நெனப்பு…

வலைப்பக்கம் ஆரம்பித்த போது, நிறைய எழுத வேண்டும் என்று ஒவ்வொரு  பயணங்களிலும், ஓய்வுகளிலும், உறங்கா இரவுகளிலும் நினைப்பதுண்டு.  படிக்க மட்டும் முடிகிறது.

நெனப்பெல்லாம் எப்பயுமே நெசமாகுறதில்லயே!

திருப்பூர் வந்த புதிதில், அலுவல் நிமித்தமாய், முன்பு அந்த அலுவலகத்துக்கு அடிக்கடி போக வேண்டியிருந்தது.  அப்படியொரு தொழில்முறை சந்திப்பின், ஒரு மாலையில் அந்த அலுவலகத்தில், நண்பர். வேலுச்சாமி ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

என்ன புத்தகம்? என ஆவலுடன் கேட்டேன்.  அது கணையாழி!  அதன் பின்னான உரையாடலில், வேல்ச்சாமியும், அவருடைய நண்பரும் நீங்கள் என்ன படிப்பீர்கள்? என என்னிடம் விசாரித்தனர்.  குமுதம், குங்குமம், ஆனந்த விகடன் இந்த மாதிரி தானே? என கேள்விப் பட்டியலிட்டார்கள்.  அதுவும் படிப்பேன்.  அதில்லாமல், சுபமங்களா, புதிய பார்வை இரண்டு மட்டும் தான் வழக்கமாக வாங்கி படிக்கிறேன் எனக் கூறியதும், அவர்களிருவரும், வேற்றுக் கிரக மனிதனை பார்ப்பது போல் அதிசயமாக பார்த்தனர்.  அவர்கள் அறிந்த வரை, அப்போது அவர்களது நட்பு வட்டத்தில் எவரும் இத்தகைய புத்தகங்களைப் படிப்பதில்லை.  ஆதலால் என் பதில் அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியமூட்டியது.

ஏனென்றால், திருப்பூரில் இது போன்று சொல்பவர்களே அரிது.  நாங்கள் உங்களிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவேயில்லை எனச் சொல்லி, ஏன் கணையாழி படிப்பதில்லை? என கேட்டு விட்டு கணையாழியில் வெளியாயிருந்த ஒரு கவிதையைக் காண்பித்தார்.

கவிதைக்குக் கீழே மகுடேசுவரன் என்ற பெயர் இருந்தது.  நண்பர் வேலுச்சாமியிடம் கேட்ட போது ”நம்ம மகுடேஸ் எழுதுனது தாங்க!”னு உறுதிப்படுத்தினார். அப்போதிலிருந்து தான் எனக்கும் அவர் கவிதை எழுதுவார் என்று எனக்கு தெரியும்.  பின் கணையாழி அலுவலக முகவரியும் எழுதிக் கொடுத்து, சந்தாதாரராகும் படி சொன்னார்.

அவருடைய கவிதைகள் ஒரு சில தீவிர இலக்கியப் பத்திரிக்கைகளில் மட்டும் தான் வெளி வந்து கொண்டிருந்தது.

பின்னான சந்திப்புகளில், பிரசுரமாகாத அவருடைய கையெழுத்துப் பிரதியை வாசித்து விட்டுக் கொடுப்பது வழக்கம். அவருடைய கையெழுத்து மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்.  கரிசல் கதைகளையும், எழுத்தாளர்களையும் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் சிலாகித்துப் பேசுவார்.

எனக்கு மிகவும் ஊக்கமளித்து நிறைய எழுத சொல்லுவார் கவிஞர். மகுடேசுவரன்.  கவிதையோ, கதையோ  ஏதாவது எழுதுங்கள், எழுதிவிட்டு என்னிடம் காண்பித்தால் சரி செய்து தருகிறேன் என ஒவ்வொரு சந்திப்பின் போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

காலப்பின்னலில் நானும் பஞ்சும், நூலுமாகிப் போனேன்.

வலைப்பக்கங்கள் வாசிக்க ஆரம்பித்த நாட்களில், அவரையும் வலைத்தளங்களில் எழுதச் சொன்னேன்.  ஆனால், அப்போது அவருக்கு  ஆர்வமில்லை.  இப்போது அவருடைய வலைத்தளத்தில் பதிவுகள் எழுதுகிறார்.

அச்சு அசலான கொங்கு வட்டார வழக்கில், காதலின் அழுத்தத்தை இப்படிப் பதிவு செய்கிறார்.
என்னெய அடீங்கொ
கொல்லுங்கொ
காவலுக்கு ஆள் போடுங்கொ
நீங்கொ பாத்து வெச்சிருக்கிறெ
மாப்புள்ளைக்கெ என்னெக் கெட்டி வெய்யுங்கொ
கட்டிக்கெறென்
அவனுக்கு புள்ளெ பெத்துத் தரச்சொல்லுங்கொ
பெத்துக்கெறென்
ஆனா
என்னிக்காவது ஒரு நா
எங்கெய்யாவது ஒரு வாட்டி
அவரு வந்து ‘வா போயர்லாம்’னு
கூப்புட்டுப்போட்டார்னு வெய்ங்கொ
என்றெ அப்பன் மேல சத்தியமாச் சொல்றென்
போட்டெதும் போட்டபெடி கெடக்கெ
அப்பிடியெ அவருகூடப்போயிர்ருவென்…. ஆமா….
வரும் ஜீலை 25ம் தேதி மாலை கவிஞர். மகுடேசுவரனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு, திருப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  
நிகழ்வுக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

Comments on: "நெனப்பு…" (23)

 1. எனக்கும் ஒரு துண்டப் போட்டு வைங்கப்பா.

 2. வர முயற்சி பண்றேன்.

 3. நல்ல பகிர்வு வெயிலான்!

  மகுடேஸ்வரனின் வலைப்பூ அறிமுகத்திற்கு மிகுந்த நன்றி!

 4. அறிமுகத்துக்கு நன்றி வெயிலான்

  அப்போ, ‘கலந்துரையாடலு’க்கு அப்புறம்தான் அடுத்த பதிவு ?! 🙂

 5. அறிமுகத்துக்கு நன்றி.,

  தி.ப. குழுமம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.

  வாழ்த்துக்களும், அன்பும்.

 6. நல்ல அறிமுகம், நல்ல கவிதை, நல்ல பகிர்தல்,அற்புதமான அங்கீகாரம்.
  கலந்துரையாடல் கட்டாயம் சிறக்கும்.

 7. நல்ல அறிமுகம்…வாழ்த்துக்கள் சகோ.வெயிலான்….நண்பர் க.சீ.சிவக்குமார் கூட தன் வலைதளத்தில் அறிமுகப் படுத்தியுள்ளார்.

  http://sivakannivadi.blogspot.com/2010/07/blog-post_06.html

  கவிதைவரிகள் கணக்கின்றன.

  அன்புடன்
  ஆரூரன்

 8. பகிர்வுக்கு நன்றி வெயிலான். கவிதை அழகு.

 9. நல்ல அறிமுகம்

 10. தி.ப.கு (திருப்பூர் பதிவர் குழுமம்) வை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயலும் எங்கள் தல வாழ்க..வாழ்க..

 11. கவிதை அல்ல, வாழ்க்கை…

 12. காதலின் அழுத்தம் இப்படியெல்லாமா வெளிப்படும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: