பொலிகாளை

நண்பர்களுடனான ஒரு பயணத்தின், இடை நிறுத்தத்தின் போது, ’சிந்து சமவெளி பட சுவரொட்டியைப் பார்த்த நண்பர், இதே இயக்குநரின் ’மிருகம் படம் தனக்குப் பிடித்திருந்தது என்றார். படத்தின் கதாநாயகனுடன் எப்போதும், பொலிகாளையும் இருக்கும்.  பொலிகாளையை பல பசுக்களுடன் இணைக்கு விடுவான்.  இவனும் பெண் பித்தனாய் சித்தரிக்கப்பட்டிருப்பான்.

என் நண்பனொருவன், தன் வீட்டில் முதலில் நாய் வளர்க்க ஆரம்பித்தான். பின் சேவற் சண்டைகளை வேடிக்கை பார்க்கச் சென்று, சண்டைச் சேவல்களை வளர்க்க ஆரம்பித்தான்.

சேவற் சண்டையைப் பற்றிய விரிவான தகவல்கள் – இங்கே

நண்பர் இப்போது புதிதாய் வளர்ப்பது ஒரு குதிரைக் குட்டி. அதென்னவோ, சுழி சரியில்லாத குதிரையாம், அதனால் விலை குறைவாம்.  இந்தக் குதிரையை வளர்த்தால், பெரும் பணக்காரர் கூட ஆண்டியாகி விடுவாராம்.

குதிரைக் குட்டியைப் பார்க்கலாமென, நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது ஒரு பொமரேனியன் வகை நாயும், வேறு சில வகைகளும் இருந்தது. பொமரேனியன் ரக நாய் மட்டும் மிகவும் சுறுசுறுப்புடன், குரைத்துக் கொண்டேயிருந்தது.  நாயை அமைதிப்படுத்தும் பொருட்டு, நாயை நோக்கி கையை நீட்டியவுடன், அமைதியாகி பின்புறம் காட்டிக் கொண்டு திரும்பி நின்றது.

ஒன்றுமே புரியவில்லை.  நாய்களிடம் கை காட்டும் போது நம் கையை நோக்கியே அதன் கவனம் இருக்கும்.  இது வித்தியாசமாயிருக்கிறதே? என நண்பரிடம் கேட்ட போது, இது இணைக்காக வைத்திருக்கும் நாய். கை நீட்டினால், பெண் நாயுடன் இணைக்கு விடப்போகிறார்கள் என நினைத்து, இரு பின்னங்கால்களுக்கு இடையில் கையை நுழைத்து தூக்குவதற்கு வசதியாக நிற்கிறது என்று சொன்னான்.

மாதத்துக்கு பத்துப் பதினைந்து இணைகள் உண்டென்றும், இணையின் மூலம் பிறக்கும் குட்டிகளில் ஒன்றும் கிடைக்கும் என்று சொன்னான்.  உன்னை மாதிரியே உன் நாயும் இருக்கேடா! என நான் கேலியாகக் கூறினாலும், அதிலும் உண்மை இல்லாதில்லை.

இது போன்ற விசயங்களைப் பேசிக் கொண்டு வரும் போது, என்னுடன் பயணித்த நண்பர்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்தை தம் சொந்த ஊராகக் கொண்டவர்கள்.  தம் ஊரில் முன்னர் நடந்து கொண்டிருந்த இருந்த ஒரு விஷயத்தைப் பற்றிச் சொன்னார்கள்.

முன்பெல்லாம், அவர்களுடைய கிராமத்தில் மைனர் கவுண்டர் என்று ஒருவர் இருப்பார். வாரிசு இல்லாத பெருந்தனக்காரர்கள், தமது சொத்துக்களை அனுபவிப்பதற்காவது, ஒரு குழந்தை வேண்டுமென்பதற்காக, மைனர் கவுண்டரை வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பார்கள்.

படத்துக்கு நன்றி – Arunachala Grace

முன்கூட்டி முடிவு செய்த நாளில், இரவு நேரத்தில் குறிப்பிட்ட வீட்டிற்கு வில்லு வண்டியில் வருவார். சிறப்பு அசைவ விருந்து முடிந்ததும், தனியறையில் பால், பழவகைகள், முந்திரி, பிஸ்தா பருப்புகளுடன் முதலிரவு போல அலங்கரித்த படுக்கையில் அந்த வீட்டின் பெண்மணி காத்திருப்பார்.  அப்பெண்மணியுடன் கலவி முடித்து விடியும் முன் சென்று விடுவார்.

கரு உருவாகும் வரை மைனர் கவுண்டர் அந்த வீட்டிற்கு குறிப்பிட்ட இடைவெளியில் வந்து சென்று கொண்டே இருப்பார். எந்த வீட்டிற்கு சென்று வந்தோம் என்பதை வெளியிலும் சொல்ல மாட்டார். பொலிகாளைகளாக மைனர்கள் முன்னர் இருந்தாலும், கருத்தரித்தலுக்கு விந்தணுக் கொடை அளித்திருக்கிறார்கள்.  இப்போது மைனர்களும் இல்லை.  இந்த வழக்கமும் இல்லை.

நன்றி – அதீதம் (இணைய இதழில் வெளியானது).

Comments on: "பொலிகாளை" (22)

 1. அருமை தல…
  முற்றிலும் உண்மை…இன்னும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது…

 2. கேள்விப்பட்டதை எழுதியதால், அதன் நம்பகத்தன்மை பற்றி கொஞ்சம் பயம். இப்போ, கொங்கு மண்ணின் மைந்தரே உண்மை என்று சொல்லி விட்டீர்கள்.

  பின்னர் இது பற்றி விவாதிப்போம். நன்றி சாமி!

 3. /மைனர் கவுண்டர் /
  இந்த விஷயத்தை தொட்டு செல்கின்றது பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’. இதுவும் திருச்செங்கோடு பகுதியில் நடைபெறும் கதை.

 4. ஆதிமூலகிருஷ்ணன் said:

  நல்லா புடிக்கிறாங்கையா கட்டுரை சப்ஜெக்ட்டு.! :-))

 5. உண்மையில் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஆச்சர்யமாகவும் இருக்கிறது.. நல்ல பகிர்வு…

 6. புதிய தகவல்

 7. ஈரோடு கதிர் said:

  ||அதிலும் உண்மை இல்லாதில்லை||

  அடப்பாவிகளா! சத்தமில்லாம நண்பர போட்டுக் கொடுத்தாச்சா!

 8. ஈரோடு கதிர் said:

  ||மேயருக்கு ஏற்கனவே தெரியுமாம் பாலாசி. விபரம் கேட்டுக்கோங்க||

  அண்ணே, நானும் மாதொருபாகன் புத்தகத்துல படிச்சுட்டு பாலாசி மாதிரியே அதிர்ச்சியா நிக்கிறேன்… ஆனா, அது வேறவிதம்!!!

 9. மாதொருபாகன் இன்னும் படிக்கல. படிச்சிட்டு சொல்றேன்.

 10. நண்பரோட முகவரியையும் கொடுத்திருந்தா,.. நாய், பூனை, குதிரை, மாடுன்னு வைச்சிருக்கவங்களுக்கு உபயோகமா இருக்கும்.

  ஆனா அனியாயத்துக்கும் உங்க நண்பர், ஆல் இன் ஆல் அழகுராசாவா இருக்காரு….

 11. கார்த்திக் said:

  ஏற்கனவே வாமுகோமு இதப்பத்தி வேறமாதிரி ”தவளைகள் குதிக்கும் வயிறு” ல சொல்லிருப்பார்.

  இப்போ நீங்க வேறையா?

  நடத்துங்க நடத்துங்க :-))

 12. வெயிலான் உங்க பக்கத்துல நிற்கிற குதிரைக்கு கொடுக்குற எல்லாவாற்றையும் நீங்க சாப்பிட்டு விடுறீங்களா ஹா ஹா குதிரை ரொம்ப மெலிஞ்சு இருக்கு 🙂

  //பொமரேனியன் ரக நாய் மட்டும் மிகவும் சுறுசுறுப்புடன், குரைத்துக் கொண்டேயிருந்தது.

  ஆமாம் அதனோட இயல்பே அப்படித்தான்.. சிக்குசிக்குனு ஓடிட்டே இருக்கும் 🙂

  //அவர்களுடைய கிராமத்தில் மைனர் கவுண்டர் என்று ஒருவர் இருப்பார். //

  மைனர் குஞ்சு 😉

  //முன்கூட்டி முடிவு செய்த நாளில், இரவு நேரத்தில் குறிப்பிட்ட வீட்டிற்கு வில்லு வண்டியில் வருவார். சிறப்பு அசைவ விருந்து முடிந்ததும், தனியறையில் பால், பழவகைகள், முந்திரி, பிஸ்தா பருப்புகளுடன் முதலிரவு போல அலங்கரித்த படுக்கையில் அந்த வீட்டின் பெண்மணி காத்திருப்பார். அப்பெண்மணியுடன் கலவி முடித்து விடியும் முன் சென்று விடுவார். கரு உருவாகும் வரை மைனர் கவுண்டர் அந்த வீட்டிற்கு குறிப்பிட்ட இடைவெளியில் வந்து சென்று கொண்டே இருப்பார். //

  ஆஹா! மைனர் குஞ்சுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய கதை இருக்கா.. கொடுத்து வச்சவங்க..ம்ம்ம்

  படங்கள் அனைத்தும் இயல்பாக நன்றாக உள்ளது.

 13. அது குட்டிக்குதிரை கிரி! அப்போ தான் அந்தியூர் சந்தையிலிருந்து வாங்கி வந்தது. இப்போ நல்லாருக்கு என்னை மாதிரி 🙂

  உங்க ஊர்லயும் மைனர் குஞ்சு இருக்காரா? 😉

 14. பல தகவல் தந்து அசத்தி விட்டீர்கள். ………..

  சாய பட்டறை பத்தி கொஞ்சம் விவாதித்தல், மக்களின் தேவைகளை புரிந்துகொள்ள முடியுமே….

  அன்புடன்,

  முஜிபுர் ரஹிமான்.
  14-03-2011

 15. நல்ல புதிய விபரங்கள் அடங்கிய பதிவு.
  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: