ஆறு தையல்

வர்றேன்னு தான சொன்னான்…. மறந்திருப்பானோ?
நேத்து நைட்லருந்து அலைச்சல் சாஸ்தி தான். காசு கூடக்கொஞ்சம் இருந்திருந்தா, சீலுத்தூர்லருந்து பர்வீன் டிராவல்ஸ்லேயே வந்திருக்கலாம். நாலு பஸ்சு மாற வேண்டியதாப் போச்சு. மெட்ராஸ்ல எறங்கி டவுண்பஸ் ஏறத்தெரியாம, ஆட்டோக்காரனுக்கு வேற நூத்தம்பது ரூவா அழுதாச்சு.

ரொம்ப ஆழமா வெட்டியிருக்கு…. டாக்டர் வர லேட்டாகும். ஜே.ஜே கூட்டிட்டுப் போயிடுங்க.
சீக்கிரமாப் போடா…. வலிக்குது.

வெயில் நம்ம ஊரவிட கொஞ்சம் சாஸ்தி தான். இதுலயும், இங்கிட்டும் அங்கிட்டும் அலைஞ்சிட்டுத் தான இருக்கானுக. அவதி, அவதியா வந்தது நல்லதாப் போச்சு. கடைசிக்கு மூஞ்சியவாவது பாக்க முடிஞ்சது. என்ன தான் வயசானவர்னாலும், எல்லாருக்கும் வருத்தமிருக்கும்ல. எல்லாம் முடிச்சிட்டு குளிச்சப்பறம் தான் கொஞ்சம் நல்லாருக்கு.

காலை மேல வைங்க. எப்படி ஆச்சு?
டூவீலர்ல போய்ட்டிருக்கப்போ எதிர்ல வந்தவன் மோதிட்டான்.
காயம் பெருசா இருக்கு. இத ஆர்த்தோட்ட காமிக்கறது தான் நல்லது.

பசி வயத்தக் கிள்ளுது. வீட்டுக்கு வழி தெரிஞ்சா நடந்தே போயிரலாம். வெக்கயில எப்படி நடந்து வழி கண்டுபிடிக்கிறது? எல்லாக் கழுத ரோடும் ஒரே மாதிரி இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் நிக்கலாம். லாட்ஜ் முன்னாடியே நில்லுங்க. பெருமாள் அண்ணனை விட்டுட்டு வந்து கூட்டீட்டுப் போறேன்னு தான சொன்னான்.

பல்லவா ஆஸ்பிடல் போயிடலாமாடா?
மொதல்ல போய் ஒரு பால் வாங்கீட்டு வா. தலையச் சுத்துது. ஆட்டோ எதுனா இருந்தா வரச்சொல்லு. பைக்ல உக்காரமுடியுமானு தெரியல.

ஒரு வேளைக்கு என்ன நிக்கச் சொன்னத மறந்திட்டானோ? நல்ல பய தான். பாலண்ணன் கல்யாணத்தப்போ ஒரு வாட்டி குத்தாலத்துல பாத்துருக்கேன். அவ்வளவா பழக்கமில்ல. இருந்தாலும் நடந்து வர்றேன்னு சொன்னவன நிக்கச் சொன்னது அவன் தானே.

எப்படி ஆச்சு? ஆக்ஸிடெண்டா?
ஆமா! பைக்ல.
எக்ஸ்ரே எடுத்துப் பாத்துட்டுத் தான் சொல்ல முடியும். அந்த ரூம்ல போய் எக்ஸ்ரே எடுத்துட்டு வந்துடுங்க.

ஏன் இந்தப்பய இப்படிப் பண்றான்? மண்டக்கனம் பிடிச்ச பயலா இருப்பானோ?  கணேசனக் கூப்பிடலான்னா வடபழனி போயிட்டான்.  பாலண்ணனுக்கு கூப்பிடலாம். அவர் வேலையா இருப்பாரு.

எக்ஸ்ரேல க்ராக் எதும் இல்ல. ஸ்டிச் தான் போடணும்.
உங்க பேர் என்ன?

திமிர் பிடிச்சவனா இருப்பானோ? ஒரு ஆள நிறுத்தி வச்சிட்டுப் போனோமே? என்ன ஆனான்னு கொஞ்சமாவது நினைச்சுப் பாக்காம தெரியாத ஊர்ல காக்கப் போட்டுட்டுப் போயிட்டானே தடிப்பய….

ஸ்……
வலி இருக்கா? வலி தெரியாம இருக்க சிஸ்டர் இன்ஞெக்சன் போட்டாங்கள்ள?
ரொம்ப வலிக்குது டாக்டர்.
கொஞ்சம் பொறுத்துக்கோங்க. முடிஞ்சது.

இவ்ளோ நேரமாகியும் வரலயே அந்தப் பய. எங்க போய்த் தொலைஞ்சானோ? அட்ரசக் கேட்டுக் கேட்டு பாலண்ணன் வீட்டுக்குப் போய்ர வேண்டியது தான். சாப்பிட்டுட்டு காலாகாலத்துல ஊருக்குப் பொட்டியக் கட்டணும்.

எத்தனை தையல் டாக்டர்?
எல்லாரும் ஏன் இந்தக் கேள்வியக் கேக்கறீங்கனு புரியல? தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க?

60 thoughts on “ஆறு தையல்

  1. :-(((((
    வண்டியில போற ரெண்டு பேரோட உறவுமுறையும், கதைசொல்லி சொல்லுற ஒரு சில விஷயமும் கொஞ்சம் முரண்படுற மாதிரி இருக்கு தல.. அதுதான் குழப்பம்..

    1. கார்த்தி, உங்களுக்கேற்பட்ட குழப்பத்தால், எனக்கு சந்தேகம் வந்து நானே திரும்ப கதையைப் படித்துப் பார்த்தேன். 🙂 தெளிவாகத் தான் இருக்கிறது.

  2. நிகழ்காலத்தில் அண்ணனோட பின்னூட்டம்.. இப்பொத்தான் புரியுது.. ரைட்டு.. இப்பொ சரியா வருது.. சாரி தல.. நானும் குழம்பி உங்களையும் போட்டு படுத்திட்டேன்..

  3. இடுகையைத் திறந்ததும் படத்தைப் பார்த்துட்டு ‘ஐயோ’ன்னு ஓடிட்டேன். அப்புறம் மனசைத் தேத்திக்கிட்டு வாசிச்சேன்.

    அப்பாடா……. பூனைக்கு ஒன்னும் ஆகலை!

    தையல்ன்னா எத்தனைன்னு கேக்கறதும், குழந்தை பிறந்துச்சுன்னு சொன்னா எத்தனை பவுண்டு ன்னு கேட்பதும்
    முக்கியமுன்னு இல்லைன்னாலும் வழக்கமான கேள்வி:-)

    அது போகட்டும். நலமா இருக்காரா?

    தையல் பிரிச்சாச்சா? எப்போ பிரிப்பாங்க?

    இது அடுத்த ‘முக்கியமான கேள்வி’:-)))))

    நல்லா எழுதி இருக்கீங்க.

    1. பூனை கண்ணை மூடுனா, உலகமே இருண்டிருச்சுனு நினைக்குமாமே, அதனால் தான் பூனை படம்.
      தையல் எப்போ பிரிப்பாங்கனு தெரியல. இந்தக் கதை எழுதுற அளவு நலமா இருக்கார் 🙂
      நன்றி டீச்சர்!

  4. நல்ல பதிவு நண்பரே

    உங்கள் தளத்திற்கு புதியவர் நான்…
    வசதி இருக்கும் போது நம்ம பக்கமும் வர முயற்சியுங்களேன்..

  5. நல்லா இருக்கு…உங்கள் பதிவுகளில் இது கொஞ்சம் வித்தியாசம்..
    ஆனாலும் சொல்வழக்கில் உங்கள் முத்திரை தெரிகிறது..
    // சீலுத்தூர் //
    // மண்டக்கனம் //

    வழக்கம் போல ஒரு சந்தேகம்..
    யாரிடமும் அலைபேசி இல்லையா..?! 🙂

    1. // பாலண்ணன் கல்யாணத்தப்போ ஒரு வாட்டி குத்தாலத்துல பாத்துருக்கேன். //

      // கணேசனக் கூப்பிடலான்னா வடபழனி போயிட்டான். பாலண்ணனுக்கு கூப்பிடலாம். அவர் வேலையா இருப்பாரு//

      உங்கள் கேள்விக்கு பதில் இங்கிருக்கிறது ராசு! 🙂

      நன்றி!

  6. ஆறு தையல் ஆற ஆறு நாட்களுக்கு மேலாகும்,ஆனால் இன்று இது அகில உலக தமிழர்களையும் சென்று அடையும்,மிகவும் நன்றாக இருக்கிறது. எனது வலைப்பதிவில் இதுபோல ஒன்று அது “எனை சந்தித்த 7 நாட்கள்” அதையும் கொஞ்சம் பாருங்கள். – http://inak009.blogspot.com/2009/04/7.html.

  7. அன்பின் வெயிலான்

    கதை சொல்லும் திறமை நன்று ( நடந்ததை விவரிப்பதையும் கதை எனச் சொல்லலாமா )

    சிவசு கூறிய மறுமொழி நன்று – காத்திருப்பதின் வலி கொடுமை

    மிக மிக ரசித்தேன்

    நல்வாழ்த்துகள் வெயிலான்
    நட்புடன் சீனா

பரிசல்காரன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி