பணிப்பெண்கள்

திருப்பூரின் சாலையோரங்களில், எங்காவது நீங்கள் சிறிது நேரம் அசையாது நின்றால், உங்கள் கழுத்தில் “செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை” என்ற வாசகங்கள் தாங்கிய அட்டை தொங்க விடப்பட்டிருக்கும்.  மின் கம்பங்களில், வாயிற் கதவுகளில், என எங்கு திரும்பினாலும் இந்த அட்டைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.  பனியன் தயாரிப்பு தொழிற்சாலைகளில், ஆடைகளின் தையல் வேலைகள் வேலைகள் முடிந்தபின், தேவையில்லாத நூல் மற்றும் இதர பிசுறுகளை நறுக்குவது, துணிகளில் எங்காவது கறை அல்லது துளை இருக்கிறதா?  தையல் விடுபட்டிருக்கிறதா, வண்ண மாற்றமிருக்கிறதா என பரிசோதனை செய்து, ஆடையை உதறி மடித்து வைக்கும் வேலையைச் செய்யும் பெண்களை செக்கிங் பெண்கள் என தமிழில்?! அழைப்பார்கள்.

செக்கிங் பணிக்கு வரும் பெண்களைப் பற்றிய கவிஞர். மகுடேசுவரனின் கவிதை.

செக்கிங் பணிக்குப் பெண்கள் தேவை

பஞ்சுக்குப்பை
மண்டிய தலை
அரிக்கிறது

பனியன் கம்பெனி உஷ்ணத்தில்
சன்னமாய்ச் சுரக்கும் வியர்வையில்
ரவிக்கைக் கையிடுக்கு ஊறி
உறுத்துகிறது

சமயத்தில்
கொண்டுவந்த பழஞ்சோறு
ஊசிப்போய் ஏமாற்றுகிறது

விடிய விடிய பணியிருக்கிறது
கண்ணுக்குள் மண்ணறுக்கிறது

துணி உதறி உதறி
கைகளிரண்டும்
கதறுகிறது

அவ்வப்போது
பூவாத்தா மடித்துத்தரும் வெற்றிலையில்
அன்பு தடவியிருக்கிறது

தங்கமணியக்கா
தன் குடும்பக் கதை சொன்னால்
எனக்கும் அழுகை வருகிறது

மேற்பார்வையிடும்
மெர்ச்சண்டைசரின் பார்வையில்
இன்பத்திற்கான யாசிப்பு
எப்பொழுதும் தென்படுகிறது

இடையிடையே நினைவும் வருகிறது
குடிகாரப் புருஷ முகம்
ஸ்கூல் போகும் சுப்பரமணி முகம்

– மகுடேசுவரன்
(மண்ணே மலர்ந்து மணக்கிறது தொகுப்பிலிருந்து…)

Comments on: "பணிப்பெண்கள்" (31)

 1. மேலேயிருக்கும் மகுடேசுவரன் கவிதையில் ஒரு சொற் குற்றமோ (அ) பொருள் குற்றமோ உள்ளது.

  பொதுவாக மெர்சண்டைசர்களுக்கு செக்கிங் இடத்தில் வேலையில்லை. செக்கிங்குயென்று தனியாக மேற்பார்வையாளர்கள் இருப்பார்கள்.இவர்களைத் தாண்டி நாங்கள் (இப்ப புரிஞ்சிருக்குமே…நான் ஏண்டா இதுல மூக்க நுழைக்கிறேனு….) அவர்களை நெருங்வது சுலபமில்லை….

  மெர்சண்டைசர் அப்படிங்கிறதுக்குப் பதிலாக சூப்பர் வைசர் அப்படீன்னு போட்டிருக்கலாம்…

  இருந்தாலும்…பரவாயில்லை சில exception’s எல்லா இடத்திலயையும் உண்டு…

  என்னுடைய பிளாக் அட்ரஸ்ஐ இங்கு குறிப்பிட்டுள்ளேன்..நல்லாயிருந்தா…4பேருக்கு அறிமுகப்படுத்துங்க…பத்தாது நினைச்சீங்கன்னா உங்க ஆலோசனையை சொல்லுங்க…தேறாதுன்னு நினைச்சீங்கன்னா…சத்தமில்லாம இப்படியே வுட்டுருங்க இல்ல டெலிட் பன்னீருங்க…முரளி சொன்ன சிவக்குமார்..நாந்தான்…

  • இது பழைய கவிதை சிவா! கவிதை வந்த காலத்தில் சூபர்வைசர்கள் தான் மெர்ச்சண்டைசர்களாக இருப்பார்கள்.

   உங்கள் வலைத்தளம் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!!

 2. கவிதை உண்மையைத்தான் சொல்கிறது…ம்.

 3. சிறப்பான அறிமுகம். தெளிவான பார்வை? அவர் எழுத்துக்களை கருத்துக்களை விட இது போன்ற விசயங்களை அக்கறையுடன் முன் எடுத்து சொல்லும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

  மகுடேஸ்வரனுக்கும் சேர்த்து.

  நீங்கள் சொன்ன மாதிரி உள்ளே இருப்பவர்களுக்கு இதன் உள்ளே உள்ள விசயங்கள், தாக்கம் தான் புரியும். சொற்குற்றம் பொருட்குற்றம் எல்லாம் புரியாது.

 4. நெஞ்சை கனக்கவைத்த கவிதை.. நல்ல பதிவு.. வெயிலோனுக்கு நன்றிகள்.

 5. உழைப்பை காட்டாம‌ல்
  உட‌ல் கா…..ம்,
  சில‌ ப‌ணியாள‌ர்க‌ளும் உண்டு.
  ஆனால்,பொதுவாய்,வ‌ழ‌க்கில்,
  பெரிய‌ வ‌ண்டிக்கார‌ன் தான்
  த‌வ‌ற‌க‌ ஒட்டிய‌வ‌னாய்.
  உழைப்புச் சுர‌ண்ட‌ல்க‌ளுட‌ன்,
  சுர‌ண்ட‌லே உழைப்பாக‌வும் சில‌ர்.

 6. ஆதிமூலகிருஷ்ணன் said:

  கவிதை அப்படி ஒன்றும் பாதிக்கவில்லை.

 7. வெயிலான் ஆஹா.
  பதிவும் கவிதையும் நெகிழ்வாக இருக்கிறது. மகுடேஸ்வரனுக்கு என்ன கொடுத்தாலும் தகும்.இப்போது கையிலிருக்கும் அன்பும் வாழ்த்தும் அவருக்குச்சேருங்கள்.

 8. அருமையான கவிதைங்ண்ணா…. அவருக்கு என் அன்பான பணீவான வாழ்த்துக்கள் சொல்லிருங்ண்ணா….

 9. கவிதை நல்லா இருக்கு. அது வந்த காலம் தெரிஞ்சா பொருத்திப் பார்க்க சவுகரியமா இருக்கும்.

  பகிர்வுக்கு நன்றிங்க வெயிலான்.

 10. கார்த்திக் said:

  // மேற்பார்வையிடும்
  மெர்ச்சண்டைசரின் பார்வையில்
  இன்பத்திற்கான யாசிப்பு
  எப்பொழுதும் தென்படுகிறது //

  நல்ல அறிமுகம் தல

 11. முரளிகுமார் said:

  செக்கிங் பெண்கள் என தமிழில்?! அழைப்பார்கள்//

  🙂

  கடைசி வரியில்தான் கவிதை நிற்கிறது. எதார்த்தமான வாழ்க்கை, கவிதை.

 12. படித்து முடித்ததும் கண்கள் பனித்தன!!

 13. கவிதையிலேயே கண்ணுக்குள் தெரிகிறார்கள்..அடையாளம் காட்டிய உங்களுக்கு நன்றிங்க.

 14. தல, இதில் பாதி தான் உண்மை, மீதி அந்த பெண்களும் அதில் உடன்படுவார்கள்.. 10 வருசம் குப்பை கொட்டிருக்கோமில்ல, அதான் 🙂

 15. THANKS FOR SHARING.

  REGARDS
  PGS

 16. ஓ நல்ல கவிதையா இருக்கு இத்தனை நாள் பார்க்கலை
  ஆனாலும் மெர்சண்டைசர்கள் இப்போ நேரடியா புரொடக்சனுக்கு வருவதில்லை நீங்கள் சொன்னதுபோல
  இதெல்லாம் ஒரு காலத்தில் .

  ஆனாலும் செக்கிங் பெண்கள் நிலை ரொம்ப வலி மிகுந்த வாழ்க்கைங்க

 17. மகுடேசுவரன் அவர்களை உங்களுக்குத் தெரியுமா?

  எனது அடுத்த புத்த‌கம் தொடர்பாய் அவரிடம் சில விஷயங்களைப் பேச வேண்டி இருக்கிற‌து.. கொஞ்சம் அவரது மின்அஞ்சல் முகவரியோ தொலைபேசி எண்ணோ தந்து உதவ முடியுமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: