டுட்டூடூ… டுட்டூரு…

ஏதாவது புதிய பொருளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், அதன் பெயரைக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமென்று படித்திருக்கிறேன்.   பெயர் உச்சரிப்பிற்கு இலகுவாகவும், எல்லாத் தரப்பு மக்களும் புரியும்படி எளிமையாகவும் இருக்க வேண்டுமென்பது பால பாடம்.  யுனிநாருக்கு முன் சந்தைப்படுத்தப்பட்ட ’டொகோமோ’ என்ற அலைபேசி நிறுவனப் பெயர், இந்தியர்கள் கேள்விப்பட்டிராத, சொல்லக் கூட சிரமமான பெயரென்றே நினைத்தேன்.  பின் டொகோமோ என்பது டாடாவின் கூட்டுப்பங்கு நிறுவனத்தின் பெயரென்பதால் அப்பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களென்று அறிந்தேன்.

என் சகோதரரின் மகன், வீட்டிலிருக்கும் அலைபேசியை வைத்து இங்குமங்கும் சுற்றிக் கொண்டிருப்பான்.  ஒரு முறை அலைபேசியை எடுத்துக் கொண்டு, எதிர் வீட்டுக்குப் போய், அங்குள்ள அலைபேசியிலிருக்கும் பாடல்களை, தன் அலைபேசிக்கு மாற்றிக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறான்.  எதிர் வீட்டுக்காரர் அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளித்து அனுப்பி விட்டார்.

திரும்பவும், அவனது அப்பாவுடன் எதிர் வீட்டுக்குப் படையெடுப்பு.  இருவரும் பேசி விட்டு, நினைவட்டை இல்லாத அலைபேசியில் பாட்டு எதுவும் பதிய முடியாது சொல்கின்றனர்.  இவன் பாட்டு வேண்டுமென்று அடம் பிடிக்கிறான்.

கடைசியில், எதிர் வீட்டுக்காரர் என் சகோதரரிடம், இருக்கும் நினைவகத்தில் ஒரு பாட்டாவது மாற்றப் பார்க்கிறேன்,  Blue Toothஐ இயக்கி கொடுங்கள்! என்று சொல்லி முடிக்குமுன், பொடியன் Blue Tooth ஐ இயக்கி, இந்தாங்க! என்று கையில் கொடுத்திருக்கிறான்.  இருவரும் திகைத்துப் பின் நகைத்திருக்கின்றனர்.  அதை இயக்கும் முறை அது வரை என் சகோதரருக்கே தெரியாது.

சென்ற மாதம் ஊருக்குச் சென்றிருந்த போது, விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகளின் குரல்கள், படித்துக் கொண்டிருந்த என் கவனங்கலைத்தது.  புத்தகத்தை மூடிவிட்டு விளையாட்டைக் கவனிக்க ஆரம்பித்தேன்.  நான்கைந்து சிறுவர்கள் வட்டமாக அமர்ந்து, கையின் ஐந்து விரல்களையும் காட்டி, எதிராளியிடம் இது எத்தனை? என்று முதலில் கேட்டார்கள் – பதில் ஐந்து.  அடுத்து நடுவிரலும், ஆட்காட்டி விரலும் – இரண்டு.  அடுத்து ஆட்காட்டி விரல் மட்டும், பின் ஆட்காட்டி விரலை பாதியாக மடக்கி, இது எத்தனை? என்று கேட்க – அரை என்று சொல்லி முடித்ததும், பதில் சொன்ன குழந்தைக்கு அறை விழுந்தது.

இந்த விளையாட்டைக் கவனித்துக் கொண்டிருந்த நம் பொடியனிடமும் கேள்வி கேட்கப்பட்டது.  இரண்டு என்ற பதிலுக்குப் பின், ஆட்காட்டி விரல் காட்டப்பட்ட போது, ஏதோ நினைவாய்,  ‘டொகோமோ’ என்று பதில் சொல்லி விட்டு ஓடி விட்டான்.  இதற்குப் பிறகு,  என்ன கேள்வி கேட்பது? அவனை எப்படி அடிப்பது?  என்ற குழப்பத்துடன் மற்ற குழந்தைகள் விழித்துக் கொண்டிருந்தன.

டொகோமோ முதலில் பெயரை அனைவரின் நினைவிருத்தவும், உச்சரிக்கவும் செய்யும்படியான விளம்பரங்களை வெளியிட்டன.  இப்போது தான் சலுகைகள் குறித்த விளம்பரங்களை அதிகளவில் காண முடிகிறது.  இன்னும் பல சொற்களைத் தெளிவாய்க்கூட உச்சரிக்கத் தெரியாத / முடியாத இரண்டரை வயதுச் சிறுவன், டொகோமோ என்ற சொல்லை தெளிவாய் சொல்ல வைப்பதென்பதெல்லாம் விளம்பரங்கள் செய்யும் மாயம்.

51 thoughts on “டுட்டூடூ… டுட்டூரு…

  1. டொக்கோமோ – சொல்றதை விட ரொம்ப டெரராய் இருந்த விசயம் முதன்முதலில் வெளியான வித்தியாசமான DOCOMO வின் எழுத்து வடிவங்கள் – படிப்பதற்குள் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா கண்ணை கட்டிடுச்சு பாஸ்! – அப்புறம் ஒரு தீம் ம்யூசிக் வேறு எப்படா முடிப்பீங்கன்னு கேக்குற அளவுக்கு..!

    🙂

  2. மிக அருமையான கேம்பெயின்.. மற்றும் விளம்பரங்கள் வெயிலான். நிச்சயம் அதன் ட்யூனும், லோகோவும், பெயரும் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒன்றே..

  3. தலைவரே ட்ரெயின் விளம்பரம் பார்த்து நான் கடுப்பாகிய நாள் அதிகம். இங்க ஒவ்வொரு லோக்கல் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கும் டிவில இந்த விளம்பரத போட்டு போட்டு எங்களை ஓடவிட்ட நாள் அதிகம். வித்தியாசமா செய்யுறோம்ன்னு இவங்க பண்ற அலப்பறை தாங்கல.

  4. //சென்ஷி

    ஊர்ல டொகோமோதான் உபயோகிச்சேன்னு பெருமையா சொல்லிக்க முடியலை. காரணம் நெட்வொர்க் பிராப்ளம் //

    ஓஓஓஓஓ அப்புடியா! நான் கூட சரி அண்ணாச்சிக்கு ஒரே டிஸ்டர்பன்ஸா – போன் பிசியா – இருந்திருக்கும்ன்னு நினைச்சேன் அடக்கடவுளே நெட் ஒர்க் பிராபுளமா? – அடச்சே என் நினைப்புல ஒரு லோடு மண்ணை அள்ளிப்போட்டுப்புட்டீங்களே!

  5. சன்னியம் புடிச்ச டி வி காரவிங்க போடற சினிமா விளம்பரத்தவிடவா…

    என்னமோ போங்க தலைவரே விளம்பரங்களுக்கு எந்த வரைமுறையும் இல்லியாட்ட இருக்கு.

  6. இந்த காலத்து பசங்க ரொம்ப ஸ்மார்ட் சாரே.. நம்மள மாதிரி இல்லை.. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான குழந்தைத்தனமான மெட்டில் டொகொமோ விளம்பரம் வருகிறது.. டோ.. டொகொமோ..

  7. அட, நல்லா இருக்குதே இந்த விளம்பரம்.. (இந்த விளம்பரத்தை இப்போத்தான் முதல்முறையா பாக்கறேன்)

    உங்க வீட்டுக் குட்டி ரொம்பவே விவரம்.

    இந்த மாதிரி குழந்தைகளை/அவங்க நடவடிக்கைகளைப் பாக்கும்போது மனசுக்குள்ளே “அந்தக்காலத்துல..”ன்னு ஆரம்பிச்சு, கடைசில அடடா, நமக்கு வயசாயிடுச்சோ ன்னு தோணுது 🙂

    அப்புறம், உங்க பதிவுகளில், பொருத்தமான படங்களை தேடி எடுத்து இணைக்கறதுக்கே (இந்தப் பதிவுல, கை விரல்கள் படங்கள்) உங்களுக்கு ரொம்ப நேரம் ஆகியிருக்குமே?

    1. ”அந்தக்காலத்துல..” 🙂

      பொருத்தமான படங்களை தேடுவதற்கு அதிக நேரம் ஆவெதென்பது உண்மை தான் கதிர்! ஆனால், சில வலைக்கவிஞர்கள் வெளியிட்டிருக்கும் கவிதைக்கேற்ற படங்களைப் பார்த்து பொறாமைப்படுவதும் உண்டு.

  8. ஏன்னே புரியல இப்போ வர்ர குழந்தைகள் ரொம்ப வெவரமா இருக்காங்க.பயங்கர அறிவோவோட இருக்காங்க :-))

    ரொம்ப நல்ல விளம்பரம் அது

  9. ஏன்னே புரியல இப்போ வர்ர குழந்தைகள் ரொம்ப வெவரமா இருக்காங்க.பயங்கர அறிவோவோட இருக்காங்க//

    பெரியவங்க ஆன அவங்களும் நம்ம மாதிரிதான் :))

☼ வெயிலான் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி