பொன் மாலை

திருப்பூரிலிருந்து நான், சாமிநாதன், பரிசல்காரன், பேரரசன், சொல்லரசன், முரளி, சிவா, ராமன், வெங்கடேஷ் மற்றும் மதுசூதனன் ஆகியோர் நிகழ்வில் பங்கு கொள்ளச் சென்றோம்.  சாமிநாதனின் ஆலோசனைப்படி மூன்று கார்க் கண்ணாடிகளின் முன்னும் பின்னும் திருப்பூர் வலைப்பதிவர் பேரவை என்ற சீட்டு ஒட்டப்பட்டு மூன்று மணியளவில் திருப்பூரிலிருந்து கிளம்பினோம்.

அரங்க வாசலிலேயே நண்பர்கள் நந்து, கதிர், கார்த்தி, ஆரூரன் உள்ளிட்ட நண்பர்கள் தேநீர் கொடுத்து வரவேற்றனர். ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயர்கள் எழுதி சட்டையில் மாட்டிக் கொள்ளும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.  அனைவரின் தனி அறிமுகத்துக்குப் பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்வுகள் பற்றிய காணொளி விரைவில் தமிழ் மணத்தில் இணைக்கப்படும் என கதிர் தெரிவித்தார்.

படங்களுக்கு நன்றி முரளி.

ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் என்ற பெயரில் இனி ஈரோடு பதிவர்கள் செயல்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.

பதிவுகள், பதிவர்களின் சந்தேகம் தீர்க்கும் கலந்துரையாடலுக்கு பெருந்தலைகளுடன் என்னையும் சேர்த்திருந்தார்கள்.

சிறந்த ஏற்பாடுகளுடனான, மிக அருமையான சந்திப்பு, அருணின் அட்டகாசத்துடன் நிகழ்ச்சி ஏழு மணிக்கு நிறைவுற்றது.

சுவையான இரவுணவுக்குப் பின் சாமிநாதன் காரில் இளையராசாவின் பாடலோடு கிளம்ப யத்தனிக்கும் போது, சென்னை நண்பர்களும் காருக்கருகில் வந்தனர்.  பின்னர், இருபது நிமிடங்களை இளையராசாவின் இசை வெள்ளத்தில் நண்பர்களனைவரும் சேர்ந்திசை பாடி, ஆடிக் கழித்தோம்.

நிகழ்வுகளைப் பற்றிய பேச்சுக்களோடு கார் திருப்பூர் வந்தடைந்தது.

ஞாயிறு மாலைப் பொழுதுகளை, திருப்பூரிலிருந்தால் எப்பவுமே போராடி நகர்த்த வேண்டியிருக்கும்.  சென்ற ஞாயிறுப் பொழுது ஈரோடு நண்பர்களின் அன்பிலும், விருந்தோம்பலிலும் மற்ற நண்பர்களின் சந்திப்பிலும் பொன் மாலைப் பொழுதாகக் கழிந்தது.

நன்றி நண்பர்களே!

43 thoughts on “பொன் மாலை

  1. பொன்மாலைப் பொழுதிற்கு உங்கள் அனைவரின் வருகை மேலும் வர்ணம் கூட்டியது ….

    திருப்பூர் வலைப்பதிவர் பேரவை பதிவர்களின் வருகைக்கு நன்றிகள் வெயிலான்…

  2. தல

    நீங்க சாப்பிடாம கூட எங்களை எல்லாம் ஒண்ணா சேர்த்து ஈரோடு அழைத்து சென்று கலந்து கொள்ள துணையா இருந்தது பாரட்டுதலுக்கு உரியது..

  3. வெயிலான் கலக்கி இருக்கீங்க போல! பெரிய மாநாடு! (கொஞ்சம் ஓவரா இருக்கோ) மாதிரி கலக்கிட்டீங்க!

    நான் அழைத்தால் தான் எல்லோரும் வர மாட்டேங்குறீங்க! இருக்கட்டும்

  4. //ஈரோடு கதிர்
    பொன்மாலைப் பொழுதிற்கு உங்கள் அனைவரின் வருகை மேலும் வர்ணம் கூட்டியது ….
    திருப்பூர் வலைப்பதிவர் பேரவை பதிவர்களின் வருகைக்கு நன்றிகள் //

    அதே…அதே….

  5. தலைவரே, இது போன்ற ஒரு நிகழ்வு திருப்பூரில் நடந்தால் இதைவிட இன்னும் அருமையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. (அதற்காக ஈரோட்டை குறைத்து மதிப்பிடவில்லை). தலைவர் என்ற முறையில் விரைவில் களத்தில் இறங்குவீர்கள் என்று நம்புகின்றேன்.

  6. உங்க ஸ்டைலில் படிக்க ரசனையாவே இருக்கு ஆப்பிசர்..

    அதும் எந்த பதிவிலும் வெளிவராத போட்டோஸ்….ரசனை.

    (ஆப்பிசர் ஏன்னு கேக்கறீங்களா..? சீனியரே சொல்லிட்டாரு..நாமும் பாலோ பண்ணிக்க வேண்டியது தான்)

  7. தலைவர் போயி ஆபீஸர் வந்தாச்சா?

    தொழிலதிபர், வியாபாரகாந்தம், காங்கிரசின் விடிவெள்ளி, கோவையின் அஞ்சா நெஞ்சன், புலவன் (இளக்கியவியாதி) சஞ்சை சொன்னார்னா சரியாதாங்க இருக்கும்.

    பிரசி தலமையில செக்,டிரெஸ் மற்றும் நட்புக்கள் புடை சூழ கலந்துகிட்டது ரொம்ப சந்தோசம் தல. சாரிங்க ஆப்பீசர் :-))

    1. // தொழிலதிபர், வியாபாரகாந்தம், காங்கிரசின் விடிவெள்ளி, கோவையின் அஞ்சா நெஞ்சன், புலவன் (இளக்கியவியாதி) சஞ்சை //

      எல்லா பட்டத்தையும் போனாப் போவுதுனு ஒத்துக்கலாம். ஆனா, கடைசியா புலவன்னு சொல்லியிருக்கிங்களே தல……. அதமட்டும்………ம்ஹும்.

  8. அன்பின் வெயிலான்,

    படங்கள் – முரளி – பகிர்ந்தமை நன்று.

    வாகனத்துல் ஒட்டப்பட்ட சீட்டு நன்றாகவே இருக்கிறது – அதுவும் முன்னும் பின்னுமாக – கலக்கறீங்க வெயிலான்!

    அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

  9. ஆகா! திருப்பூரில் இருந்து இவ்ளோ பதிவர்களா? (எவண்டா இவன் 2010 ல இந்திரா காந்தி செத்துட்டாங்களானு கேக்கறதுனு யாரோ கேக்கறாங்கனு தெரியுது :))..இவ்ளோநாள் தெரியாம போச்சே? நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருப்பூர்தாங்க..என்னையும் திருப்பூர் வலைபதிவர்களில் ஒருவனா சேர்த்துக்கோங்க 🙂

பின்னூட்டமொன்றை இடுக