்கு தகப்பன் தரும் தண்டனை நினைவுக்கு வருகிறது

  மிக நன்றாக வட்டார மொழி பிரயோகம் கைவருகிறது வெயிலான் உங்களுக்கு .பிடித்திருக்கிறது உங்களின் நிலாவெயில் நடை

  🙂

 7. இது போன்ற எழுத்துருக்கள் படிக்க எரிச்சல் தரும். தொடக்கத்தில் இது போன்ற அவஸ்த்தைகள் நினைவுக்கு வருகிறது. உங்கள் தளம் எல்லாவிதங்களிலும் சரியாகத் தானே இருக்கிறது? ஏன் இந்த திடீர் மாற்றம்?

 8. வெயிலான்,
  அந்த மொழி.. பச்சக்குன்னு இழுக்குது.
  விறு விறுவென முடிஞ்சாப்ல இருக்கு வேகம்.

 9. யோவ்.. எதுக்கு ஸ்ட்ரைக்குன்னு கடைசி வரைக்கும் சொல்லவேயில்லையேய்யா டுபாக்கூர்.!

 10. வெயிலான்… எனக்கும் கதை புரியல.. ஆனா சொன்ன விதமும் அத விட எல்லா பட்ட பெயர்களும் நல்லா இருந்துச்சு..

  • செல்வம்,

   தலைமையாசிரியர் அந்த மாணவனை தன் இச்சைக்கு தவறாக பயன்படுத்த முயற்சித்திருக்கிறார். அது தான் காரணம் என்று சிறுவர்களுக்குப் புரியவில்லை. உங்களுக்கும். 🙂
   யாரும் அவர்களுக்கு சொல்லவும் இல்லை. கதை சிறுவர்களின் மொழியில், அவர்களின் மனக்கூறுகளின்படி இருப்பதால் என்னாலும் விவரித்து சொல்ல இயலவில்லை. 🙂

 11. நம்மூர்ப் பக்கம் போயிட்டு வந்தாப்ல இருக்கு வெயிலான். நல்ல வட்டார வழக்கு.

 12. அற்புதமாக வட்டார வழக்கை கையாண்டிருக்கிறீர்கள். ரசித்தேன் நன்றி…

 13. அண்ணே சூப்பருண்ணே!!!!அப்டியே நம்ம ஊர் பக்கம் போயிட்டு வந்த மாதிரி இருக்குண்ணே…

 14. Veyilaan, I heard of this incident which happened shortly after I left the school in 1977. I don’t know the veracity of this event but what I know I will write down here.

  The Edmaster (Headmaster) was really a fantastic teacher. Besides my professional education, my English knowledge (whatever little I have) also helped me a lot in many different ways throughout my career – be it in India or now away from homeland. And if that is so, I owe it to three of my English teachers (6th, 9th & 11th standard). Each one was tooooo good in their own ways, but this Headmaster was simply superb. I cannot forget his way of teaching and the way he embedded the grammar rules in the minds of students. I never used to read grammar pages of the English book.

  I felt too sad when I heard of the story and that he had to leave the school. I don’t know whether there was truth in it or not, but I know one another truth – a good school lost a very good teacher!

  Ganesh

 15. Sorry, I missed out on thanking you for another wonderful piece. Liked every word of it.

  But as many have suggested, pl change the fonts.

  Ganesh

 16. காரணம் கொஞ்சம் யூகிக்க முடிஞ்சது … ஊருக்குப் பொருத்தமா பாஸ்பரஸ் வேற! கதை நல்லா இருக்கு வெயிலான் .

 17. இந்த ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். இது தி.ஜானகிராமனின் யுக்தி. என்ன சொல்ல வருகிறாரோ அதைச் சொல்லவே மாட்டார். ஆனால் வாசகனுக்குப் புரிந்து விடும். அப்படி எழுதுவது ரொம்ப ரொம்பக் கஷ்டம்.

  ஹாட்ஸ் ஆஃப்!

  http://kgjawarlal.wordpress.com

 18. Dear Mr.Veyilaan,

  The above post is really good.

  regards,
  ragavan.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: