ஈரோடு நண்பர்கள் நடத்திய சங்கமம் இனிதே நடந்து முடிந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அது எங்கள் நண்பர்கள், இன்னும் சொல்லப்போனால், எங்கள் சகோதரர்கள் நடத்திய ஒரு விழா. ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், சேர்தளத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகள்.
சர்ச்சைக்குரிய பதிவுகளில் பின்னூட்டம் கூட போடாமல், ஒதுங்கிச் சென்று தான் பழக்கம். நாட்டாமைத்தனமும் செய்வதில்லை. எவ்வித குழு அரசியலிலும் தலையிடுவதில்லை. ஒரு சிலரின் பதிவுகளையும், பேச்சுகளையும் ஒதுக்கித் தள்ளி வைத்துப் போய் விடலாம் தான். ஆனால், அது மென்மேலும், கண்ணுக்குத் தெரியாத வகையில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் என்பதால் சேர்தளத்தின் சார்பில் இவ்விளக்கப் பதிவு.
எங்களின் (சேர்தளம் நண்பர்கள்) பெரும்பாலான பயணங்கள், விழா, சந்திப்பு ஆகியவை ஈரோடு நண்பர்கள் இணைந்தே நிகழ்ந்திருக்கிறது. சென்ற ஆண்டு சங்கமத்தில் கூட சேர்தளத்துக்கென, நிகழ்ச்சியில் நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்கள். எப்போதும், ஒருவருக்கொருவர் அன்புடனும், அக்கறையுடனும், ஆலோசனைப் பரிமாற்றங்களுடன் தான் பயணிக்கிறோம் என்ற விசயம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திருப்பூர் வலைப்பதிவர்கள் தங்களுக்குள் குழுமம் அமைத்து, தலைவர், செயலாளர், பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களைத் தேர்ந்தெடுத்து சேர்தளம் என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஒரு அமைப்பு. சேர்தளத்தின் எந்தவொரு விசயமும் எங்கள் குழும மின்னஞ்சல் மூலம், விவாதிக்கப்பட்டுத் தான் முடிவெடுக்கப்படுகிறது. தற்சமயம் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தும் எண்ணம் இல்லை. இருந்தால், நிச்சயம் அனைவருக்கும் அழைப்பு விடப்படும்.
சேர்தளம் நண்பர்கள், எங்கள் இலச்சினை அச்சிட்ட பின்னலாடைச் சட்டைகள் அணிந்து வந்தது குறித்து ஒரு விமர்சனம் வந்தது. உங்கள் குடும்ப விழாவில் தான் நீங்கள் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிவீர்கள். அது போல எங்கள் சகோதரர்கள் நடத்திய விழாவில், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு, இப்பிரத்தியேக பின்னலாடைச் சட்டைகள் அணிந்து வந்தோம்.
விழாவை வெளியிலிருந்து பார்த்தவர்களுக்கு, கலந்து கொண்டவர்களுக்கு இத்தகையதொரு விழா சாதாரணமாகத் தெரியக்கூடும். விரல் நீட்டி விமர்சிப்பதும் எளிது. ஒரு விழா நடத்துவதற்கு செலவு தவிர்த்து, தகுந்த திட்டமிடுதலும், செயற்படுத்தலும், ஒருங்கிணைத்தலும், எத்தனை பேரின் உடல் உழைப்பும் வேண்டும் என்பதை என் சிறு அனுபவத்தில் உணர்ந்தேயிருக்கிறேன்.
என்னளவில் மட்டுமல்ல, விழாவில் கலந்து கொண்ட சேர்தளம் நண்பர்களும் மிகச்சரியாக, இன்னும் சொல்லப் போனால், நேர்த்தியாக நடத்தப்பட்ட விழா என்ற ஒருமித்த கருத்தையே கூறினார்கள். மனமுவந்து பாராட்டினார்கள்.
விழாவில், நான் உட்பட மேடையில் அடையாளப்படுத்தி பாராட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும், தகுந்த நேரம் கொடுத்து, ஒப்புதல் வாங்கியே பெயர் சேர்க்கப்பட்டது என்பதை நான் அறிவேன். இப்படியிருக்க, ஒரு சிலர் பரபரப்புக்காக, விளம்பரத்துக்காக விமர்சனம் என்ற பெயரில், கற்பனையாக எழுதுவது மாதிரியல்ல. யார் யாரைப் பாராட்டுகிறீர்கள் என்ற பட்டியல் கேட்பதும் சரியல்ல.
விழா நடத்தியதில் குறைகள் இருந்தால், தனிப்பட்ட முறையில் நாசூக்காக சொன்னால் தவறில்லை. அதை விடுத்து, சப்பையான குறைகளையும், கட்டுக் கதைகளையும் ஒரு சிலர், பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இது பதிவர்கள் சார்பில், பதிவர்கள் தவிர்த்து முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்ட பெரிய நிகழ்வு. பதிவர்கள் குடும்பத்துடன், மகிழ்ச்சியாய் பங்கு பெற்றது இன்னும் சிறப்பு. இவ்விழா பதிவர்களின் மதிப்பை உயர்த்திக் காட்டியதொரு முக்கிய நிகழ்வு. தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பி, விழா நடத்திய சகோதரர்களை மனவருத்தத்தில் ஆழ்த்த வேண்டாம்.
Comments on: "சொல்லுதல் யார்க்கும்…." (21)
நல்ல பதிவு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி ஐயா! உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளும்….
இது பதிவர்கள் சார்பில், பதிவர்கள் தவிர்த்து முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்ட பெரிய நிகழ்வு. பதிவர்கள் குடும்பத்துடன், மகிழ்ச்சியாய் பங்கு பெற்றது இன்னும் சிறப்பு. இவ்விழா பதிவர்களின் மதிப்பை உயர்த்திக் காட்டியதொரு முக்கிய நிகழ்வு. தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பி, விழா நடத்திய சகோதரர்களை மனவருத்தத்தில் ஆழ்த்த வேண்டாம்.//
வழி மொழிகின்றேன்.
புரிதலுக்கு நன்றி ஜாக்கி!
🙂 அருமை வெயிலான்.
நன்றி பாலாண்ணே!
ஈரோடு சங்கமம் என்று அறியாதவர்களிடத்தில் கொண்டு செல்லும் “அவர்களின்” தொண்டை பாராட்டத்தானே வேண்டும்? ஏன் கோச்சுக்கப்போறோம்?
🙂 நல்ல முறையில் கொண்டு சென்றால் பரவாயில்லை. இது எதிர்மறையாகச் செல்கிறது இளா.
சொல்லுதல் யார்க்கும் எளியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
இணைய நட்புக்களில் எதிர்பாராமல் ஒரே அலைவரிசையில் அமைவதென்பது அபூர்வம் மட்டுமில்லாமல் ஒரு கொடுப்பினை (அல்லது வேறு வார்த்தை ) என்றும் கொள்ளலாம்.
தேடித்தேடி நிதம் கொண்டாடிடினும் அமைவதென்பது 1000ற்றில் ஒரு பங்கு கூட கிடையாது.
கைகளை அகல விரித்து வைக்கும் போதும் கிடைப்பதென்பது ஒரு பருக்கைக்கும் குறைவாகவே இருந்து விடுகிறது.
எனக்கான புரிதலும், உங்களுக்கான ஒத்திசைவும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
போகட்டும். சொல்லவந்ததை எளிமையாக உங்களால் சொல்ல முடிந்ததை போல
என்னால் சொல்ல முடியவில்லையல்லவா…
மனிதர்கள் எப்போதும் நாம் விரும்பியதை போலிருப்பதில்லை…
அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்…
நாம் நாமாகவே இருப்போம்…
அப்போதுதான் நமக்கும் அவர்களுக்குமான வித்தியாசங்கள் புரிபடுமென்பது எனது எண்ணம்……தோழர்.
எல்லா நண்பர்களும் நல்லவர்கள் தான் கும்க்கி. தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதாய் நினைத்து கொள்கிறார்கள். நாம் அவர்களுக்காக பரிதாபப்படுவோம். புரியவைப்போம்.
நல்ல மொழியாளுமையைக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வப்போது பதிவும் எழுதுங்கள் கும்க்கி.
நிகழ்வு சிறப்பாக இருந்தது. சீக்கிரம் முடிந்துவிட்டதாக நான் நினைத்தேன். இந்த நிகழ்வை எதிர்மறை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. எல்லோரும் நம் நண்பர்களே…
நன்றி சிவாண்ணே!
உங்கள் வாழ்த்துக்களிலும் பகிர்விலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே ! ஒரே ஒரு வருத்தம், கூடினோம்; கை குலுக்கினோம்; விருந்துண்டோம்; கலைந்தோம் என்றில்லாமல் தமிழ்நாடும், மக்களும் இன்று சந்திக்கும் எந்த பிரச்சினை குறித்தும் பேசாமல் வந்து விட்டோம் என்பது தான். பதிவர்கள், எழுத்தாளர்கள் சந்திப்பு என்றாலே பொதுப்பிரச்சினைகள் குறித்து சிறிதேனும் அக்கறை கொள்ளல் நன்று தானே ! நட்புடன், சீனி. மோகன்.
இந்த நிகழ்வு முழுக்க, முழுக்க இணைய நண்பர்களின் சந்திப்பு. இது போன்ற பொதுப்பிரச்சனைகளை அதற்கென ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் பேசலாமே ஐயா?
நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன். பதிலளித்தமைக்கு நன்றி.
நண்பரே இந்த பதிவின் தலைப்பே போதும்.அருமை.
நான் சொல்ல நினைத்ததை அப்பிடியே ஜெய்ஜாக்கி சொல்லிவிட்டார்.குடும்பத்துடன் வந்தவர்களில் நானும் ஒருவன்.
அதும்போக எல்லோரையுமே குடும்ப அங்கத்தினர்களாகவே உணர்கிறேன்.
//விழா நடத்தியதில் குறைகள் இருந்தால், தனிப்பட்ட முறையில் நாசூக்காக சொன்னால் தவறில்லை//
அப்பிடியே வழிமொழிகிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி ரவி! உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ஒரு சரியான விஷயம் எதிர்மறையான திசையில் பயணிக்கும்போது மெளனித்திருப்பது அதை ஆதரிப்பதற்கும் சமம். மெளனம் கலைத்த மெளனகுருவை வழிமொழிகிறேன். 🙂
சரியாகச் சொன்னீர்கள் முரளி! நன்றி!
மெளனகுருவா? கொண்டு போய் சேர்த்திரலாம்னு முடிவு பண்ணீட்டீங்களா? 🙂
ஒரு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது என்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை நாம் மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறோம். சின்ன சின்ன சங்கடங்கள் இந்த நிகழ்ச்சிக்கான திருஷ்டிபொட்டே தவிர வேறொன்றுமில்லை.
ஈரோடு பதிவர்கள் சங்கமத்திற்கு நானும் வந்திருந்தேன். பெரும்பாலான பதிவர்களை காண முடிந்தது. அன்றுதான் உங்களையும் பார்த்தேன். நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஈரோடு பதிவர்களுக்கு வாழ்த்துகள். பகிர்விற்கு நன்றி.