என்னைப் பற்றி….

 

ஊரும் வெயிலும் என்ற பதிவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்………

” நான் பிறந்த விருதுநகர் ஊற்றைப் போல வெயில் சுரந்து கொண்டிருக்கக் கூடிய  சிறுநகரம். நான் கோடையில் பிறந்தவன். கோடை எங்கள் தெருக்களில் வெக்கையை வாறி இறைக்கக் கூடியது. வீடுகளும் தெருக்களும் வெயிலில் நனைந்து உக்கிரமேறியிருக்கும். வெயில் எங்கள் உடலில், பேச்சில், உணவில் நிரம்பியிருக்கிறது. ஊரின் தெய்வம் கூட வெயில் உகந்த அம்மன் தான். தெய்வமும் வெயில் குடித்து சிவந்த கண்கள் கொண்டது தான்.”

நன்றி – எஸ்.ரா.

தொடர்புக்கு – கைப்பேசி எண் 94422 35602

47 thoughts on “என்னைப் பற்றி….

  1. விருதுநகரைத் தான் வெயிலூர் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
    மேலும் வெயிலுக்கென்றே ‘வெயில் உகந்த அம்மன்’ என்ற கோவிலும்,
    அந்த கோவிலின் பெயராலேயே, ஊரின் பெயரும் ‘வெயிலு உகந்தாப்பட்டினம்’
    என்று இருந்ததாக செவிவழிச்செய்தி.
    30-40 வருடங்களுக்கு முன் ‘விருதுபட்டி’ இப்போது விருதுநகர்.

  2. விருதுநகருக்கு வெயிலூர்ன்னு பேர் இருக்கறது இப்பதான் தெரியும். வெயில் உகந்த அம்மன் கோயில் இருக்குன்னு தெரியும். ஆனா அது ஊர் பேருக்கும் இருக்கறது தெரியாது.

    விருதுநகரை வெயிலூர்ன்னு சொன்னீங்கன்னா சிவகாசிக்காரங்களும் இராமநாதபுரத்துக்காரங்களும் சண்டைக்கு வரப்போறாங்க!!

  3. மதுரையை கோவில் நகர் என்று சொல்வார்களே, அது போல விருதுநகரை வெயிலூர்னு செல்லமா…….

    சிவகாசிக்காரங்களும், இராமநாதபுரத்துக்காரங்களும் பழைய இராமநாதபுரம் மாவட்டத்துக்காரங்க தானே! அதனால சண்டைக்கு வரமாட்டாங்க முனியாண்டி.

  4. அதனாலதான் உங்க ஊர்க்காரரான இயக்குனர் வசந்தபாலன் ‘வெயில்’ என்று படத்துக்குத் தலைப்பு வைத்தார். ‘வெயில்’ என்றால் விருதுநகர்!
    ஆடுமாடு

  5. ஐயா நான் சினிமாக்காரன் இல்ல. சினிமா கிறுக்கு ஜாஸ்தி. அப்புறம் என் பெயர் மட்டும் ஏன் உங்க பின்னூட்டத்துல வரமாட்டேங்குது.
    ஆடுமாடு

  6. ஓகோ! அப்படியா சமாச்சாரம்!

    புண்ணாக்கு வியாபாரியா?

    நான் கூட ‘புண்ணாக்கு வியாபாரி’ன்னு சும்மா கேலிக்கு தான் சொல்றீங்கன்னு நெனச்சேன்.

    உங்க பெயர் ஏன் பின்னூட்டத்தில வரமாட்டேங்குதுனு எனக்கும் தெரியல. யார்ட்டயாவது கேட்டு சொல்றேன்.

  7. வெயிலானுக்கு வாழ்த்துக்கள். முடிந்தால் உங்கள் வலைப்பதிவின் மூலம் ஒரு சிறு புரட்சியையும் ஏற்படுத்திப் பாருங்களேன். மிகவும் எளிதானதுதான்.

  8. Hai veyilan.

    i am jayapriya living in tirupur. recently i read ur blog, i am realy surprised, it was wonderful. ur language modulation, ur thoughts and ur way of writting everything is wonderful, i am new to blogging, i learn a lot from ur blogs, i also tried to write blog in tamil. i will follow ur blog regularly,

    thank u,

    jayapriya.B

  9. நன்றி வெயிலான்.

    வந்தாரை வாழ வைக்கும் எங்கள் திருப்பூர். விருதுநகருக்கும் திருப்பூர் வெயிலுக்கும் ஒண்ணும் பெரிய வித்தியாசம் இருக்காது. உங்கள் பயண கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு, எத்தனை வருடமாக இங்கே இருக்கிறீர்கள்? ஊர் ஒத்துப்போகிறதா?

    viji

    1. நம்ம திருப்பூர்னு சொல்லுங்க.
      வெயில்…..ம்……அது விருதுநகர்ல தான் அதிகம்.
      திருப்பூர் வந்து பத்து வருசத்துக்கு மேல ஆச்சு. இனி ஒத்துக்கிட்டாலும், இல்லைன்னாலும் இங்க தான்.

      வருகைக்கு நன்றி!

  10. Unga blog enakku romba puduchirukku, nanum virudhunagaril pirandhavandhan thaan anal valandhathu ellam trichy la.. onga way of writing romba puduchirukku

    valthukkal

    Tamil lil eludhathkku mannikavum, Tamil naan muraya payilavillai.

    Kamalraj

  11. ஆயிரம் முறை திருநெல்வெலி-திண்டுக்கல் போகும் போதும், திரும்பும் போதும் விருதுநகர் க்ராஸ் செய்து இருப்பேன்.இருமுறை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி ட்ரெயின் மாற்றி உள்ளேன்.ஊருக்குள் வந்ததே இல்லை.
    ஒரு ஸ்பெஷல் மஞ்சள் வெயில் அடிக்கும் இல்லையா.

  12. முதல் முறை இங்கு வருகிறேன். தங்கள் பின்னூட்டங்கள் நிறைய தளங்களில் வாசித்திருக்கிறேன். தளம் நல்லாயிருக்கு. உங்க திருப்பூர் பதிவர்கள் தளமும் சூப்பர்!

    நாடோடி இலக்கியன் அண்ணன் உங்களைப்பற்றியும், அவருக்கு எனது பக்கத்தை அறிமுகம் செய்ததாகவும் சொன்னார். அன்புக்கு நன்றி!

    1. மிக்க நன்றி வெங்கிராஜா!

      திருப்பூர் பதிவர்கள் தளம் நண்பர்களின் கூட்டு முயற்சியே.

      நாடோடி உங்களைப்பற்றியும் சொன்னார். உங்கள் பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன்.

  13. அண்ணாச்சி,

    திரு ராமகிருஷ்ணன் அவர்களை பற்றி பார்க்கும் போது நம்ம ஊர் காரங்க கூட பெரிய ஆளா இருக்காங்கன்னு ஆச்சர்யமா இருக்கு .

  14. அண்ணே,

    நம்மளயும் கொஞ்சம் சேத்துக்குங்க. தமிழ்ல வேகமா எழுதக்கூடிய மென்பொருள் எதுன்னு சொல்லுங்க.

  15. வெயிலோன்,
    த‌ங்க‌ள் ம‌ட‌லும் அத‌ன் பின் முக‌ப்பும் க‌ண்டேன்.
    அந்த‌ தேன்சிட்டு அல‌கின், அழ‌கில் கொஞ்ச‌ நேர‌ம் என்னை ம‌ற‌ந்தேன்.
    பின், `குறிப்பு` அறிந்து குறித்துக் கொண்டேன் என் குறிப்பேட்டில்.
    அருமையான‌ அறிமுக‌ம், தின‌மும் பார்க்க‌த்தூண்டும் தூண்டில் அது.
    ஏற்றும‌தியாள‌ர்க‌ளை, சில‌ ஏய்க்கும் ம‌தியாள‌ர்க‌ளையும் பார்க்க‌
    அவ்வ‌ப்போது திருப்பூர் வ‌ருவேன். உங்க‌ள் வேலை (ந‌ல்)நேர‌ம் அனும‌தித்தால்
    பார்க்க‌ முடிகிறதா, என‌ பார்ப்போம்.

    ப‌ங்குனி திருவிழா கும்மாள‌ம் (நிறை) அடைந்திருக்கும். குள‌ம் நிறைந்திருக்கிற‌தா?
    கேள்வியுட‌ன் முடிக்கிறேன், மேலும் தொட‌ர….
    வண‌க்க‌த்துட‌ன் ‍ வாச‌ன்.

  16. திருப்பூர்………………

    சிறு பிள்ளை கூட பணம் சம்பாதித்து ’கொ(ள்ளு)ல்லும்’ தன்னைத்தானே…….

    மாநிலத்திலேயே அதிகமாக புகையிலைப் பொருட்கள்,மது வகைகள் விற்பனையாகும் (சாட்டர் டே வாட்ட்ர் டே……..)

    சுத்தம் என்றால் என்னவென்று கேட்கும் …

    எப்பொழுதும் எதிர்படும் விதிமுறை மீறும் வாகன ஓட்டிகள்..

    பணமே பிரதானமாகிவிட்ட இயந்திர வாழ்க்கை சூழ்நிலை…..

    இது தான் நான் இதுவரை நினைத்திருந்த திருப்பூர்…….

    இப்படிப்பட்ட சூழலில் எப்படி இப்படி ஒரு தளம்…

    ”சேற்றில் முளைத்த செந்தாமரையாய்” என்னை

    ஆச்சர்யப்படுத்திய தங்கள் சேர்-தளத்திற்கும்….

    எண்ணங்களின்

    வளத்திற்கும் வாழ்த்துகள் பல…….

    என்றும் புன்னகையுடன்…

    கே.ஆர்.எஸ்.ஜீவன்.

  17. வெயிலான்,
    த‌ங்க‌ள் ம‌ட‌லும் அத‌ன் பின் முக‌ப்பும் க‌ண்டேன்.
    அந்த‌ தேன்சிட்டு அல‌கின், அழ‌கில் கொஞ்ச‌ நேர‌ம் என்னை ம‌ற‌ந்தேன்.
    பின், `குறிப்பு` அறிந்து குறித்துக் கொண்டேன் என் குறிப்பேட்டில்.
    அருமையான‌ அறிமுக‌ம், தின‌மும் பார்க்க‌த்தூண்டும் தூண்டில் அது.
    ஏற்றும‌தியாள‌ர்க‌ளை, சில‌ ஏய்க்கும் ம‌தியாள‌ர்க‌ளையும் பார்க்க‌
    அவ்வ‌ப்போது திருப்பூர் வ‌ருவேன். உங்க‌ள் வேலை (ந‌ல்)நேர‌ம் அனும‌தித்தால்
    பார்க்க‌ முடிகிறதா, என‌ பார்ப்போம்.

    +1

  18. ஆத்தாடி…!!! அம்புட்டு பேரும் நம்ம ஊர்க்காரங்ஙதானா?? லாரி பின்னாடி நிக்காதா? இது முன்னாடியே தெரியாம போச்சே…… அவ்வ்வ்வ்……

பின்னூட்டமொன்றை இடுக