பங்குனிப் பொங்கல்

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,

எங்க ஊர்ல திருவிழா.

ஊர்ல பங்குனிப் பொங்கல்.

ஊர்ல நோன்பி.

ஊர்ல கோயில் கொடை.

ஊர்ல கொடி ஏத்தியிருக்கு.

ஊர்ல பொங்கச் சாட்டியிருக்கு.

எல்லா ஊர்க்காரங்களுக்கும் புரியிற மாதிரி சொல்லியாச்சு.

எல்லாரும் வாங்க.  திருவிழாவை வேடிக்கை பார்த்துட்டு வரலாம்.

படங்களுக்கு நன்றி – VHND & MYVNR.

24 thoughts on “பங்குனிப் பொங்கல்

  1. என்ன‌ வெயிலான், இது நாங்க‌ள்லாம் ப‌டிச்ச‌ விருதுந‌க‌ர் ப‌த்ர‌காளி அம்ம‌ன் கோவில் மாதிரி இருக்கு. ஆகா, என்ன‌ அனுப‌வ‌ம், அந்த‌ பொருட்காட்சியும், அக்கினி ச‌ட்டி வ‌ல‌ம் வ‌ரும் அந்த‌ வீதிக‌ளும், குள‌த்தை சுற்றிய‌ ப‌ரோட்டா க‌டைக‌ளும், ப‌ரிட்சை நேர‌த்தில் வ‌ந்தாலும், க‌ல்லூரி விடுதியிலிருந்து, திரெளப‌தி சாலை (நீள‌ம் கார‌ண‌மான‌ கார‌ண‌ப்பெய‌ர்) ந‌டந்து க‌ட‌….ந்து அனுப‌வித்து பின் திரும்பும் போது பார்த்த‌ சில‌/ப‌ல‌ முக‌ங்க‌ளையும், நிக‌ழ்வுக‌ளையும் அசைபோட்ட‌ப‌டி, ப‌ழைய‌ப‌டி ப‌ரீட்சைக்கு ப‌டிக்க‌ தொட‌ங்கிய‌து எல்லாம் இப்போது நெஞ்சில் காட்சியாய்.

    அந்த‌ ப‌ர‌ந்த‌ முக‌ப்பு கோவிலை க‌ண்ட‌வுட‌ன், ஏதேதோ எண்ண‌ங்க‌ள் இதுவ‌ரை நான் ”ம‌றந்து விட்ட‌தாய் நினைத்த‌” (மாறுப‌ட்ட‌ கூற்று, ஆயினும் உண்மை).

    கொஞ்ச‌ம் கூச்ச‌த்துட‌ன்…

    ந‌ன்றி வெயிலான்.

    1. நீங்கள் பார்த்த அதே கோவில் தான் வாசன். மறக்காத நினைவுகளை நன்று நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். ஏன் கூச்சம்? நன்றாகத் தான் எழுதியிருக்கிறீர்கள்.

      நன்றி வாசன்!

  2. கண்ணுக்கு விருந்து.

    வெயிலும்,வேப்பங்கொலையும்,உருமிச்சத்தமும்,குதூகலமுமாக அல்லோலகல்லோலப்படும் விருதுநகர்ப்பொங்கல்.

    கண்ணுக்கு விருந்து.

☼ வெயிலான் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி