சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு வாரிசு யார்? சுவிஸ் வங்கியில் இருக்கும் ஜமீனின் பணம், நகைகள் எவ்வளவு? என்று செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் அவரைக் குறித்த நாட்டுப்புறப் பாடல் ஒன்று.
சிவகிரி ஜமீன்தார் இறந்தபோது தோன்றிய பாடல்கள் இரண்டு கீழே தரப்படுகின்றன. அவற்றுள் முதல் பாடல் சிவகிரி ஜமீன்தார் சதியால் கொல்லப்பட்டார் என்று மறைமுகமாகக் கூறுகிறது. அவர் இறந்த இடம் குற்றாலம். சிறிய ஜமீன்தாரை சின்னசாமி என்று அழைப்பதுண்டு. அவர் வடக்கேயிருந்து வருகிறார் என்று அவரைப் பார்க்க மக்கள் கூடியிருக்கிறார்களாம்.
இரண்டாவது பாடலில் ஜமீன்தார் கலியாண மகால் கட்ட உத்தரவிட்டு, அது கட்டி முடிந்து விட்டதாகவும் ஆனால், அம்மகாலில் அவர் உட்காரவில்லையென்றும் அதற்கு முன்னரே கைலாச குழிக்குப் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சிவகிரி ஜமீன்தார்-1
பாக்குப் பொடி நறுக்கி
பல்விளக்கித் தீத்தம் பண்ணி
காப்பித் தண்ணி சாப்பிட்டிட்டு
கச்சேரிய செய்த தெப்ப?
கச்சேரி வாசலிலே
லட்சம் ஜனம் கூடியிருக்க
கருத்த துரை இல்லாம
களையும் பொருந்தலையே
கிறிச்சு மிதியடியாம்
கீ கண்ணுப் பாருவையாம்
வடகா பிரகரைக்கு
வாரதெப்போ நம்ம துரை
சோணப் பாறை மொந்தலிலே
சூரியனும் உதிக்கு முன்னே
மண்டி போட்டுச் சுட்டாராம்
மன்னம் பொன்னு சின்னசாமி
காக்கா இறகு போல
கல்லணைத் தண்ணி போல
மறிச்சாராம் மறிபடாது
மகராஜன் ஆத்துத் தண்ணி
ஆடழுக,மாடழுக
அஞ்சாறு லட்சம் ஜனமழுக
சிவகிரி ஜனங்களெல்லாம்
தெருத் தெருவா நின்னழுக
சிவகிரி ஜமீன்தார்-2
பிறந்தது சிவகிரி
வளர்ந்தது ஆத்துப்பட்டி
மாண்டது குத்தாலம்
மகாராஜா நம்ம துரை
மதுரையிலே குதிரை வாங்கி
மல்லியப்பூ சேடங் கட்டி
அடிக்காக நம்ம துரை
ஆத்து மணல் தூள் பறக்க
வடக்க இருந்தல்லவோ
வாராக சின்னசாமி
பதினெட்டு பட்டி ஜனம்
பாக்க வந்து காத்திருக்கு
பட்டணங்கள் போகலாமா
பந்தயங்கள் கூறலாமா
இந்தக் கலியுகத்தில்
இஷ்டர்களை நம்பலாமா
சிவகிரி மகாராசா
செல்வத் துரை பாண்டியன்
நீசநிதியாலே மோசம் வரலாச்சே
மானழுக, மயிலழுக
மாடப்புறா கூட அழுக
சிவகிரி ஜனங்களெல்லாம்
தெருத் தெருவா நின்னழுக
கல்யாண மால்
கட்டச் சொல்லி உத்தரவு
ஒரு நாள் ஒரு பொழுது
மகாராசா உக்காந்து பாக்கலியே
காத்திய மடத்தோரம்
கைலாசகுழி வெட்டிருக்கு
வெட்டி நாளாகுது
வெரசா வரும் மோட்டார்காரே.
வட்டார வழக்கு:
காத்திய மடம்-கார்த்திகை நாள் விழா நடைபெறும் மடம் ;
மொந்தல்-மூலை ; அழுக-அழ
சேகரித்தவர் :
S.M.கார்க்கி
இடம் : சிவகாசி
குறிப்பு : காலாவதியான வலைத்தளத்திலிருந்து இப்பொக்கிஷத்தை மீட்டெடுத்து சேமிப்புக்காக இங்கே பதிவிட்டிருக்கிறேன். யாருக்கேனும் ஆட்சேபணை இருந்து, பின்னூட்டத்தில் சொன்னால் எடுத்து விடுகிறேன்.
Comments on: "சிவகிரி ஜமீன்தார்" (14)
நண்பா, இது முன்னர் இட்டிருந்தாலும் இப்போது தான் முதலில் வாசிக்கக் கிட்டியது பாடல்களை ரசித்தேன் சிவகிரி ஜமீன் பற்றி மேலும் அறிய ஆவல்
சேகரித்துத் தருகிறேன் நண்பரே!
ரசித்தேன்…
பகிர்வுக்கு நன்றி… வாழ்த்துக்கள்… !
நன்றி தனபாலன்.
அருமை.
நன்றிகள் பல!
கண்ணு முழியழகர்
கருப்புக் கோட்டித் தானழகர்
பூடுசுக் காலழகர்-இந்தப்
பூலோகம் எல்லாம் கண்டதில்லை
சிவகிரி மகாராஜா – நம்ம
செல்லத் துரை பாண்டியர்
— இது சிவகிரி ஜமீந்தரான மைனர் வரகுணபாண்டிய வன்னியனார் அவர்கள் தொடர்பான் ஒப்பாரிப் பாடல் ஒன்றின் பகுதி.
சிவகிரி ஜமீந்தார் திரு.மைனர் இராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார் அவர்கள் திருமனம் ஆகும் முன்பே இறந்துவிட்டதால் வாரிசில்லை.
இவர் மீது ஜமீன் மக்கள் வைத்திருந்த ஈடுபாடு நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒப்பாரிப் பாடல்களால் விளங்கும்.
இந்த ஜமீந்தாரின் தாயார் திருமதி.ஞானமணி நாச்சியார்.
இந்த ஜமீந்தாரின் நினைவு நாள் அவர் உறவினர்களால் சிவகிரியில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
மைனர் ராமலிங்க பாண்டியரின் உறவினர்கள்- 1.செந்தட்டிகாளை பாண்டிய் சின்னதம்பியார் 2.குருசாமி பாண்டியன் 3.தங்கச்சாமி 4.பெரிய முத்துசாமி பாண்டியன் 5.சங்கிலி வீரப்ப பாண்டியன் 6.முத்துசாமி பாண்டியன்.
இந்த ஆறு பேரின் வாரிசுகள்தான் இந் நினைவுநாள் நிகழ்சிகளை நடத்துகின்றனர்.
//பிறந்தது சிவகிரி
வளர்ந்தது ஆத்துப்பட்டி//
இந்த வரிகளை கவனிக்கவும்.இவர் பிறந்தது சிவகிரி.வளர்ந்தது ஆத்துப்பட்டி என்றுள்ளது.
ஆத்துப்பட்டி ஜமீன் அந்தஸ்துள்ள பகுதியாகும்.சிவகிரி ஜமீந்தார்களின் ரத்த சொந்தங்களே ஆத்துப்பட்டியை ஆண்டவர்கள்.
ஆனால் இந்த ஆத்துப்படி ஜமீன் வாரிசுகள் நிலை இன்று என்ன தெரியுமா?இன்று கூலிகளாகவும், கை வண்டி இழுப்பவர்களாகவும் வாழ்ந்துவருகின்றனர்.
Dear Veyilan:
Best wishes for your good effort like this.
Basicly i am from Kottayam, Kerala.
Now i am working here from 1989.
I was born in Sivagiri, My town Zamindar’s praise already heared orally from somebody.
Now, i read the same from Mr.S.M.Karki’s word from your webnet.
Thank you very much for your good effort.
S.Shivakumar
Motar car means Ambulance
sivagiri zamindars emblem enna.thanks for your uptade.
i need sivagiri zamin emblem and minor mahaaraja photo
sivagiri zamindar legal heir is mr/kuttyraja only